அரசின் வகைகள்

அரசின் வகைகள்

முடியாட்சி (monarchy)

முடியாட்சி என்பது, அரசின் ஒரு வடிவம் ஆகும். இதில், அதியுயர் அதிகாரம் முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோ ஒரு தனிப்பட்டவரிடம் இருக்கும். இவரே அரசின் தலைவராவார்.

அத்துடன் இவர் நாட்டு மக்களிலும் வேறான தனி உரிமைகளைக் கொண்டிருப்பார். இந்த அரசுத் தலைவர் மன்னர், அரசர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவார். முடியாட்சியில் மன்னருக்கான அதிகாரமானது தற்காலத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது மன்னருக்கு முழுமையான அதிகாரமற்று முற்றிலும் குறியீடாக (கிரீடம் பெற்ற குடியரசு), பகுதியளவு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட திகாரம் (அரசியலமைப்பு முடியாட்சி), முற்றிலும் சர்வாதிகாரம் (முழுமையான முடியாட்சி) என்று வேறுபடுகிறது. பாரம்பரியமாக மன்னர் இப்பதவியில் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அல்லது அதிலிருந்து விலகும் வரை வகிப்பார். அதன்பிறகு மரபுரிமையில் அடுத்த அரசர் பதவிக்கு வருவார்.   ஆனால் தேர்தலின் வழியாகக்கூட முடியாட்சிகளில் கூட மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாராண்மை மக்களாட்சி (Liberal democracy)

தாராண்மை மக்களாட்சி என்பது மக்களாட்சி முறையின் ஒரு வடிவம் ஆகும். 21-ஆம் நூற்றாண்டில் இவ்வகை மக்களாட்சி உலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தாராண்மை மக்களாட்சிக்கும், பொதுவுடமை மக்கள் குடியரசு அல்லது மக்கள் "மக்களாட்சி" போன்ற அரசாட்சி முறை வடிவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

நேரடி மக்களாட்சி, பங்கேற்பு மக்களாட்சி போன்ற வடிவங்களில் இருந்தும் இது பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றது. தாராண்மை மக்களாட்சி, பல்வேறு அரசியலமைப்பு வடிவங்களில் அமையக்கூடும். இது, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகளைப்போல் ஒரு குடியரசு அமைப்பில் அமையலாம். அல்லது ஐக்கிய ராஜ்ஜியம், எசுப்பெயின் போன்ற நாடுகளில் உள்ளது போல் அரசியல்சட்ட முடியாட்சி வடிவிலும் அமையலாம். இது, ஜனாதிபதி முறை, நாடாளுமன்ற முறை அல்லது இரண்டும் கலந்த முறை போன்ற அரசு முறைகளின் கீழும் அமைய முடியும்.

நேரடி மக்களாட்சி (Direct democracy)

நேரடி மக்களாட்சி என்பது, ஒரு வகை மக்களாட்சி முறையும், குடியியல் கோட்பாடும் ஆகும். இம்முறையில் இறைமை பங்குபற்ற விரும்பும் எல்லா மக்களையும் கொண்ட ஒரு அவையிடம் அளிக்கப்பட்டிருக்கும். இம்முறை பயன்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து, இந்த அவை தீர்மானங்களை நிறைவேற்றுதல், சட்டங்களை ஆக்கல், அதிகாரிகளைத் தேர்வு செய்தல் அல்லது நீக்குதல், விசாரணை நடத்துதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

நேரடி மக்களாட்சி, சார்பாண்மை மக்களாட்சியில் இருந்து வேறுபட்டது. சார்பாண்மை மக்களாட்சியில் இறையாண்மை, மக்களால் தேர்தல் மூலம் சார்பாளர்களாகத் தெரிவு செய்யப்படும் ஒரு குழுவினரைக் கொண்ட அவையிடம் இருக்கும்.

காமன்வெல்த் (Commonwealth)

காமன்வெல்த்  ஓர் பொதுவான நல்நோக்கம் கொண்டு நிறுவப்படும் அரசியல் சமூகத்திற்கான வழமையான ஆங்கிலச் சொல்லாகும். இதனை பொதுநலவாயம் எனத் தமிழில் குறிப்பிடுகின்றோம். பல்லாண்டுகளாக இது குடியரசியலுக்கு இணையாக எடுத்தாளப்படுகின்றது.

ஆங்கிலேய பெயர்ச்சொல்லான "காமன்வெல்த்" 15-ஆம் நூற்றாண்டில் இருந்தே "பொதுநலம், பொது நன்மை அல்லது பொது ஆகுபயன்" என்ற பொருளிலே விளங்கி வந்துள்ளது.  இது லத்தீனச் சொல்லான ரெஸ் பப்ளிகா என்பதன் மொழிபெயர்ப்பாக வந்துள்ளது. 17-ஆவது நூற்றாண்டில் "காமன்வெல்த்" துவக்கத்திலிருந்த "பொதுநலம்" அல்லது "பொதுச் செல்வம்" என்ற பொருளிலிருந்து "பொது மக்களிடம் அரசாண்மை வழங்கப்பட்ட நாடு; குடியரசு அல்லது மக்களாட்சி நாடு" என்பதைக் குறிக்குமாறு விரிவானது.

தலைவர் ஆளும் அரசு முறைமை (Presidential System)

தலைவர் ஆளும் அரசு முறைமை என்பது அரசுத் தலைவரே நாட்டின் தலைவராகவும், சட்டமியற்றும் கிளையில் இருந்து மாறுபட்ட ஆட்சியக கிளையின் முன்நிலையாளராகவும் உள்ள அரசு முறையாகும். ஒன்றிணைந்த அமெரிக்க நாடுகள், தலைவர் ஆளும் அரசு முறைமையைக் கொண்ட ஒரு தேசமாகும். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் பரவலாக "தலைவர்" எனும் சுட்டுப் பெயரைக் கொண்டவரும் சட்டமியற்றகத்தின் மீது பொறுப்பற்றவரும், சாதாரன சூழ்நிலையில் பதவியில் இருந்து நீக்க முடியாதவரும் ஆவார். மிதமிஞ்சியச் சூழலில், குற்றம் சாட்டுதலின் வாயிலாக ஆட்சியாளரை நீக்கும் அதிகாரத்தை சட்டமியற்றகம் பெற்றிருக்கலாம். இவ்வாறு ஆட்சியாளரைப் நீக்குவது மிகவும் அரிது என்பதால், சாதாரண நிலையில் சட்டமியற்றகத்தால் நீக்க முடியாது என்றே கூறலாம்.

பாராளுமன்ற முறை ( Parliamentary System)

பிரதமர் (Prime minister) என்பவர் நாடு ஒன்றின் அமைச்சரவையின் மிக மூத்த அமைச்சர் ஆவார். பெரும்பாலும் தலைமை அமைச்சரே அமைச்சரவையின் உறுப்பினர்களை தேர்வு செய்வதும் நீக்குவதுமான பணிகளைச் செய்வார்.

மேலும் அரசில் உறுப்பினர்களுக்கான பதவிகளை வகுப்பதும் பிரதமரே ஆகும். பெரும்பாலும் தலைமை அமைச்சர் அமைச்சரவைத் தலைவராக இருப்பார். ஒருசில அமைப்புகளில் தலைமை அமைச்சர் என்பவர் உள்நாட்டு சேவைகள் மற்றும் நாட்டின் தலைவரின் கட்டளைகளை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாவார்.

வெஸ்ட்மினிஸ்டர் அமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புகளில் தலைமை அமைச்சர் அரசின் தலைவராவார். அவருக்கே அனைத்து செயல்பாடுகளையும் செயலாக்கும் அதிகாரம் உள்ளது. இத்தகைய நாடாளுமன்ற அமைப்புகளில் நாட்டின் தலைவர் (குடியரசுத்தலைவர்) பெரும்பாலும் பெயரளவிற்கான அதிகாரங்களைக் கொண்டிருக்கிறார். ஒரு சில சிறப்பு அதிகாரங்களை தவிர நாட்டின் தலைவருக்கு எத்தகைய செயலாக்குதல் அதிகாரமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com