மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-6: மத ஆதிக்கம் பெற்ற ராஜ்யங்கள்

மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-6: மத ஆதிக்கம் பெற்ற ராஜ்யங்கள்

மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-6 மத ஆதிக்கம் பெற்ற ராஜ்யங்கள், ராணுவத்தின் வகைகளும், கூலிக்கு  உழைக்கும் போர்வீர்களும்


மத ஆதிக்கம் பெற்ற ராஜ்யங்கள்

இப்பொழுது மதகுருக்களின் அதிகாரத்திலுள்ள ராஜ்யங்களைக் குறித்துக் கூறுவதுதான் பாக்கி இருக்கிறது. இவ்வித ராஜ்யங்களை ஜெயிக்கும் வரையில்தான் கஷ்டம்.  திறமை அல்லது அதிர்ஷ்டத்தின் மூலம் அவை கிடைக்கின்றன. பிற்பாடு அவ்விரண்டும் இல்லாமலே அவை நடத்தப்பெறுகின்றன.  ஏனெனில் புராதமான மத அனுஷ்டானங்களால் அவை காக்கப்படுகின்றன.  அந்த  அனுஷ்டானங்கள் வலுவானவையாகையால் அரசன் எப்படி நடந்து கொண்டாலும் அவனுடைய அந்தஸ்தைப் பத்திரமாய்க் காக்கக்கூடியவையாக இருக்கின்றன. இவ்வரசர்களுக்கு மட்டுமே தற்காப்புச் செய்யும் பொறுப்பின்றி ராஜ்யங்கள் இருக்கின்றன.  அரசாள வேண்டிய  சங்கடம் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள்.

இவர்களுடைய ராஜ்யங்கள் பாதுகாக்கப்படுகிறதில்லை ஆகையால் ஒருவரும் அவைகளை அபகரிப்பதில்லை. மக்கள் ஆளப்படுகிறதில்லையாகையால் ஆளுகையை வெறுப்பதுமில்லை. அரசனிடமிருந்து தாங்கள் பிரிந்து போகக் கூடுமென்கிற எண்ணமே அவர்களுக்கு உதிப்பதில்லை. பிரிந்து போகத்தக்க சாமர்த்தியமும் அவர்களுக்குக் கிடையாது. ஆகையால் இம்மாதிரியான ராஜ்யங்கள் தான் பாத்திரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கின்றன. ஆனால் அவை மனிதனுடைய மனதுக்கெட்டாத உயர்ந்த சக்தியால் தாங்கப்படுவதால் அவற்றைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. கடவுளால் மேன்மைப்படுத்தப் பெற்று அவரால் காப்பாற்றப்படும் நாடுகளாகையால் அவற்றைக் குறித்து விவாதிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், மூடத்தனமுமாகும்.  இருந்தாலும், ஆறாவது  அலெக்ஸாண்டருக்கு முன்னால் பலசாலிகளான மன்னர்கள் மட்டுமல்ல, சாமான்யமான பிரபுக்கள் கூடச் சர்ச்சின் லௌகீக அந்தஸ்தைத் துச்சமென்று மதித்து வந்திருக்கையில் தற்சமயம் சர்ச் வெனிஷியர்களுக்குப் பலத்த நாசத்தை விளைவிக்கவும் பிரான்ஸ் அரசனை இத்தாலியை விட்டே துரத்தி அவனை அச்சத்தில் வைக்கவும் வல்ல லௌகீக அதிகரத்தை எவ்வாறு பெற்றது? இதன் காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் அதனை இவ்விடம் நினைவூட்டுவது மிகையாகாது.

பிரான்ஸ் மன்னன் சார்ல்ஸ் இத்தாலிக்கு வருவதற்கு முன்னர் இந்நாட்டில் போப், வெனிஷியர்கள், நேபிள்ஸ் அரசன், மிலன் டியூக் பிளாரன்டின்கள், முதலியோர் அதிகாரம் வகித்து வந்தனர். இவர்கள் இரண்டு முக்கியமான கவலைகளைப்பட வேண்டியிருந்தது. அயலானொருவனும் தன் படை பலத்தால் இத்தாலிக்குள் வந்துவிடக் கூடாதென்பது ஒன்று. இன்னொன்று ஏற்கனவே இருக்கும் அரசாங்கங்கள் தங்கள் ராஜ்யத்தை விஸ்தரித்துக்கொள்ள இடந்தரலாகாதென்பது முக்கியமாகப் போப்பையும் வெனிஷியர்களையும் கண்காணித்துக் கொள்ள வேண்டியிருந்தது. வெனிஷியர்களை முன் செல்லவிடாமல் அடிப்பதற்கு பெராராவின் தற்காப்பின் போது செய்த மாதிரி மற்ற எல்லோரும் ஒன்று சேர வேண்டுவது அவசியமாயிற்று. போப்பை அடக்குவதற்கு ரோமப் பிரபுக்களை உபயோகித்துக் கொண்டனர். இப் பிரபுக்களின் இரண்டு கட்சிகளிருந்தன. ஒன்று ஆர்ஸினிப் பிரபுவின் தலைமையிலும் மற்றொன்று கொலோனாப் பிரபுவின் தலைமையிலும் இருந்தன.
 

போப் ஸிக்ஸ்டஸ்

இவ்விரண்டு கட்சிகளும் போப்பின் கண்ணெதிரிலேயே அவனை லட்சியம் செய்யாமல் தங்களுக்குள் சதா சண்டையிட்டுக் கொண்டும் ஆயுதப் பிரயோகம் செய்து கொண்டும் இருந்து போப்பின் ஸ்தானத்துக்குப் பலக்குறைவையும் சஞ்சலத்தையும் விளைவித்தன. எப்போதாவது ஸிக்ஸ்டஸ் (Sixtus) போன்ற திடமுள்ள போப்கள் தோன்றினாலும் அவனுடைய திறமையும் அதிர்ஷ்டமும் இத்தீமைகளினின்றும் அவர்களை விடுவிக்கத்தக்க சக்திவாய்ந்தவையாய் இல்லை.  போப்களின் குறுகிய ஆயுட்காலம்  இதற்கு காரணமாயிருந்தது. பொதுவாக ஒரு போப் தன் பதவியில் வாழும் பத்து வருஷங்களில் இக்கட்சிகளில் ஒன்றைக் கூட அடக்க முடிகிறதில்லை.  ஒரு போப் அநேகமாகக் கொலோனாவின் கட்சியை அடக்கிவிட்டானென்று வைத்துக் கொள்வோம். அவனுக்குப் பின்னால் வரும் இன்னொரு போப் ஆர்ஸினிக்கு விரோதமாயிருப்பான். ஆதனால் பொலோனா கட்சி மறுபடியும் துளிர்த்துக் கொள்ளும். அதை முளையுடன் கிள்ளுவதற்குப் புதிய போப்புக்குக் காலம் போதாது.

இக்காரணத்தினால் போப்பின் லௌகீக சக்திக்கு இத்தாலியில் மதிப்புக் குறைவாக இருந்தது.  இதன் பிறகுதான் ஆறாவது அலெக்ஸாண்டர் வந்தான். இதுகாறும் பட்டத்துக்கு வந்த போப்மார்களின் பணம், பலம். இவற்றைக் கொண்டு எப்படிக் காரியத்தைச் சாதிப்பது என்பதை இவனே நிதர்சனமாகக் காட்டினான். டீயூக் வாலென்டினைக் கருவியாய்க் கொண்டு பிரஞ்சுப் படையெடுப்பையும் பயன்படுத்திக் கொண்டு,  அவன் செய்தவற்றையெல்லாம் டியூக்கின் வரலாற்றைப் பற்றிக் கூறியதில் விவரித்திருக்கிறேன்.  அவனுடைய நோக்கம் சர்ச்சை மேன்மைப்படுத்துவதல்ல. டியூக்கைச் சிறப்புறச் செய்வதுதான்  என்றாலும் அவனுடைய செயல்களால் சர்ச்சின் பிரபாவந்தான் ஒங்கியது. டீயூக் இறந்தபின், சர்ச்தான் அலெக்ஸாண்டருடைய உழைப்பின் நற்பயனைப் பெற்றது. பிற்பாடு வந்த ஜீலியஸ் சர்ச்சை அதிகாரமிக்கதாய்க் கண்டான்.  ரோமானா முழுவதும் அதன் ஆதினத்திலிருந்தது.  ரோமப் பிரபுக்கள் அடக்கப்பட்டு விட்டனர்.  

அலெக்ஸாண்டருடைய கடுமையான நடவடிக்கைகளால் கட்சி பேதங்கள் நசித்துப் போயின, அலெக்ஸாண்டர் காலத்துக்கு முன்னால் அனுசரிக்கப்பட்டிராத வழிகளில் பணம் சேர்க்கும் விதமும் தெரிந்தது. ஜுலியஸ் இவ்வழிகளைப் பின்பற்றியது மட்டுமல்ல, அவற்றை இன்னும் அதிகரித்துக் கொண்டே போனான். பொலோனாவைக் கைப்பற்றவும் வெனிஷியர்களை அடக்கவும், பிரான்ஸை இத்தாலியை விட்டுப் புறமுதுகிட்டோடச் செய்யவும் தீர்மானித்து, அவை அனைத்தையும் நிறைவேற்றினான். அவன் செய்த ஒவ்வொரு காரியமும் சர்ச்சின் பெருமைக்காகவே செய்தானேயன்றித் தனிமனிதனின் மேன்மைக்காக அல்லவாதலின் அவன் செயல்கள் புகழுக்குரியவையாகின்றன.  

ஆர்ஸினியையும் கொலோனாவையும் மறுபடியும் கிளம்பாமல் பார்த்துக் கொண்டான். அக்கட்சித் தலைவர்களில் சிலர் நிலைமையை மாற்றும் சக்தியுடையவர்களாயிருந்த போதிலும், இரண்டு விஷங்கள் அவர்களைக் கட்டுக்குள் வைத்தன. ஒன்று, சர்ச்சின் வலிமையைக் கண்டு பயம். இன்னொன்று கலவரம் உண்டாக்குவதற்கு அவர்களுக்குள் கார்டினல்கள் இல்லாமை, கார்டினல்களே குழப்பத்துக்குக் காரணமாகி இருந்தனர். கார்டினல்கள் இருக்குமிடங்களில் அமைதி என்பதே கிடையாது. அவர்கள் ரோமிலும் வெளியிடங்களிலும் கட்சிகளைக் கிளறிவிட்டுக் கொண்டேயிருப்பார்கள். கார்டினல்களுக்குப் பரிந்து காப்பாற்றுவது பிரபுக்களுக்கு நிர்ப்பந்தமாய்ப் போகும். இவ்வாறு இம்மத குருக்களின் பேராசையால் பிரபுக்களிடையில் மனஸ்தாபமும் கலகமும் நேரிடுகின்றன. தூய்மை தங்கிய போப் பத்தாவது லியோ தற்சமயம் தன் ஸ்தானம் மிகவும் சக்தியுள்ளதாயிருப்பதைக் காண்கிறார். இந்தப் போப்கள் எல்லாரும் ஆயுத பலத்தினால், சர்ச்சைச் சிறப்புறச் செய்திருப்பதைக் கண்டு, அவர், தன் நற்குணத்தினாலும் எல்லையற்ற மற்ற உத்தமமான தன்மைகளாலும்,  சர்ச்சை மகிமையுள்ளதாயும் பக்தி சிரத்தையுடன் போற்றுதற்குரியதாகவும் செய்வார் என்று நம்பப்படுகிறது.

ராணுவத்தின் வகைகளும், கூலிக்கு  உழைக்கும் போர்வீர்களும்

ராஜ்யங்களில் குணங்களைப் பற்றி விவரித்து அவற்றின் வெற்றி தோல்விகளைப் பற்றியும் ஒரு விதமாக கூறப்பட்டுவிட்டது. அந்த ராஜ்யங்களைப் பலர் எவ்வித முறைகளால் ஜெயித்தார்கள் என்பதையும் எடுத்துக் காண்பித்தாயிற்று. அவற்றில் உபயோகிக்கக் கூடிய தற்காப்பு, ஆக்கரமிப்பு, ஆகிய இருவகை சாதனங்களையும் பற்றி பொதுவாக கூற வேண்டியிருக்கிறது. ஒரு ராஜாவுக்கு அஸ்திவாரம் பலமாயிருக்க வேண்டுமென்பதையும், இல்லாவிட்டால் அழிவு நிச்சயமென்பதையும் கண்டோம்.  ராஜ்யங்கள் புதியவையானாலும், புராதனமானவையானாலும் கலப்பானவையானாலும் எவையாயினும் சரியே,  அவற்றிற்கு முக்கியமான அஸ்திவாரம் நல்ல சட்டங்களும் நல்ல படை பலமுந்தான். நல்ல படை பலமில்லாவிட்டால், நல்ல சட்டங்கள் இருக்க முடியாது. நல்ல ஆயுதபலமிருக்குமிடத்தில் நல்ல சட்டங்கள் இருந்தே தீர வேண்டுமாகையால், இங்கே சட்டத்தைப் பற்றிக் கூறாமல் ஆயுதபலத்தைக் குறித்தே பேசுவோம்.

ஒரு அரசன் தன் பாதுகாப்பிற்காக உபயோகிக்கும் படை தன் சொந்தமானது, பிறரிடமிருந்து உதவியாகப் பெற்றது, பணத்திற்கு ஆசைப்பட்டு ஊழியம் செய்யும் கூலிப்பட்டாளம் அல்லது இம்மூன்று வகைகளும் கலந்ததாக இருக்கும். கூலிக்காகச் சேவை செய்யும் சேனையும், உதவிக்குப் பெற்ற படைகளும் உபயோகமற்றவையும்  அபாயமானவையுமாகும். கூலிக்கு வேலை செய்யும் போர் வீரர்களை நம்புகிறவன். தன் பதவியை நிலையென்று நினைத்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் ஒற்றுமையில்லாதவர்கள். பேராசைக்காரர்கள், ஒரு ஒழுங்கு இல்லாதவர்கள், நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாதவர்கள், சிநேகிதர்களிடம் துணிச்சலும் பகைவரிடம் கோழைத்தனமும் காண்பிப்பவர்கள்,  கடவுளிடம் பயமும் மனிதர்களிடம் விசுவாசமும் அற்றவர்கள்.  எதிரிகளுடைய ஆக்கிரமிப்பு ஒத்திப்போகும் வரையில் அரசனுடைய வீழ்ச்சி தள்ளிப் போகும்.  அரசன் சமாதன காலத்தில் கூலி வீரர்களாலும்,  யுத்த சமயத்தில் எதிரிகளாலும் கொள்கையிடப் படுவான்.  குhரணம் என்ன வென்றால்,  ஏதோ சிறு சம்பளம் பெறுவதைத் தவிரக் கூலி வீரர்களுக்கு யுத்தத்தில் Nவுறொரு அக்கரையுமில்லை.  அந்தச் சம்பளம் எஜமானனுக்காக உயிரைக் கொடுக்கும்படி செய்யப் போதுமானதல்ல.  யுத்தம் வராதிருக்குமட்டும் அவர்கள் அரசனிடம் வேலை செய்ய மிகவும் சம்மதமாயிருப்பார்கள்.  யுத்தம் வந்தால் அரசனை நிராதரவாய் விட்டு விட்டு ஒடிப்போய் விடுவார்கள்.  இதை நிரூபிப்பது கஷ்டமில்லை.  இத்தாலி தற்சமயம் இருக்கும் நிலைமைக்குப் பல வருஷங்களாகக் கூலிக்கு மட்டுமே உழைக்கும் போர்வீரர்களை நம்பியிருந்ததுதான் காரணம்.  இத்தகைய சைனியங்களின் உதவியால் சிலர் அதிகாரத்துக்கு வந்தார்களென்பது வாஸ்தவமே.  ஆனால் அந்தச் சேனைகள்  தம் போன்ற மற்ற கூலிப் பட்டாளங்களுடன் போர் புரிந்த போது தைரியத்தைக் காண்பித்தார்களே தவிர,  அன்னியர் பிரவேசித்தவுடன் அவர்கள் கவைக்குதவாதவர்கள் என்பது தெரிந்துவிட்டது.  இவ்வாறு தான் பிரஞ்சு அரசன் சார்லஸ் இத்தாலியை ஒரு சிறு தொந்தரவுமின்றி ஜயிக்கவிட்டு விட்டனர்.  இது இத்தாலியர் செய்த பாவத்தால் நேர்ந்ததென்று சிலர் சொல்கிறனர்.  உண்மை தான்,  ஆனால் அவர்கள் நினைக்கிற பாவமன்று,  நான் எடுத்துக் கூறிய பாவங்கள் தாம் காரணம். அது அரசர்கள் செய்த பாவமாகையால் அவர்களும் தண்டனையை அனுபவித்தார்கள்.

இந்தச் சைனியத்தின் குற்றம் மற்றும் குறைகளைப் பற்றி இன்னும் விளக்கிக் கூறுகிறேன். கூலிப்படைகளின் தலைவர்கள் மிகவும் கெட்டிக்காரர்களாகவும் இருப்பார்கள், திறமை இல்லாமலும் இருப்பார்கள். கெட்டிக்காரர்களாயிருந்தால் அவர்களை நம்ப முடியாது. அவர்கள் தங்கள் எஜமானனை அடக்கிவிட்டோ அல்லது எஜமானனுடைய எண்ணத்துக்கு விரோதமாகப் பிறரை அடக்கியோ தாங்கள் முன்னுக்கு வரப்பார்ப்பார்கள். சாமர்த்தியமற்றவர்களாக இருந்தால், அவர்களால் அரசனுக்கு நஷ்டம் உண்டாகும். “படை பலமுள்ளவரும் அப்படித்தான் செய்வார்கள், அது கூலிப்பட்டாளமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி” என்று வாதிப்பவர்களுக்குப் பதில் என்ன என்றால், சைனியங்கள் அரசனையும், குடியாசையோ சேர்ந்தவையாக இருப்பதால், அரசன் தானே நேரில் சென்று சேனைக்கு தலைமை வகிக்க வேண்டும்.  குடியரசு, தன் மனிதர்களை அனுப்ப வேண்டும்.  அவ்வாறு சென்றவர்கள் தகுதியற்றவர்கள் என்று தெரிந்தால் அவர்களை மாற்ற வேண்டும்.  தகுதி உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் எல்லை மீறாத வகையில் சட்ட வழியில் பார்த்துக் கொள்ள வேண்டும். அனுபவத்தின்படி பார்க்கப் போனால் முடியரசுகளும், ராணுவபலம் மிகுந்த குடியரசுகளும் தான் மிகவும் விருத்தியை அடைகின்றன. கூலிப்படைகளால் நஷ்டத்தைத் தவிர வேறொன்றும் கிடையாது. ராணுவ பலமுள்ள குடியரசு தன் குடிமக்களில் ஒருவருடைய ஆட்சிக்கு எளிதில் வசப்படுகிறதில்லை. பிறநாட்டுப் பட்டாளங்களின் உதவியைக் கோரும் குடியரசு எளிதில்  வணங்கி விடுகிறது.
 

எபாமினான்டஸ்
    

ரோமும் ஸ்பார்த்தாவும் பல நூற்றாண்டுகள் நல்ல பலத்துடன் சுதந்திரமாக இருந்தன. ஸ்விஸ்கள் (Swiss)  படை பலமும் ஸ்வாதீனம் உடையவர்கள். பழைய காலத்தில் கூலி சைன்யத்திற்கு ஒரு உதாரணமாகக் கர்த்தஜினியாப்கள் சங்கதி இருக்கிறது. ரோமர்களுடன் முதல் யுத்தம் முடிந்ததும், தங்களுடைய மனிதர்கள் தலைவர்களாயிருக்கும்போதே கார்த்தஜினியர்கள் கூலி வீரர்களால் துன்புறுத்தப்பட்டனர். எபாமினான்டஸ் (Epaminondas) இறந்த பிறகு மாஸிடோன் நாட்டுப் பிலிப்பை (Philip of macedon) தீபர்கள் Thebans() தங்கள் பட்டாளத்துக்குத் தலைவனாக்கினார்கள். வெற்றிகிட்டியவுடன் பிலிப் தீபர்களுடைய சுதந்திரத்தைப் பறித்தான். டியூக் பிலிப்பின் மரணத்துக்குப் பிறகு மிலன் வாசிகள் வெனிஷியர்களை எதிர்ப்பதற்காக பிரதன்ஸிஸ்கோ ஸ்போர்ஸாவைக் கூலிக்கு அமர்த்திக் கொண்டார்கள். அவன் காரவாக்கியோவில் எதிரியை வென்றதும், பகைவருடன் சேர்ந்து கொண்டு, தன்னைக் கூலிக்கு அமர்த்திக் கொண்டார்கள். அவன் காரவாக்கியோவில் (Caravaggio) எதிரியை வென்றதும், பகைவருடன் சேர்த்து கொண்டு, தன்னைக் கூலிக்கு அமர்சத்திக் கொண்ட மிலன் வாசிகளுக்கே தீங்கிழைத்தான். இந்த ஸ்போர்ஸாவின் தந்தை நேபிள்ஸ் ராணியிடம் ஒரு போர்வீரனாயிருந்தவன், திடீரென்று அவளைப் படைபலமின்றித் தவிக்க விட்டு விட்டுப் போய்விட்டான்.  

ஜியோவானா (Giovanna) ராணி தன் ராஜ்யத்தை இழக்காமலிருப்பதற்காக அரகான் (Aragon) அரசனிடம் அடைக்கலம் புகவேண்டியதாற்று. வெனிஷியர்களும் பிளாரனடின்களும் முன்னாட்களில் இத்தகைய வீரர்களைக் கொண்டு ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டார்களென்றும் அச்சேனைகளின் தலைவர்கள் தாங்களே அரசர்களாய்விட வேண்டுமென்று பார்க்காமல், இவர்களையே ஆதரித்தார்கள் என்றும்  வாதிப் போருக்கு நான் கூறும் பதில்,  பிளாரன்டின்களுக்கு இவ்விஷயத்தின் சந்தப்பம் அனுகூலமாயிருந்ததென்பது தான்.  அவர்கள் அஞ்சியிருக்கக் கூடிய சில தலைவர்கள் ஜெயிக்கவில்லை.  சிலருக்கு எதரிப்பு ஏற்பட்டது.  மற்றவர்களுடைய நாட்டம் வேறிடங்களில் வழுந்து விட்டது.  ஜெயமடையாதவர்களிலொருவன்  கேப்டன் ஸர் ஜான் ஹாக்வுட் (Sir John hawkwood) என்பவன்.  அவன்  வெற்றி பெறாததால்,  அவனுடைய விசுவாசத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது.  ஆனால் அவன் ஜயித்திருந்தால் பிளாரன்டின்களை ஆக்கவும் அழிக்கவும் கூடிய சக்தியைப் பெற்றிருந்திருப்பானென்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். ஸ்போர்ஸாவுக்கு எப்போதும் ப்ராக்செஸ்கி (Bracceschi) வம்சத்தார் விரோதிகளாகையால் இருதரத்தாரும் பரஸ்பரம் அடங்கியிருக்க வேண்டியவர்களாயிருந்தார்கள்.  பிரான்ஸிஸ்கோலொம்பார்டியில் ஆசை வைத்தான்.  பிராக்ஸியோ (Braccio) சர்ச்சையும் நேபிள்ளைஸயும் எதிர்ப்பதில் முனைந்தான்.
    

கொஞ்ச காலத்திற்குமுன் நடந்ததென்னவென்று பார்ப்போம்.  பிளாரன்டின்கள் பாலோலிடலியைத் தங்கள் கேப்டனாக நியமித்தார்கள்.  அவன் சாதாரண  நிலைமையிலிருந்து மிகப் பெரிய ஸ்திதிக்கு வந்த புத்திமான்.  அவன் பைஸா நகரத்தைப் பிடித்திருக்கும் பட்சத்தில்,  அவன் நட்பை வளர்க்க வேண்டியது பிளாரன்டின்களுக்கு அவசியமாக இருந்திருக்கும்.  அவன் அவர்களுடைய விரோதிகளின் பட்சத்திலிருந்தால் அவனை எதிர்க்க முடியாமல் போயிருக்கும்.  தங்கள் பக்கம் வைத்துக் கொணடிருந்தால்,  தாங்கள்  அவனுக்குப் பணிந்து போகவேண்டியிருந்திருக்கும். வெனிஷியர்களோவெனில், தங்கள் சொந்த சேனைகளுடைய உதவியுடன் போர் புரிந்தபோது,  உறுதியுடன்  மகத்தான் முன்னேற்றத்தை அடைந்ததார்கள்.  அது அவர்கள் தரைச் சண்டை புரியமுன் நடந்தது. தரைச் சண்டைக்கு ஆரம்பித்த பின்னர்,  அக்குணத்தைக் கைவிட்டு இத்தாலிய வழக்கத்தை,  அதாவது கூலிப்படைகளை உபயோகிப்பதை மேற்கொண்டனர்.  அவர்களுக்கு வெற்றி கிடைத்து வரும்போது,  கேப்டன்களிடம் அதிகமாகப் பயப்பட வேண்டியிருக்கவில்லை.  ஏனெனில் அவர்களுடைய ராஜ்யம் விஸ்தாரமாகவில்லை. ஆனால் கார் மக்னோலா (Carmagnola) வின் தலைமையில் நடந்த மாதிரி ராஜ்யம் பெரிதாகும்போது,  அவர்களுக்கு தங்கள் தவறு விளங்கிற்று.  மிலன் சிற்றரசனைத் தோற்கடித்தபின் கார்மக்னோலாவின் சக்தி அதிகரித்திருப்பதையும் அறிந்து இனி அவனால் அதிக சிரத்தை காண்பிக்காமலிருப்பதையும் அறிந்து இனி அவனால் அதிக ஒத்தாசைக்கு இடமில்லையென்று வெனிஷியர்கள் நினைத்தனர்.  அவனை வேலையிலிருந்து  நீக்கவும் கூட வில்லை.  அவனைப் போகச் சொல்லிவிட்டால்,  ஏற்கனவே கைவசமிருப்பதையும் இழக்க வேண்டி வருமோ என்று பயமாக இருந்தது,  ஆகவே அவனைக் கொல்வித்தனர்.  பிறகு பார்டலோமியோ டா  பெர்காமோ (Bartlommeo da Bergamo) ராபர்ட்டோ டா பெர்காமோ (Roberts da San Severono) கௌன்ட்டிபிடிக்லியானோ (Count di Pitigliano) முதலிய சிலர் கேப்டன்களாயினர்.  அவர்களால்  லாபமில்லா விட்டாலும் நஷ்டமாவதில்லாதிருந்தால் போதும் போலிருந்தது.  அவ்வாறே பிறகு வாய்லாவில்(Valia) எட்டு நூற்றாண்டுகளாக உழைத்து அரிதிற் பெற்றவற்றை ஒரே நாளில் இழந்தனர்.  இம்மாதிரி சைனியத்தால் கிடைக்கும் வெற்றிகள் தாமதமாயும் அற்பமானவையாயும் இருக்கும்.  நஷ்டமோ திடீரென்று அபாரமாக ஏற்படும். இந்த உதாரணங்கள் பல ஆண்டுகளாகக் கூலிப் படைகளை உபயோகிக்கும் இத்தாலியிலிருந்து எடுக்கப் பட்டவையாகையால்,  இவற்றைக் குறித்து இன்னும் விவரமாய்க் கூறுகிறேன்.  அப்படைகளின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் பற்றித் தெரிந்து கொண்டால் அதற்கு மாற்றுச் செய்வது எளிதாயிருக்கும்.

பிற்காலங்களில் இத்தாலியில் சாம்ராஜ்யம் மறுக்கப்பட்டும்,  போப்பின் சக்தி விருத்தியாகியும் வர ஆரம்பித்தவுடன்,  இத்தாலி பல ராஜ்யங்களாகப் பிரிந்து போயிற்று. சக்கரவர்த்தியின் ஆதரவுடன் தங்களை அடக்கியாளும் பிரபுக்களை எதிர்த்துப் பல நகரங்கள் கிளம்பின.  சர்ச்  தனது லௌகீக பலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக இதற்கு ஊக்கமளித்தது.  இன்னும் பல பட்டணங்களில் நகரமாந்தர்களிலொருவனே ராஜாவாகிவிட்டான். இவ்வாறு இத்தாலி ஏறக்குறைய முற்றிலும் சர்ச்சின் கையிலும், இன்னும் சில குடியரசுகளினிடமுமே சிக்கிக் கொண்டது. மத அன்னிர்களைப் பணம் கொடுத்துத் தம்மிடம் போர்வீர்களாக அமர்த்திக் கொண்டனர். இவ்வழக்கத்தை முதல் முதல் ஆரம்பித்தவன் ரோமானாவைச் சேர்ந்த  ஆல்பெரிகோ டாகேமோ (Alberigo da Como) என்பவன்.  தம் காலத்தில் இத்தாலியில் இணையற்ற அதகாரத்துடன் களிற் சிலர்.  இவர்களுக்குக்கப்புறம் இதுவரை எத்தனையோ போ இத்தாலிய சேனைகளில் தலைமை வகித்து வந்திருக்கின்றர்.  அவர்கள்  காட்டிய வீரத்தின் பயனாய் இத்தாலி சார்லஸ் அரசனால் நசுகக்கப்பட்டும், லூயி அரசனால் கொள்ளையிடப்பட்டும் பேராண்டோவால்(ferrando) கொடுங்கோன்மை செலுத்தப்பட்டும், ஸ்விஸ் ஜாதியினரால் அவமதிக்கப்பட்டும்,  போனதைத்  தவிர வேறு லாபத்தைக் காணோம்.  அந்த  வீரர்களுடைய ஏற்பாடு என்னவென்றால்  காலாட்படையை அசட்டை செய்து விட்டுத் தங்கள் மதிப்பை உயர்த்திக் கொண்டார்கள்:  அவர்களுக்குச் சொந்த தேசம் என்பதில்லாமல் தங்கள்  சமபாத்தியத்திலேயே பிழைக்க வேண்டியவாக்ளாயிருந்தனர்.  அவர்களுடைய தொகை அதிகமில்லாததால் காலாட்படைக்குப் பிரயேரினமாயில்லை.  பெருந்தொகையினரை வைத்துச் சமரட்சிக்கவும் சக்தியில்லையாகையால்,  குதிரைப் படைகளையே ஏற்படுத்திக் கொண்டனர்.  இந்த ஏற்பாட்டால் சிறிய தொகையினராகிய அவர்களுக்கு நல்ல சம்பளமும் கொளரவமும் கிடைத்தன. இருப்தினாயிரம் பேரைக் கொண்ட கைனியத்தில் காலட்களை இரண்டாயிரமாகக் குறைத்தனர் மேலும் அச்சைனியங்களின் தலைவர்கள் தங்களுக்கும் தங்கள் வீரர்களுக்கும் கஷ்டம். அபாயம் முதலியவை வராமலிருப்பதற்காகப் பல உபாயங்களைக் கையாண்டார்கள்.  தங்களுக்குள் விளையும் சண்டைகளில் ஒருவரை யொருவர் கொள்வதில்லை.  அதற்குப் பதிலாக ஈட்டுப்பணம் (Ransom) கேட்காமல் எதிரியைச் சிறைப்பிடித்துச் செல்வது என்ற ஏற்பாட்டை வைத்துக் கொண்டிருந்தார்கள்.  இரவு நேரங்களில் எதிரியின் அரண்களைத் தாக்குவதில்லை.  அரண்களிலிருப்பவர்கள் இரவில் கூடாரங்களிலிருப்பவர்களை ஆக்கிரமிப்பதில்லை.  அவர்கள் தங்குமிடங்களில் சுற்றிலும் அகழ்கள் வெட்டிக் கொள்வதில்லை.  மழைக் காலத்தில் போர்க்களத்தையும்  அணுகுவதுமில்லை. இதையெல்லாம் அவர்களுக்குத் தொல்லையும் ஆபத்தும் நேராதிருக்கும் பொருட்டு,  அவர்களுடைய ராணுவ நீதி அனுமதித்தது.  கடைசியில் இவை இத்தாலியை அடிமை நிலைக்குக் கொண்டு வந்துவிட்டன.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com