மத அரசியல்-22: மித்ர மதம்/மித்ரயிசம்

மத அரசியல்-22: மித்ர மதம்/மித்ரயிசம்

மித்ர மதம் / மித்ரயிசம் (Mithraism)

கிரீக்-ரோமானிய கலவையில், மித்ரக் கடவுளை வழிபடும் ஒரு மதம் மித்ர மதமாகும். கி.மு 1-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட மதம் என்பர். ஒரு ரகசிய அல்லது புதிரான வழிமுறைகளைக் கொண்ட மதம் எனலாம்.

மித்ர கடவுள்

Terracotta of Mithras-Attis, Kerch.

மித்ர கடவுளின் கோயில்கள் பாதாள குகைகளில், மித்ர கடவுள் காளையைக் கொல்லும் வடிவத்துடன் அமைக்கப்பட்டிருந்தன.

மித்ர கோயில், ஓஸ்டியா ஆண்டிகா, இத்தாலி (Ostia Antica, Italy)

காட்ஸ், காடோபேட் (Cautes and Cautopates)

மித்ரனுடன் காட்ஸ் மற்றும் காடோபேட் இருவர் கையில் டார்ச்சுடன் இருப்பர். இதில் காட்டார்ச்சை உயர்த்திப் பிடித்திருப்பார். காடோபேட் தாழ்த்திப் பிடித்திருப்பார். அதாவது ஒருவர் சூரிய உதயத்தினையும், மற்றொருவர் அஸ்தமனத்தையும் குறிப்பர். டேவிட் உலான்ஸி என்பது காட்ஸ் வசந்தகால சமன்பாட்டையும்(spring equinox), இலையுதிர் காலத்தில் சமச்சீராக(autumn equinox) இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

சிங்கத் தலை உருவம் (leontocephalus)

மித்ர கோயில்களில் காணப்படும் சிங்கத் தலை மனித உருவம் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை. நிர்வாண உடலில் இரண்டு பாம்புகள் சுற்றிக் கொண்டு, பாம்பின் தலை சிங்கத்தின் தலை மேல் உள்ளது.  மேலும் நான்கு இறக்கைகளையும் கொண்டுள்ளது. 

சடங்குகள் மற்றும் வழிபாடு

மித்ர புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்பட்டதாக எம்.ஜே.வெர்மசேரன் (M.J.Vermaseren) குறிப்பிடுகிறார். ஆனால் எந்த பொதுவிழாக்களும் கொண்டாடுவதில்லை என்கிறார்.  ஒரு ரகசிய பிரமாணத்துடன் இம்மதம் ஆரம்பிக்கப்படுகிறது. 4-ஆம் நூற்றாண்டில் இம்மதம் பேரரசிலிருந்து முற்றிலும் அழிந்துவிட்டது.

References:

  • "Oriental Religions in Roman Paganism", Cumont, Franz,  1911
  • Origins of the Mithraic Mysteries, Ulansey, D., 1989
  • The Roman cult of Mithras, Manfred Clauss, 2000

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com