மத அரசியல்-18: பாபிசம்

மத அரசியல்-18: பாபிசம்

பாபிசம் (Babism) தோற்றம் 

பாப் எனப்படும் “சிய்யித் அலி முகம்மத் ஷிராஸி ”(Siyyid Alí Muhammad Shírází அக்டோபர், 1819-இல் ஈரானில் ஷிராஸ் எனும் ஊரில், வணிகக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை முகம்மது ரிடா மற்றும் தாயார் ஃபாதிமி ஆவர்.  
 

சிய்யித் அலி முகம்மத் ஷிராஸி

1842–இல் ஷிராஸில் பிரபல வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த காதிஜி-பேகம் என்பவரை மணந்தார். பாபின் முதல் ஞான தூண்டுதலின் அனுபவம், அவருடைய மனைவி 1844 ஏப்ரல் 3 மாலை அன்று கண்டார்.


பயணங்கள்

அதன் பின் 18-வது வயதில் மெக்கா, மெதீனா போன்ற இடங்களுக்குப் புனித பயணம் மேற்கொண்டு, ஹெஜாஸ் (Sharif of Mecca /r Hejaz) எனும் புனித நூலை இயற்றினார். 40 நாட்கள் புனித பயணத்திற்குப் பிறகு 1848-ஆம் ஆண்டில்  அசர்பைஜான் மாநிலத்திலுள்ள  மாக்கு கோட்டைக்கு குடிபெயர்ந்தார்.

 

மத அறிவிப்பும், தூக்கு தண்டனையும்

பாப் தூக்கிலிடப்பட்ட இடம், டப்ரிஸ் (Tabriz)

1844 –இல் பாப் பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது. பகாய் சமயத்தவர் இந்நாளை புனித நாளாகக் கொண்டாடுகின்றனர். இதனால். 1850-இல் பிரதம அமைச்சர் அமீர் கபீரின் ஆணைப்படி 9, ஜூலை,1850 இல் பாப் தூக்கிலிடப்பட்டார்.


பாபிச கோட்பாடு

பாபிச கோட்பாடு ஒரு நவீன மத பிரிவின் கோட்பாடு, முகம்மதியன், கிறித்தவர், யூத மற்றும் பார்சீ கூறுகளின் கலவை எனலாம். குராசான் பிரதேசத்தைச் சார்ந்த ஹுஸைன் புஸ்ருயி என்பவர் இரண்டு புதிய கொள்கைகளின் ஊற்றுக்கண்ணாக இருந்தவர். குராசானின் புஸ்ரவையா என்னும் கிராமத்தில் பிறந்த இவரது வழி காட்டுதலில் தான் பாபிசம் தோன்றியது. தன்னை பாபு'ல் பாப் என்று கூறிய இவரும், தன்னை பாப்' என்று அறிவித்த அலி முஹம்மது ஷீராஸியும், தன்னை பஹாவுல்லா' என்று பிரகடனப்படுத்திக் கொண்ட மிர்சா ஹுஸைன் அலியும் அவர்களது ஆரம்ப கால சீடர்களான மற்றும் 16 பேரும் ஷியாக்களின் இத்னா அஷ்அரியா (12 இமாம்கள்) பிரிவைச் சார்ந்தவர்கள்.

12 (இமாம்கள்), 5 (அல்லாஹ், அலி, பாத்திமா, ஹசன், ஹுஸைன் - பஞ்சா), போன்ற எண்களைப் புனிதமாகக் கருதி பழகிப் போன இந்த ஷியா பாஹாய்களுக்கு தங்களுக்கென்று ஒரு புனித எண் தேவைப்பட்டது. எனவே அவர்கள் 19 என்ற எண்ணைத் தேர்ந்தெடுத்து அதைப் புனிதமானது என்றும், அதைச் சுற்றியே அகிலமனைத்தும் இயங்குவ தாகவும் கூறினார்கள்.

அவர்களது கோட்பாடுகளிலும் 19 முக்கியப் பங்கை வகிக்கிறது. அவற்றுள் சிலவற்றைப் பார்போம்:-

1. பாப் பிறந்த ஆண்டு 1819 - 1+8+1+9=19

2. பாப் பிறந்தது 19ஆம் நூற்றாண்டில்

3. பாப் பிறந்தது 19ஆம் நூற்றாண்டின் 19ஆம் வருடத்தில்

4. தன்னை பாப் என்று அறிவித்த போது அவனையும் சேர்த்து 19 பேர் அந்தக் கொள்கையிலிருந்தனர்.

5. ஒவ்வொரு வருடத்தையும் 19 மாதங்களாகப் பிரித்தனர்.

6. ஒவ்வொரு மாதத்தையும் 19 நாட்களாகப் பிரித்தனர்.

7. வருடத்தில் 19 நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் (அவர்கள் நோன்பு வேறு. இஸ்லாமிய நோன்பு வேறு)

8. 19 தடவை தலாக் கூறலாம்.

9. தலாக்கின் இத்தா காலம் 19 நாட்கள்.

10. கணவன் இறந்தால் இத்தா 5ஷ்19=95 நாட்கள்.

11. மாதவிலக்கான பெண்கள் 5ஷ்19=95 தடவை கழுகினால் போதும் (குளிக்க வேண்டும்)

12. நகரில் வாழ்வோர் 19 மிஸ்கால் தங்கம் மஹர் கொடுக்க வேண்டும்.

13. கிராமங்களில் வாழ்வோர் 19 மிஸ்கால் வெள்ளி மஹர் கொடுக்க வேண்டும்.

14. ஜக்காத் 19 சதவீதம் கொடுக்க வேண்டும்.

15. ஒவ்வொரு 19 வருடத்துக்குப் பிறகும் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டைப் புதுப்பிக்க வேண்டும்.

16. திருமணம் நிச்சயம் செய்த 19 ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னை பஹாவுல்லா என்று ஹுஸைன் அலி அறிவித்தான்.

17. அல்லா-வு-அப்ஹா' என்று தினமும் 5ஷ்19=95 தடவை கூற வேண்டும்.

18. தஸ்பீஹ் மணியில் 5ஷ்19=95 முத்துக்கள் தானிருக்கும்.

19. இறந்தவரை புதைக்கு முன் கூறும் பிரார்த்தனை 19 தடவை கூற வேண்டும்.

20. ஒவ்வொரு 19ம் நாள் முடிவிலும் 19ம் நாள் பண்டிகை என்ற பண்டிகையை ஒவ்வொருவரும் கண்டிப்பாகக் கொண்டாட வேண்டும்.

21. ஒரு மித்கால் என்பது 19 நக்குட்களை கொண்டது. (1 மித்கால் = சுமார் 4.1/2 பவுன்)

22. 19 மித்கால் தங்கத்திற்கு சமமான உடைமை இருந்தால் ஜக்காத் கடமையாகும்.

23. 19 மித்காலுக்கு மேலுள்ள சொத்துக்கு ஹுக்குள் (ஜக்காத்) கொடுக்கத் தேவையில்லை. அது இன்னொரு 19 மித்கால் தங்க மதிப்பை அடைந்தால் தான் அதற்கு ஹுக்குள் கொடுக்க வேண்டும்.

24. தன்னை பாப் என்று அலி முஹம்மது ஸிராஷி அறிவித்து 19 ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னை பஹாவுல்லா என்று ஹுஸைன் அலி அறிவித்தான்.

25. அவர்களின் தண்டனைகளிலும் 19 இருக்கும். விபச்சாரம் செய்தவனுக்கு தண்டனை: முதல் தடவையாக இருந்தால் 19 மித்கால் தங்கம் அபராதம், இரண்டாம் முறையாக இருந்தால் அதற்கு இரட்டிப்பாக 2ஷ்19=38 மித்கால் தங்கம் அபராதம், மூன்றாம் முறை அதற்கு இரட்டிப்பாக 4ஷ்19=76 மித்கால் தங்கம் அபராதம்.

சரி! 19-வது தடவையாக இருந்தால் என்ன தண்டனை என்று கேட்கிறீர்களா? மரண தண்டனை தான்.

26. பஹாவுல்லா எழுதிய அக்தாஸ்' என்ற அவர்களின் வேத நூல் பல பாராக்களாகப் பிரித்திருக்கிறார்கள். முன்னர் இருந்த எண்ணிக்கைகளை மாற்றி இப்போது 10ஷ்19=190 பாராக்கள் வருமாறு பிரித்திருக்கிறார்கள்.
வழக்கம் போல் 

சர்வதேச தலைமையகம் 

இஸ்ரேல் நாட்டின் ஹைபா நகரில் பாபிச கூட்டத்தின் சர்வதேச தலைமையகம் உள்ளது.

பாப் எழுதிய நூல்கள்

பாப் காயூமுல் அஸ்மா (Qayyúmu'l-Asmá') ம் பெர்ஷியன் பயன் (Persian Bayán) மற்றும் நபில்-இ-ஸரண்டி (Nabíl-i-Zarandí) போன்ற ஏராளமான நூல்களை எழுதிச் சென்றுள்ளார்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com