பஞ்சாங்கம்

வியாழக்கிழமை

26

விளம்பி வருடம், சித்திரை 12-ம் தேதி

நல்ல நேரம்

காலை 10.30 - 11.30   மாலை 4.30 - 5.30

ராகு காலம்

1.30 - 3.00

எம கண்டம்

6.00 - 7.30

குளிகை

9.00 - 10.30

திதி

ஏகாதசி

நட்சத்திரம்

பூரம்

சந்திராஷ்டமம்

திருவோணம், அவிட்டம்

இன்றைய ராசிபலன்

மேஷம் - பொறுமை
ரிஷபம் - கவனம்
மிதுனம் - ஊக்கம்
கடகம் - திறமை
சிம்மம் - நேர்மை
கன்னி - புகழ்
துலாம் - செலவு
விருச்சிகம் - பக்தி
தனுசு - சிந்தனை
மகரம் - உதவி
கும்பம் - அசதி
மீனம் - மேன்மை

யோகம்:  சித்த யோகம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

விசேஷம்: மதுரை மீனாட்சி சொக்கநாதர் திக்விஜயம். 

கேள்வி - பதில்
 • என் பேத்திக்கு அரசாங்கத்தில் வேலை கிடைக்குமா? 7-இல் செவ்வாய், 8- இல் கேது மாங்கல்ய தோஷம். திருமணம் எந்த வயதிற்கு மேல் செய்ய வேண்டும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?
   - வாசகர், திருச்சி
   

 • உங்கள் பேத்திக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதியான செவ்வாய்பகவான் களத்திர ஸ்தானத்தில் இருப்பது செவ்வாய் தோஷமல்ல. களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரபகவான் தொழில் ஸ்தானாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி ஆகியோருடன் இணைந்திருப்பதும் அவர் தொழில் ஸ்தானாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பதும் நன்மையாகும். அதோடு தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் மாங்கல்ய ஸ்தானாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். வங்கி, காப்பீடு துறைகளில் அரசு சம்பந்தப்பட்ட உத்தியோகமும் அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். ராகுபகவானை, குருபகவான் பார்வை செய்வதால் சர்ப்பதோஷ பாதிப்பு இல்லை.
   

 • என் மனைவிக்கு குரு தசை முடிந்து சனி தசை வரப்போகிறது. சனி தசையுடன் ஏழரை நாட்டு சனியும் வருகிறது. பலகீனமான என் மனைவியின் உடல்நலம் பாதிக்கப்படுமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
   - வாசகர், காஞ்சிபுரம்

 • உங்கள் மனைவிக்கு மகர லக்னம், தனுசு ராசி. தற்சமயம் லக்னாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. பொதுவாக, அனைவருக்கும் லக்னாதிபதியின் தசை நன்மைகளைச் செய்யும். அதோடு அவருக்கு சனிபகவான், குரு, சந்திர, புதபகவான்களுடன் இணைந்திருப்பது சிறப்பு. புதபகவான் ஆரோக்கிய ஸ்தானம் மற்றும் பாக்கியாதிபதியாக ஆவதால் ஏழரை நாட்டு சனியில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. குடும்பத்தின் வளர்ச்சி சிறப்பாகவே அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரச் சொல்லவும்.
   

 • எனது மகனின் திருமணம் தடைபடுகிறது. சர்ப்ப தோஷம் உள்ளதாக கூறுகிறார்கள். அதற்கு தோஷ நிவர்த்தியும் செய்துள்ளோம். திருமணம் எப்போது நடைபெறும்?
   - வாசகர், சென்னை

 • உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி. களத்திர தொழில் ஸ்தானாதிபதியான, புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பதால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. அதோடு தற்சமயம் லக்னாதிபதியின் தசையின் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி நீங்கள் செய்துள்ள பரிகாரங்கள் சரியானது மற்றும் போதுமானது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? சுக்கிரபகவான் நீச்சபங்கம் அடைகிறாரா? எத்தகைய பரிகாரம் செய்ய வேண்டும்?
   - வாசகர், திருவண்ணாமலை

 • உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி, பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதி ஆகியோர் அயன ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். சுக, களத்திர ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான தனுசு ராசியை அடைகிறார். தற்சமயம் லாபாதிபதியான சந்திரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணமும் கைகூடும். நவாம்சத்தில் சுக்கிரபகவான் நீச்சமடைந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • என் மகனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? எத்தகைய பெண் எத்திசையில் அமையும்? அந்நிய உறவில் அமையுமா?
   - வாசகர், தஞ்சாவூர்

 • உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. களத்திர , தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதியுடன் குடும்ப ஸ்தானத்தில் இணைந்திருப்பது சிறப்பு. தற்சமயம் குடும்ப ஸ்தானாதிபதியின் தசையும் நடக்கத் தொடங்கி உள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண், தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். அந்நிய உறவிலேயே பெண் அமைவார். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
   

 • என் இரண்டாவது மகனுக்கு 6 மாதங்களாக பெண் பார்த்தும் இன்னும் அமையவில்லை. எப்போது அமையும்? தற்போது வேலையை விட்டு விட்டு அரசு வேலைக்கு முயற்சிக்கிறார். அமையுமா?
   - வாசகி, காஞ்சிபுரம்

 • உங்கள் மகனுக்கு கடக லக்னம், துலாம் ராசி. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்று இருப்பதும் சுகாதிபதி குடும்பாதிபதியுடன் இணைந்திருப்பதும் அவருடைய மணவாழ்க்கை சீராகவே அமையும் என்று கூற முடிகிறது. அதோடு தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. அதனால் அவருக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். இந்த காலகட்டத்தில் அரசு வேலையும் கிடைக்கும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • எனக்கு எப்போது அரசாங்க வேலை கிடைக்கும்? எத்திசையில் பெண் அமைவார்? எப்போது திருமணம் நடைபெறும்?
   - வாசகர், திருவண்ணாமலை

 • உங்களுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய்பகவானுடன் இணைந்திருக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது. உங்களுக்கு தற்சமயம் குடும்பாதிபதியின் தசை நடக்கிறது. ராஜ கிரகங்கள் வலுவாக உள்ளதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அரசு உத்தியோகம், திருமணம் கைகூடும். கிழக்குத் திசையிலிருந்து பெண் அமைவார். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • என் பேரனுக்கு இரண்டு விதமாக ஜாதகம் குறித்து கொடுத்துள்ளனர். இதில் எது சரியானது?
   - வாசகர், விருதுநகர்

 • உங்கள் பேரனுக்கு கன்னி லக்னம், மிதுன ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம் என்று வருகிறது. லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று குரு, சந்திர பகவானுடன் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று ராகுபகவானுடன் இணைந்திருப்பதால் அஷ்ட மஹாநாக யோகம் உண்டாகிறது. மேலும் அதோடு தற்சமயம் ராகுபகவானின் தசையும் நடக்கத் தொடங்கியுள்ளது. சனி, ராகு பகவான்களை குருபகவான் பார்வை செய்வதால் ராகுபகவானின் தசையில் குடும்பத்தின் வளர்ச்சி சிறப்பாக அமையும். எதிர்காலம், கல்வி, உத்தியோகம் ஆகியவை மேன்மையாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.

 • எனக்கு திருமணமாகி விவகாரத்தும் ஆகிவிட்டது. ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஏழில் சூரியன் இருப்பது நல்லதா? மறுமணம் செய்தால் வெற்றியாகுமா?
   - வாசகி, நாகப்பட்டினம்

 • உங்களுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி. களத்திர ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் இருப்பது பெரிய பாதிப்பு என்று கூற முடியாது. செவ்வாய்பகவான் லக்னாதிபதியாகி அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்று நவாம்சத்தில் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்தாலும் செவ்வாய்தோஷம் இல்லை. களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். பலரும் மறுமணத்திற்கு ஜாதகம் பார்க்கத் தேவையா என்று கேட்கிறார்கள். மறுமணத்திற்கும் ஜாதகப் பொருத்தம் அவசியம் பார்க்க வேண்டும். குறிப்பாக, லக்னம், குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்களுக்கு ஏற்ற சமதோஷம் பார்க்க வேண்டியது அவசியம் என்பதை உங்கள் மூலமாக அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மற்றபடி உங்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் மறுமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • என் மகனுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? எங்கள் நிலம் எப்போது கிடைக்கும்? 20 ஆண்டுகள் முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை. பரிகாரம் செய்ய வேண்டுமா?
   - வாசகர், ஸ்ரீரங்கம்

 • உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், தனுசு ராசி. களத்திர ஸ்தானாதிபதி கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று சுக ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. அதோடு புத்திர ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சொத்து சம்பந்தமான பிரச்னை தீர்ந்து நிலம் உங்கள் கை வந்து சேரும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

 • எனக்கு அரசு ஆசிரியர் பணி நிரந்தரமாகக் கிடைக்குமா? இதனுடன் பகுதி நேரமாக சொந்தத்தொழில் செய்யலாமா?சொந்த வீடு கட்டும் பாக்கியமுள்ளதா? எனது தந்தையின் பூர்வீக இடத்திலேயே வீடு கட்டலாமா? எப்போது வீடு கட்டும் வாய்ப்பு கிட்டும்?
   - வாசகர், நாமக்கல்

 • உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தற்சமயம் லக்னாதிபதியின் தசை முடியும் நருவாயில் உள்ளது. அதனால் உடனடியாக வாழ்க்கையில் எதிர்பார்த்த நல்ல மாற்றம் உண்டாகும். தொடர்வது உச்சம் பெற்ற குடும்பாதிபதியின் தசையாக உள்ளதால் அரசு உத்தியோகமும் கிடைக்கும். பகுதி நேரமாக நீங்கள் சார்ந்துள்ள துறையிலேயே உபரி வருமானம் வரும். மற்றபடி பூர்வீக இடத்தில்அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் வீடு கட்டலாம். உங்கள் தந்தைக்கும் தற்சமயம் சுக பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் குடும்ப பொருளாதாரம் படிப்படியாக உயரும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • என்னுடைய இரண்டாவது மகன் பி.டெக் படித்துள்ளார். அவருக்கு பல இடங்களில் பார்த்தும் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. சரியான வேலையும் கிடைக்கவில்லை. படிப்பிற்கேற்ற வேலை மற்றும் திருமணம் எப்போது அமையும்?
   - வாசகர், திருப்பத்தூர்
   

 • உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், விருச்சிக ராசி. தொழில் ஸ்தானாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றும் தொழில் ஸ்தானத்தில் சர்ப்பக்கிரகமான கேதுபகவான் இருப்பதும் சிறப்பு. தற்சமயம் லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் புக்தி நடக்கிறது. அதனால் அவருக்கு இந்த ஆண்டே நிரந்தர உத்தியோகமும் திருமணமும் கைகூடும். மற்றபடி புத ஆதித்ய யோகம், சசமஹா யோகம், அஷ்டமஹா நாகயோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
   

 • என் அண்ணன் மகன் ஓர் உயர்ந்த பதவியில் உள்ளார். இன்னும் திருமணமாகவில்லை. எப்போது திருமணமாகும்? எத்திசையில் பெண் அமையும்? பதவியில் மாற்றம் ஏற்படுமா?
   - வாசகி, திருச்சி
   

 • உங்கள் சகோதரர் மகனுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. பாக்கியாதிபதி உச்சம் பெற்று புத ஆதித்யர்களைப் பார்வை செய்கிறார்கள். சுகாதிபதி லக்னத்தில் அமர்ந்திருப்பதும சிறப்பு. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியை சிறப்புப் பார்வையாகப் பார்வை செய்கிறார்கள். புத்திகாரகரும் கேந்திர ஸ்தானாதிபதியும் வலுவாக இருப்பது ஜாதகத்திற்கு வலு ஊட்டுகிறது. அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடக்கிறது.அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். ஆரோக்கிய ஸ்தானாதிபதி விபரீத ராஜயோகம் பெற்று இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் நல்ல வளர்ச்சியை எட்டி விடுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

 • நான் தற்சமயம் உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்து வருகிறேன். எனக்கு இதில் வளர்ச்சி ஏற்படுமா? சாதனை செய்ய வாய்ப்புகள் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
   - வாசகர்
   

 • உங்களுக்கு ரிஷப லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சூரியபகவான் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
   லக்னம் மற்றும் ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் அமர்ந்து (உத்திராடம் நட்சத்திரம்) நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். எந்த ஒரு ஜாதகத்திற்கும் லக்னாதிபதியின் பலம் மிகவும் அவசியம் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். உங்களுக்கு லக்னாதிபதி எண்பது விழுக்காடு பலம் பெற்றிருக்கிறார் என்று கூறவேண்டும்.
   தனம் வாக்கு குடும்பம் ஆகிய இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
   நான்காமதிபதியான சுக ஸ்தானாதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
   நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் தன் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பது குறை என்றாலும் பன்னிரண்டாமதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கிறது. இதனால் திருமண வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும். அதோடு இத்தகையோர் திருமணத்திற்குப்பின்பே வாழ்க்கையில் சிறப்பான வளர்ச்சியை எட்டுவார்கள் என்பதும் அனுபவ உண்மை.
   அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் வாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார்.
   எட்டாமதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும் அமைப்பாகும். ""மறைந்த புதன் நிறைந்த மதி, மறைந்த குரு நிறைந்த நிதி'' என்பது ஜோதிட வழக்காகும். உங்களுக்கு புத, குரு பகவான்கள் இருவரும் மறைந்திருப்பது மேற்கூறிய வழக்கின்படி சிறப்பாகும்.
   தர்ம (ஒன்பது) கர்மாதிபதியான (பத்தாமதிபதி) சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார். ராகுபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். கேதுபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார்.
   சாதனையாளர்கள் அனைவருக்கும் திரிகோணாதிபதிகளும் கேந்திராதிபதிகளும் ஓரளவுக்கு வலுவாக அமைந்திருப்பார்கள் என்பது ஜோதிட கருத்தாகும். உங்களுக்கு மூன்று திரிகோணாதிபதிகளும் மேற்கூறிய வகையில் பலம் பெற்றிருப்பது சிறப்பு. சப்தம கேந்திரத்தில் (ஏழாம் வீட்டில்) சுகாதிபதியும் தர்மகர்மாதிபதியுமான சனிபகவானும் இணைந்திருப்பது சிறப்பு.
   ரிஷப லக்னத்திற்கு சூரியபகவான் கேந்திர ஸ்தானமான சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியாக வருகிறார். பொதுவாக, அசுபக்கிரகங்களுக்கு (சூரியன், சனி, செவ்வாய், ராகு- கேது பகவான்கள்) கேந்திர ஸ்தானங்களுக்கு அதிபதிகளாக வந்தால் நலம் புரிவார்கள். லக்னாதிபதியான சுக்கிரபகவான் சூரியபகவானுக்கு பகை கிரகமாக இருந்தாலும் லக்னத்திற்குச் சுபராகிறார். ஒரு கேந்திராதிபதி மற்றொரு கேந்திரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. அவரோடு மற்றொரு கேந்திராதிபதி (கர்மாதிபதி) சனிபகவான் (பத்தாமதிபதி ஏழாம் வீட்டில்) அமர்ந்திருக்கிறார்.
   சனிபகவான் தர்மகர்மாதிபதியாகி சப்தம கேந்திரத்தில் (நட்பு ஸ்தானம்) மற்றொரு கேந்திராதிபதியுடன் இணைந்திருக்கிறார். இதனால் தொழில் ஸ்தானாதிபதி நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும்.
   தற்சமயம் சனி மஹா தசை நடக்கிறது. சனிதசை யோக தசையாகும். இரும்பு, இயந்திரம், கருப்பு நிறப்பொருள்கள், உளுந்து, எள், அறிவியல், விவசாயம், எண்ணெய் சம்பந்தப்பட்ட இனங்களில் வருவாய் பெறலாம்.
   சனி மஹா தசை யோக தசையானதால் விடாமுயற்சியும் உழைப்பும் அதிகமாகத் தேவைப்படும். சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் லக்னாதிபதியையும் பார்ப்பதால் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமாகும். அதேநேரம், உழைப்புக்குப் பின் வாங்கக் கூடாது. சனிபகவான் லக்னத்தைப் பார்வை செய்வது "மஹா கீர்த்தி யோகம்' என்று அழைக்கப்படுகிறது.
   ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் ராகுபகவான் சுயசாரத்தில் அமர்ந்திருப்பது அஷ்டலட்சுமி யோகமாகும். அதோடு குருபகவானும் சந்திரகேந்திரத்தில் இருப்பதால் அஷ்ட லட்சுமி யோகம் முழுமையாகிறது.
   ஆறாம் வீட்டில் செவ்வாய், குரு பகவான்கள் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார்கள். ராகுபகவான் மற்ற கிரகங்களின் சுய பலத்தை தனதாக்கிக் கொண்டு பயன் தருவார் என்பதை அனைவரும் அறிந்ததே. பொருளாதாரநிலை எந்த அளவுக்கு உயர்வாக இருக்கும் என்பதை இரண்டாம் வீட்டின் பலத்தை ஆறாம் வீட்டின் பலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
   உங்களுக்கு புதபகவானும் மேற்கூறிய வகையில் சுப பலம் பெற்றிருப்பதால் பெரியதாக கடன், வியாதி, விரோதம் என்று எதுவும் ஏற்பட்டு விடாது. செவ்வாய்பகவான் நெருப்பு சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் குருபகவான் மேலாண்மைத் துறைக்கும் முக்கியமாக காரகத்துவத்தைப் பெறுபவர்களானதால் உணவு சம்பந்தப்பட்ட துறைகளில் வளர்ச்சியைக் காண்பீர்கள். அதோடு வாகன காரகரான சுக்கிரபகவானும் பயண காரகரான ராகுபகவானும் வலுப்பெற்று இருப்பதால் பல இடங்களுக்கு பொருள்களை எடுத்துச் சென்றும் விற்பனை செய்யலாம். அதனால் அச்சப்படாமல் உங்கள் தொழிலில் கவனம் செலுத்தவும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
   

ராசி பலன்கள்

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை