பஞ்சாங்கம்

வியாழக்கிழமை

19

விளம்பி வருடம், ஆடி 3-ம் தேதி

நல்ல நேரம்

காலை 10.30 - 11.30   மாலை 4.30 - 5.30

ராகு காலம்

1.30 - 3.00

எம கண்டம்

6.00 - 7.30

குளிகை

9.00 - 10.30

திதி

ஸப்தமி

நட்சத்திரம்

ஹஸ்தம்

சந்திராஷ்டமம்

சதயம், பூரட்டாதி

இன்றைய ராசிபலன்

மேஷம் - கோபம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - செலவு
கடகம் - வெற்றி
சிம்மம் - கவனம்
கன்னி - நன்மை
துலாம் - ஆரோக்யம்
விருச்சிகம் - நலம்
தனுசு - பாசம்
மகரம் - பொறுமை
கும்பம் - பெருமை
மீனம் - ஆக்கம்

யோகம்:  சித்த யோகம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

விசேஷம்: வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜப் பெருமாள் இத்தலங்களில் உற்ஸவாரம்பம். 

கேள்வி - பதில்
 • எனது பேத்தியின் ஜாதகத்தில் 8 -ஆம் இடம் மகரத்தில் சுக்கிரன், செவ்வாய், சனி, ராகு ஆகிய கிரகங்கள் இருப்பதால் திருமணம் தாமதமாகும் என்கிறார்கள். எப்போது திருமணம் நடைபெறும்? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமாக அமையுமா? ஆசிரியர் தொழில் நிரந்தரமாகுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? 
  - வாசகர், கோயம்புத்தூர்

 • உங்கள் பேத்திக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி, தொழில் ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று தைரியாதிபதியான சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார். இதனால் நிரந்தரஅரசு வேலை கிடைக்கும். தற்சமயம் அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். குடும்பத்துடன் இணைந்து வாழ்வார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.


   

 • எனக்கு இதுவரை நிரந்தரமான தொழிலோ வேலையோ அமையவில்லை. என்ன தொழில் செய்யலாம்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?
  - குமார், விருதுநகர்

 • உங்களுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியால் பார்க்கப்படுகிறார். தொழில் ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானும் லாபாதிபதியான செவ்வாய்பகவானும் இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் குருபகவானின் தசையில் புதபகவானின் புக்தி நடக்கிறது. குருபகவான் விபரீத ராஜயோகம் பெற்று தசை நடத்துவதால் படிப்படிப்படியாக நீங்கள் செய்துவரும் தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். நீங்கள் செய்துவரும் தொழிலையே செய்து வரலாம். இன்னும் 3 ஆண்டுகளுக்குப்பிறகு வாழ்க்கையில் சிறப்பான நிலையை எட்டி விடுவீர்கள். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • எனது மகனுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா? திருமணம் எப்போது கைகூடும்? எந்த திசையில் பெண் அமையும்? 
  - பழனி, தர்மபுரி

 • உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி மற்றும் ராகுபகவான்கள் களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்கள். களத்திர, அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் ஆட்சி பெறுகிறார். தனுசு ராசியில் செவ்வாய்பகவான் சந்திரபகவானுடன் இணைந்து இருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை. தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் தென் கிழக்குத் திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 • எனது வாழ்க்கையில் இதுவரை எந்தவிதமான மேன்மையும் அடையவில்லை. எப்போது முன்னேற்றம் ஏற்படும்? லக்னாதிபதியை வலிமைபடுத்த கல் வைத்த மோதிரம் அணியலாமா? ராகு- கேது பாதிப்புண்டா? 
  - வாசகர், தான்தோன்றிமலை

 • உங்களுக்கு ரிஷப லக்னம், மீன ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்றிருந்தாலும் அங்கு உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் புதபகவானுடன் இணைந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். சுக ஸ்தானத்தில் முதல் அரசுக் கிரகமான சூரியபகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் சூரியபகவானின் தசை நடக்கிறது. இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு உங்கள் வாழக்கையில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். ராகு- கேது பகவான்கள் சுயசாரத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பாகும். அஷ்டலட்சுமி யோகமும் உண்டு. எந்த நவரத்தின கல்லையும் அணிய வேண்டிய அவசியமில்லை. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். மேற்கூறிய காலகட்டத்திற்குப்பிறகு வாகனத் தொழில் ஏற்றதாக அமையும். 3,6,12 -இல் பாபக் கிரகங்கள் இருப்பதால் நன்மையே. பாதிப்பு இல்லை.

 • எனக்கு 71 வயது ஆகிறது. பணி ஓய்வு பெற்றுவிட்டேன். எனது வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
  - வாசகர், பள்ளப்பட்டி

 • உங்களுக்கு கடக லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி சுயசாரத்தில் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தனம் மற்றும் பூர்வபுண்ணியாதிபதிகளால் பார்க்கப்படுகிறார். லக்னத்தில் களத்திர, ஆயுள் காரகரான சனிபகவான் சுய சாரத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் விபரீத ராஜயோகம் பெற்றுள்ள புதபகவானின் தசை நடக்கிறது. இதனால் பொருளாதாரம், உடலாரோக்கியம் இரண்டும் இறுதிவரை சீராகவே அமையும். பிரதி தினமும் "ராம ராம' என்று முடிந்தவரை ஜபித்து வரவும். 

 • என் கணவர் அரசுப்பணியில் இருந்து இறந்து 4 வருடங்களாகின்றன. என் மகளுக்கு கருணை அடிப்படையில் வேலைக்கு முயற்சித்து வருகிறேன். இந்த வருடத்திற்குள் அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எந்த வயதில் நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?
  - வாசகி, மூலனூர்

 • உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கடக ராசி. லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். களத்திர நட்பு தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்து இருக்கிறார். அதோடு அவருக்கு தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அரசு வேலை கிடைக்கும். அவருக்கு செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் இல்லை. 24- ஆம் வயதில் திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

 • என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? பெண் எந்தத் திசையிலிருந்து வருவார்? 
  - வாசகர், கடையநல்லூர்

 • உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர தொழில் ஸ்தானாதிபதியையும் பாக்கியாதிபதியையும் பார்வை செய்வது சிறப்பு. தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் இறுதிப் பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். தெற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து பெண் அமைவார். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • என் எதிர்காலம் எப்படி இருக்கும்?
  - ராஜா, மதுரை

 • உங்களுக்கு துலாம் லக்னம், விருச்சிக ராசி. தொழில் ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று அந்த வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவானுடன் கேந்திரம் பெற்றிருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். மேலும் சந்திரபகவான் சுக பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானுடன் இணைந்து இருக்கிறார். 2020 -ஆம் ஆண்டு தொடங்கியவுடன் உங்கள் வாழ்க்கையில் மலர்ச்சி உண்டாகும். எதிர்காலம், சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

 • என் மகளுக்கு திருமணமாகி ஓர்ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் கருத்துவேறுபாடு உள்ளது. உடல்நிலையிலும் பல தொந்தரவுகள் இருக்கின்றன. நிரந்தர வேலை அமையவில்லை. நிரந்தர வேலை அமையுமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
  - வாசகர், சென்னை

 • உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், மகர ராசி. தொழில் ஸ்தானாதிபதி கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று இருப்பதால் உத்தியோகத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. அவருக்கு தற்சமயம் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று தசையை நடத்தும் குருபகவானின் தசை நடப்பதால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு நிரந்தர வேலை கிடைக்கும். புத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் இருப்பதால் உங்கள் பேரனும் சிறப்பான நிலையை எட்டி விடுவார். உங்கள் மகளை பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரச்சொல்லவும்.

 • என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? தோஷம் ஏதேனும் உண்டா? தொழில் எவ்வாறு அமையும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? 
  - வாசகர், முசிறி

 • உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மிதுன ராசி. தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். தொடர்வதும் லக்னாதிபதியின் தசையாக அமைவதால் செய்தொழிலில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • என் மகளுக்கு ஆயில்யம் நட்சத்திரம். உறவுகளில் வரன் கைகூடுமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? 
  - வாசகர், சின்னமனூர்

 • உங்கள் மகளுக்கு மீன லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருப்பது சிறப்பு. அவருக்கு தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சுக்கிரபகவானின் தசை நடப்பதால் படிப்படியாக அவரின் வாழ்க்கையில் சிறப்புகள் கூடும். படிப்புக்கேற்ற வேலையும் கிடைக்கும். அவரின் மனதிற்குப்பிடித்த வரன் உறவில் அமைந்து திருமணம் கைகூடும். ஆயில்ய நட்சத்திரத்தால் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தைரியமாக ஆயில்ய நட்சத்திர வரன் அல்லது வது ஜாதகங்களை திருமணம் செய்து கொள்ளலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 • எனது கடன் பிரச்னை எப்போது தீரும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? 
  - வாசகர், திண்டுக்கல்

 • உங்களுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி. கடனைக் குறிக்கும் ஆறாம் வீட்டுக்கதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று கேதுபகவானுடன் இணைந்திருக்கிறார். லாப ஸ்தானத்தில் தன பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் ராகுபகவானுடன் இணைந்திருப்பதும் சிறப்பாகும். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபதவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து தற்சமயம் தசையை நடத்தத் தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு ஜூலை மாத்திற்குப்பிறகு உங்கள் கடன்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கிவிடும். இரண்டரை ஆண்டுக்குள் கடன்கள் முழுமையாக அடைந்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • மனிகை கடை வைத்துள்ள நான், எனது பழைய வீட்டை மாற்றி வாடகை வரும் வகையில் கட்டினேன். வங்கியில் கடன் வாங்கியுள்ளேன். கடன் எப்போது அடையும்? எனது நிலத்தை விற்க எண்ணியுள்ளேன். எப்போது விற்பனையாகும்? 
  - வாசகர், சென்னை

 • உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. கடனைக் குறிக்கும் ஆறாம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரபகவான் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உங்கள் நிலம் விற்பனையாகி கடன்கள் முழுவதுமாக அடைந்துவிடும். கேது தசையில் பிற்பகுதி நலம் தரும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

 • எனது மகனுக்கு 44 வயதாகிறது. எங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் என் மகன் மீண்டும் எங்களுடன் சேருவாரா? திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 
  - வாசகர், திருவாரூர்

 • உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். மேலும் லக்னாதிபதியும் நீச்சம் பெற்று உச்சம் பெற்றிருக்கும் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய் பகவானுடன் இணைந்து இருப்பதால் அவருக்கும் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. அவருக்கு தற்சமயம் கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் குடும்பாதிபதியின் புக்தி இன்னும் இரண்டாண்டுகள் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் அவருக்கு நிரந்தர வேலை, திருமணம் ஆகியவை கைகூடும். குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ்வார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

 • என் மூன்றாம் மகளுக்கு எட்டு வயது நடக்கும்போது மூத்த சகோதரிகள் இருவரும் பழம் நறுக்கும் கத்திக்காகப் போட்டிப்போட்ட போது, ஒருவர் எனக்குத்தான் கத்தி என, மற்றவர்களிடம் பிடிபடாமல் இருக்க வேகமாக திரும்பிய நேரத்தில் இவை ஒன்றுமறியாத மூன்றாவது மகள் எங்கிருந்தோ ஓடி வந்து அங்குசேர, தன் இடது கண்ணில் அந்த கத்திக்குத்தைப் பெற்றுவிட்டார். விழிலென்சு கிழிந்துவிட்டது. கருவிழியும் மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. இடது கண் பார்வை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டு வலது கண்ணினால் பொறியியல் படிப்பை படித்து முடித்து விட்டார்.
 • உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். சுகாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். லக்னாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் ஆகிய மூன்று திரிகோணாதிபதிகளும் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருப்பது மிகவும் சிறப்பாகும். 
  பொதுவாக, ஒன்றாம் பாவமான லக்னம் வலுத்திருக்கும் பட்சத்தில் ஜாதகர் நல்ல உடல் வலிமையும் திறமையும் பெற்று இதர பாவங்களின் தன்மைகளுக்கு ஏற்பத் தன்னை இயக்கிக் கொள்வார் என்பது ஜோதிட கருத்து. அவருக்கு மேற்கூறிய வகையில் லக்னம், லக்னாதிபதி வலுத்திருக்கிறார். ஐந்தாம் வீட்டோன் ராசியிலும் அம்சத்திலும் பலம் பெற்று இருப்பதால் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அரசு அந்தஸ்தைப் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். ஒன்பதாம் பாவம் வலுத்தால் ஜாதகரால் தந்தை நலம் ஓங்கவும் சிறப்பான பதவிகளை வகிக்கவும் வாய்ப்புகள் உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் சம்பாதித்த பணத்தை முறைப்படி முதலீடு செய்து வருவாய் ஈடுபடவும் முடியும் என்பது கருத்தாகும். பொதுவாக, 1,5,9 ஆகிய மூன்று திரிகோணங்களில் எது பலமாக உள்ளதோ அதைக் கொண்டு அந்த கோணத்தில் எண்ணத்தைச் செலுத்த வேண்டும். அவருக்கு ஒன்பதாமிடம் சிறப்பான வலுபெற்று இருப்பதால் யோகபாக்கியங்களும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வந்தடையும்.
  தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டுக்கதிபதியும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் பத்தாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். கர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் லாப ஸ்தானமான தன் மூலத்திரிகோண வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். சர லக்னங்களுக்கு (மேஷம், கடகம், துலாம், மகரம் ராசிகள்) பதினொன்றாம் வீடு பாதக ஸ்தானம் என்று உள்ளது. பாதாகாதிபதி பலம் குறைந்தால் பாதகம் குறையும் என்று கூறுவார்கள். இது அனுபவத்தில் ஒத்துவருவதில்லை. பாதகாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றாலோ கேந்திர திரிகோண வீடுகளில் இருந்தாலோ அதி உன்னத பலன்களைத் தருகிறார். அதனால் பாதகாதிபதியைப் பற்றி பெரிதாகக் கவலைப் படவேண்டாம் என்பதே எங்களின் கருத்தாகும்.
  ராகுபகவான் ஆறாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். கேதுபகவான் அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். ராகுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது அஷ்டலட்சுமி யோகமாகும். ஓர் அசுபக் கிரகம் ஆறில் மறைந்தால் யோகம் தருவார் என்பது விதி. புத, சுக்கிர பகவான்களின் சேர்க்கையை அவ்வளவு குறைவாக மதிப்பிடக் கூடாது. அதாவது புதபகவான் ஆறாம் வீட்டோனாகி ஏழாமதிபதியான சுக்கிரபகவானுடன் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். 3,6,10,11 ஆம் இடங்கள் "உப ஜய ஸ்தானங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. 3,6,10,11 ஆம் வீடுகள் வலுத்திருப்பதால் அவரின் வாழ்வில் நாளுக்கு நாள் வளர்ச்சி கூடிக்கொண்டே போகும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைக் குறிக்கும் நான்காமிடத்தின் அதிபதி சுபக்கிரகமாகி (சந்திரபகவான்) சுபக்கிரகத்தால் (குருபகவான்) பார்க்கப்பட்டு வலுத்திருப்பதால் தன் உறவினர்களாலும் நண்பர்களாலும் போற்றப்படுவார். பொதுவாக, குருசந்திரயோகம் உள்ளவர்கள் தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு அப்பாற்பட்டு வேறொரு புதிய துறையில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள் என்பது அனுபவ உண்மை.
  சூரியபகவான் சமுதாயத்தில் மதிப்பு, கம்பீரம், அறிவு, வைராக்கியம், கௌரவம், கண்டிப்பு, பலம், பராக்கிரமம் ஆகியவற்றிற்குக் காரணமாகிறார். மேலும் அவரே முதல்தர அரசுக் கிரகமாகிறார். மற்றவர்களின் பொருள் தன் கைக்கு வருவது என்பது எளிதான காரியமில்லை. இதை ஜன்மாந்திர சுகிர்தம் என்பார்கள். இதற்குக் காரணமான வீடு ஐந்தாம் வீடாகும். இதை விதி வீடு என்றும் கூறுவார்கள்.இந்த ஐந்தாம் வீடு, பலம் பெற்றிருந்தால் குருட்டு அதிர்ஷ்டம் வரும். பஞ்சமாதிபதி சூரியபகவான் தனுசில் குருபகவானோடு இணைந்திருப்பதால் புகழும் பொருளும் தரத்தக்க வகையில் தொழில் அமையும். எல்லா ஆற்றல்களும் உண்டாக்கக் கூடியவர் சூரியபகவானாவார். தைரியத்துடன் பெரிய ப்ராஜட்களை உருவாக்கம் செய்வார். அடிக்கடி தொழில் நிமித்தம் பயணம் செய்ய வைத்துப் பயனும் கிடைக்கச் செய்வார். ஜீவனமும் சுகமாக அமையும். அதோடு வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டுத்தொடர்பில் ஜீவனத்தை அமைத்துக் கொடுப்பார். பெற்றோருக்கும் உயர்நிலை உண்டாகும். பதவி ஏற்றத்திற்கு உத்திரவாதம் உண்டு. உடல்பலத்தால் சாதனை செய்ய முடியும். துணிகள், மூலிகைகள் சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணமுடைய பண்டங்கள் ஆகியவற்றில் தொழிலும் ஆதாயமும் கிடைக்கும். அதாவது, பங்கு சந்தை, பண்டக சந்தைகளில் ஈடுபட்டும் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறமுடியும். 
  செவ்வாய்பகவான் லக்னாதிபதியாகி வலுத்திருப்பதால் தங்கம், தாமிரம் போன்ற உலோகங்களாலும் எரிபொருள் சம்பந்தப்பட்ட வகையிலும் லாபம் கிடைக்கும். அதனால் அவர் அரசில் உயர்ந்த பதவி வகிக்கவும் கன்சல்டன்ஸி துறைகளில் ஈடுபட்டு உயர்பதவிகளைப் பெறுவார். அரசு விருதுகளும் கிடைக்கும் என்பது உறுதி. சுக்கிரபகவான் மேஷ லக்னத்திற்கு இரண்டு மற்றும் ஏழு ஆகிய இரண்டு மாரக வீடுகளுக்கு அதிபதியாகிறார். அவரின் தசை இளம் வயதில் வந்தது. சுக்கிரபகவானின் தசையில் சுய புக்தியில் இடது கண்ணில் கஷ்டம் ஏற்பட்டது. வாமனராக மஹாபலி சக்கரவர்த்தியைக் காப்பாற்ற முற்படுகையில் சுக்கிரபகவானுக்கு ஒரு கண் பாதிக்கப்பட்டதை அனைவரும் அறிந்ததே. அதனால் பிரதி வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரபகவானையும் பெருமாளையும் மஹாலட்சுமியையும் வழிபட்டு வரச் சொல்லவும். இன்னும் முன்றாண்டுகளுக்குப்பிறகு தொடங்கும் சூரிய தசையிலிருந்து அவரின் வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்கும். எதிர்காலம் அவர் எதிர்பார்த்ததிற்கும் மேலாக சிறப்பாக அமையும்.
   

ராசி பலன்கள்

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை