கும்பம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

கும்பம் (AQUARIUS)

(ஜனவரி 20 – பிப்ரவரி 18)

இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசி. காற்று ராசியும்கூட. இதற்கும் அதிபதி சனிதான். இது காற்று ராசியாக இருப்பதால், மிகுந்த புத்திக்கூர்மையைத் தரக்கூடியது. நீருடன் உள்ள கும்பம்தான் இதன் அடையாளம். இதன் குறியீடு K. இந்த ராசி கணுக்கால் மற்றும் உடல் நரம்புகளைக் குறிக்கிறது. நரம்பு சம்பந்தமான VERICOSE என்னும் நோய் வரக்கூடும். இந்த வீடு சுக்கிரனுக்கும் புதனுக்கும் நட்பு வீடு. சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோருக்குப் பகை வீடு. இந்த ராசியானது மற்ற கிரகங்களின் கெட்ட பார்வை பட்டால், சோம்பேறித்தனம் பற்றிக்கொள்ளும். எப்போதும் கவலையுடனும், எதிர்மறை எண்ணங்களுடனும் இருப்பார்கள்.

ஜூன் 27

இன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.  எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

ஜூன் 23-29

(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வரவுக்கேற்ப எச்சரிக்கையாக செலவு செய்வீர்கள். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடந்தகால பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். பழைய கடன்களைத் தீர்க்க முயல்வீர்கள்.

குடும்பத்தினரின் மீது பாசம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பெயரும் புகழும் பெறுவீர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். இருப்பினும் விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு குறைவு. வியாபாரிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார்கள். உழைப்புக்குத் தகுந்த பலன்களைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மகசூல் அதிகரிக்க நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சமூக சேவையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். ரசிகர்களின்ஆதரவு குறையும்.

பெண்மணிகள் குடும்பத்தில் மதிப்பு உயரக் காண்பார்கள்.கணவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவார்கள்.மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள் : 24,28.

சந்திராஷ்டமம் : இல்லை.

ஜூன் மாதம்
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

வீரத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய கும்ப ராசியினரே நீங்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள். இந்த மாதம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். ஆனால் திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. எடுத்து கொண்ட பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும்.

குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

கலைத்துறையினருக்கு லாபங்கள் பெருகும். தடைபட்ட புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். சம்பளம் உயரும். சிக்கல்கள் தோன்றினாலும் அதை வெற்றி கொள்ளும் திறன் உண்டாகும். அரசியல் துறையினர் செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். சூரியன் பத்தாமிடத்தில் உலா வருகிறார். உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம்.

மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள்  அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  இல்லையெனில் பலரையும் விரோதித்துக்கொள்ள வேண்டி இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்துகொள்வது மனதுக்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே  இருக்கும் அன்பு நீடிக்கும்.  பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள்

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மனநிம்மதி உண்டாகும்.எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம்  சாதித்துக் கொள்வீர்கள். மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபம் உண்டாகும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்து வர மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள்  நன்கு நடந்து முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் அபிவிருத்தி அடையும். நீங்கள் எதிர்பார்த்தது கை வந்து சேர்ந்துவிடும். நல்ல செயல்களைச் செய்து உங்கள் பெருமையை கூட்டிக்கொள்வீர்கள். மனதில் நிம்மதி இருக்கும். வருமானம் சீராகவே இருக்கக் காண்பீர்கள். செய்தொழிலிலும் புதிய சூழல் உருவாகக் காண்பீர்கள். போட்டியாளர்கள் சற்று பின்தங்குவார்கள். உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களால் சில பிரச்னைகள் உருவாகும். அதனால் சிறிது விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிவரும். தாயாரின் உதவியும் கிடைக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். ஆன்மிகச் சிந்தனைகள் அதிகமாக இருக்கும். வழக்குகளிலும் எதிர்பார்த்த வாய்தா கிடைக்கும். நீங்கள் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிக்கொள்வீர்கள். மறைமுக நேர்முக எதிர்ப்புகள் எவ்வளவு வந்தாலும் தாக்குப்பிடித்து விடுவீர்கள். திருமணமாகாமல் தவித்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும் காலகட்டமாக இது அமைகிறது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் கடினமான காரியங்களைக்கூட சுலபமாக முடித்துவிடுவீர்கள். வருமானம் பலவகையிலும் உங்களைத் தேடிவரும். ஸ்பெகுலேஷன் துறையின் மூலமும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் புத்திரபாக்கியம் இரண்டும் கைகூடும். நேர்முக எதிர்ப்புகள் எவ்வளவு வந்தாலும் தாக்குபிடித்து விடுவீர்கள். குடும்பத்திலும் ஒற்றுமை கூடும். புரிந்துகொள்ளாத உற்றார் உறவினர்கள் சகஜமாகப் பழகத் தொடங்குவார்கள். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் இணைந்து வாழும் சூழ்நிலையும் ஏற்படும். உடலில் இருந்த உபாதைகள் மறையும். தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்களும் இந்த காலத்தில் விலகிவிடும். பெரியோரையும் ஆன்மிகத்தில் உயர்ந்தோரையும் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். ஆணையிடும் அதிகாரப் பதவிகள் உங்களை நாடி வந்து கோலோச்சும் என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடினாலும் அதை கடின உழைப்பை மேற்கொண்டு சமாளிப்பார்கள். செய்யும் தொழிலில் இறக்கங்கள் இராது. உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதை இந்த ஆண்டு பெறுவார்கள். உங்கள் மதிப்பு மரியாதை உயர்ந்தே காணப்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சுமாரான பலன்களே கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்படினும் அவைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். வருமானம் சராசரிக்கும் அதிகமாக இருப்பதால் சிறிது செலவு செய்து கடையை அழகுபடுத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் சிறிது அலைச்சல் ஏற்பட்டாலும் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். விவசாயிகள் பயிர் விளைச்சலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அலைச்சல்கள் சற்று அதிகரித்தாலும் விவசாயப் பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். பழைய பயிர்க்கடன்களும் அடைபட்டுவிடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். சக விவசாயிகள் மத்தியில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும் ஆண்டாக இந்த ஆண்டு அமைகிறது. 

அரசியல்வாதிகள் சற்றும் அச்சமில்லாமல் செயல்படுவீர்கள். பணிகளை முழுமையாகச் செய்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்கள் மறையும். உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவு அளிப்பார்கள். தொண்டர்களும் உங்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பார்கள். வெளியூரிலிருந்து வரவேண்டிய பணமும் வந்து சேரும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வருமானம் கிடைக்கும். உங்கள் வேலைகளைச் சரியாக முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். சக கலைஞர்கள் பகைமை மறந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய ஒப்பந்தம் தேடிவரும். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பெண்மணிகள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருப்பார்கள். தாய்வழியில் ஆதரவு கூடும். வருமானத்திற்குக் குறைவு வராது. மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றமடைவார்கள். உடல் வலிமையும் மனவளமும் கூடும். ஆசிரியர்களும் பெற்றோரும் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

பரிகாரம்: சிவதரிசனம் உகந்தது.

***

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

இந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் ஆரோக்கியம் மேம்பட துவங்கும். நெடுநாளாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த உபாதைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். செய்தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. போட்டியாளர்கள் மறைமுகமாக தொல்லை கொடுத்து வருவார்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்களின் கடினமான பேச்சுக்களால் வருத்தமடைவீர்கள். இருப்பினும் பெரிதுபடுத்தமாட்டீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொறாமையுடனும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயல்களைச் செய்வீர்கள். புகழ், கௌரவம் இவற்றை எதிர்பார்க்காமல் கடமையே என்கிற ரீதியில் உழைப்பீர்கள். அறிமுகமில்லாதவர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ளக் கூடாது. மாறுபட்ட யோசனைகளால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். முக்கிய விழாக்களில் மட்டுமே கலந்துகொள்வீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளையும் தவிர்த்துவிடுவீர்கள். அரசு அதிகாரிகளுடனும் அனுசரித்துச் செல்வீர்கள். குழந்தைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீகச்சொத்து விஷயங்களில் உங்கள் பங்கு தானாக வந்துசேரும். சிலருக்கு புதிய வீட்டிற்கு குடிசெல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். 

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். சிறப்பான எதிர்காலத்திற்காக அஸ்திவாரம் அமைத்துக்கொள்வீர்கள். சிறிய அளவு முயற்சியிலும் பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள். வீடு, வாகனம் போன்ற அசையா அசையும் சொத்துகளை வாங்க முயற்சி செய்வீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் இருந்தாலும் அவைகள் உங்களை பாதிக்காது. நண்பர்களின் உதவி கிடைக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகள் இல்லாதோருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். ஆளுமைத்திறன் கூடும். அதிகாரம் செய்யும் பதவிகளில் அமர்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்பத்திலும் சந்தோஷம் நிறையும். சட்டப் பிரச்னைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்வீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். செய்தொழிலை கட்டாயமாக விரிவுபடுத்தும் சூழ்நிலை உருவாகும். மனதிற்கினிய பயணங்களைச் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்த ஆண்டு அதிகமாக உழைக்கவேண்டி வரும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் ஏற்படலாம். அலைச்சலுக்குப் பயந்து வேலைகளைத் தட்டிக் கழித்தால் வீண் பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். பணவரவுக்கு ஏந்த குறையும் வராது. வியாபாரிகளுக்கு நினைத்ததெல்லாம் நடக்கும். வியாபாரம் அபிவிருத்தியடையும். கூட்டுத்தொழில் செய்யவும் வாய்ப்புண்டாகும். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். வசதி, வாய்ப்பு அந்தஸ்து அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் அக்கறை காட்டவும். பாசன வசதிகளுக்காகச் சிறிது செலவு செய்வார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்துவார்கள். கால்நடைகள் மூலமும் நல்ல பலனை அடைவார்கள். சக விவசாயிகளும் உதவிகரமாக இருக்கும் ஆண்டாக இது அமைகிறது.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவார்கள். அதனால் பெயரும் அந்தஸ்தும் அதிகரிக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பும் அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த பதவிகளும் கிடைக்கும். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கலைத் துறையினர் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். புகழைத் தக்கவைத்துக்கொள்வார்கள். புதிய ஒப்பந்தங்களை தைரியமாக எடுத்து சிறப்பாக செய்து சாதனைகளாக மாற்றிவிடுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமைகளும் உண்டாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல்ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் என்று எதுவும் ஏற்படாது. மாணவமணிகள் விளையாடும் நேரத்தில் கவனமாக இருக்கவும். கல்வியில் நிலவும் மந்தமான நிலையை போக்க கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும். படித்த பாடங்களையே திரும்பத் திரும்ப படிக்கவும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.