கடகம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

கடகம் (CANCER)

(ஜூன் 21 – ஜூலை 22)

இது ஒரு பெண் ராசி. அத்துடன் நீர் ராசியும்கூட. இது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற சர ராசி வகையைச் சேர்ந்தது. இந்த ராசியின் உருவம் நண்டு. இதை D என்ற குறியீட்டால் குறிப்பார்கள். அதாவது, நண்டின் கால்கள்தான் இந்த உருவம். உடல் உறுப்புகளில் மார்பையும், வயிற்றுப் பகுதியையும் குறிப்பது இந்த ராசி. இந்த ராசிக்காரர்கள் வயிறு சம்பந்தமான பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகளால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். இது ஒரு ஊமை ராசியும்கூட. பிறவியில் பேச முடியாதவர்களுக்கு வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டோடு இந்த ராசி சம்மந்தப்பட்டிருக்கும். இந்த ராசியில் குருவானவர் உச்சம் பெறுகிறார். செவ்வாய் நீச்சம் பெறுகிறார். இதன் அதிபதி சந்திரன். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல், இவர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள்.

ஜனவரி 18

இன்று தொழிலாளர்கள் வேலையில் கவனமாக இருந்தால் சிறு விபத்து நேராமல் தப்பிக்கலாம். உங்களின் புரிந்து கொள்ளும் சக்தி ஓங்கியிருக்கும். கலைஞர்களுக்கு கவலை இல்லை. உடல் ஆரோக்கியத்தில் உத்திரவாதம் உண்டு. எந்தக் கஷ்டத்தையும் சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 5, 9
 

ஜனவரி 12 - ஜனவரி 18

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் மந்தமாக நடந்து வந்த காரியங்கள் சுறுசுறுப்பாக நடக்கும். அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணிபுரிவீர்கள். மேலதிகாரிகளால் சில சஞ்சலங்கள் உண்டானாலும் தைரியத்துடன் எதையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். எனவே புதிய முதலீடுகளைச் செய்யலாம். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தொண்டர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு புகழும் அங்கீகாரமும் கிடைக்கும். சக கலைஞர்களே உங்களுக்கு உதவுவார்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 15,16. 

சந்திராஷ்டமம்: 12,13,14.
 

ஜனவரி மாத பலன்கள்

(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

நிறைய யோசிக்கும் திறமையுடைய கடக ராசிக்காரர்களே நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும். குரு கேந்திரம் பெற்றிருப்பதால் உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான  பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.

திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள்  உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும்.

பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். தொகுதி மக்களைச் சந்திப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்களில் கையெழுத்திடுவீர்கள் பெரிய அளவிலான ஒப்பந்தகளும் கையெழுத்தாகும்.

மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

புனர்பூசம்:
இந்த மாதம் எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.

பூசம்:
இந்த மாதம் பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும்.

பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 29, 30

அதிர்ஷ்ட கிழமை: திங்கள், வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 2, 6

அதிர்ஷ்ட திசை: வடக்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
 

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த 2018 -ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் அனுகூலமான திருப்பங்களை காண்பீர்கள். புதிய சேமிப்பு திட்டங்களில் சேர்வீர்கள். உடல் சோர்விக்கும் சோம்பேறித்தனத்துக்கும் விடை கொடுப்பீர்கள். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளை இனம் கண்டு கொள்வீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடுவீர்கள்.  அனுகூலமில்லாத விஷயங்களையும் உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும். எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் உங்களின் தனித்தன்மையை இழக்க மாட்டீர்கள்.  

அடுத்தவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறும்படி நடந்துகொள்ள மாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் தூர பயணங்களையும் செய்ய நேரிடும். உங்கள் முயற்சிகளில் இருந்த இடற்பாடுகள் நீங்கி தைரியத்துடன் முன்னேறுவீர்கள். குடும்பத்தில் அவசியமான சுபகாரியங்களை உடனடியாக முடிப்பதற்கு புதிய கடன் வாங்க நேரிடும். குடும்ப சொத்துகளை அடமானம் கொடுக்க வேண்டிய நிலைமை எதுவும் ஏற்படாது. அரைகுறையாக விடப்பட்ட கட்டடப் பணிகள் மீண்டும் தொடரப்பட்டு அது நல்ல விதத்தில் முடிக்கப்படும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து செய்யும் செயல்கள் சிறப்பான வெற்றியைத் தேடி தரும். உங்கள் தர்ம
சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வருமானத்தின் ஒரு பகுதியை ஆலயத் திருப்பணிகளுக்கு செலவு செய்வீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உழைப்பும் வீண் போகாது. உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தாய்வழி உறவுகளிலிருந்த மனச் சஞ்சலங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும் உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும்.

அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிலும் சுலபமான முயற்சியில் நிறைவான வெற்றி வாய்ப்புகள் கூடிவரும். மனதில் பளு இன்றி உற்சாகமாக சஞ்சரிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் உதவியால் சிறப்பாக முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளும் உதவிகரமாக இருப்பதால் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.  சிலர் விரும்பிய இடமாற்றங்களைக் காண்பார்கள். விரும்பிய பதவி  உயர்வு உங்களைத் தேடி வரும். உழைப்பிற்கு ஏற்ற பொருளாதார அபிவிருத்தியையும் காண்பீர்கள். 

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி மனதில் உற்சாகம் தோன்றும். மேலும் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் பயிர்விளைச்சலில் ஆதாயங்களைப் பெறுவார்கள். தங்களுக்குகீழே வேலை செய்பவர்களால் நன்மையை அடைவார்கள். சக விவசாயிகள் மத்தியில் செய்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். குடும்பத்தில சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகளையும் அடைக்கும் அளவிற்கு பொருளாதார வசதிகள் மேம்படும். 

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன்  அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப் படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள் கலைத்துறையினர் பாராமுகத்தை பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். உடலையும் மனதையும் சிறப்பாக வைத்திட பிராணாயாமம் யோகா போன்றவைகளைச் செய்யவும். ரசிகர்களிடம் வெளிப்படையாக பேச வேண்டாம். அவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்து அவர்களது ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளவும்.

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களிலும் பங்கு கொள்வீர்கள். மாணவமணிகள் மற்றவர்களை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் கல்வி சம்பந்தப்பட்ட வேலைகளை நீங்களே  செய்து கொள்ள முயலுங்கள். அதனால் பெற்றோர் மற்றும் ஆசிரியரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவீர்கள். 

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.

***

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2017

(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் நீங்கள் சற்று கூடுதலாக முயற்சி செய்து இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். உங்களுக்கு இடையூறு செய்தவர்களை சமயம் பார்த்து ஒதுக்கி விடுவீர்கள். புதிய அசையும் சொத்துகளை வாங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் திருவிழா, விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளும் படிப்பில் சிறப்பாக வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். பழைய மன உளைச்சல்களிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். வீட்டிலும் வெளிலும் பெயர், அந்தஸ்து கூடும். திடீரென்று ஒரு புதிய மனிதரால் சிறப்பான நன்மை உண்டாகும். மந்தமாக நடந்து வந்த காரியங்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். ஆன்மிக தர்ம காரியங்களுக்கும் செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு வேறு ஊருக்குச் சென்று தொழில் புரியும் வாய்ப்புகளும் கிடைக்கும். சிலர் புதிய வீட்டிற்கு மாறுவார்கள். சிலர் இருக்கும் வீட்டிற்கு பராமரிப்புச் செலவுகள் செய்வீர்கள். உங்கள் செயல்களை குறுக்கு வழியில் செய்யாமல் நேர் வழியில் மட்டுமே செய்ய வேண்டிய காலகட்டமிது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் சுகசௌகரியங்கள் கூடும். அன்னை வழியில் நன்மைகள் கூடும். முரண்பாடாக நடந்து கொண்டிருந்த நண்பர்கள் இணக்கமாக மாறுவார்கள். கவலைகளை மறந்து சிறப்பாக பணியாற்றுவீர்கள். புதியவர்களை நம்பி எதையும் பேச வேண்டாம். மனதில் தெளிவு பிறக்கும். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்லது நடக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நீங்கள் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கத் தொடங்கும். வேண்டா வெறுப்போடு பழகிக் கொண்டிருந்த ஓர் உறவினர் தானாகவே விலகி விடுவார். மறைமுக எதிர்ப்புகளும் விலகி ஓடும். புதிய தொழில் செய்ய வாய்ப்புகளும் தேடி வரும். தேவைக்கேற்ற வருமானம் கடைசி நேரத்திலாவது வந்து சேர்ந்து விடும். சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டு ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய யுக்திகளைப் புகுத்தும் எண்ணங்கள் தோன்றும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே இருக்கும். அதனால் அவர்கள் போடும் உத்தரவுகளை சரியாகப் புரிந்து கொண்டு செயலாற்றவும். பணவரவு நன்றாகவே இருக்கும். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சீரான நிலையையே காண்பார்கள். கூட்டாளிகள் செய்யும் மறைமுகத் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருக்கவும். எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்காலக் கனவுகளும் திட்டங்களும் பலிக்க ரகசியமாகத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். போட்டியாளர்களின் சதியையும் உடனுக்குடன் அறிந்து கொண்டு தக்க மாற்று முயற்சிகளையும் செய்வீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சக உழைப்பாளிகளை அரவணைத்துச் செல்லவும். குடும்பத்தில் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். கால்நடைகளால் சில செலவுகளும் உண்டாகும். எதிர்கால வளர்ச்சிக்குத் திட்டமிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் தங்களின் வேலைகளை சரிவரச் செய்து முடிப்பார்கள். அனாவசிய பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். அதனால் "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் செயல்படவும். உட்கட்சி பூசல்களைக் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி பெறுவர். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களாலும் பாராட்டப்படுவீர்கள். அவர்களின் மூலம் சில வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும், வெளிவட்டாரத்தில் பழகும்போது கவனமாக இருக்கவும். உடன்பிறந்தோர் இணக்கமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆதரவும் நன்றாக இருப்பதால் இடர்களைச் சமாளிப்பீர்கள். மாணவமணிகளுக்கு இது சாதகமான ஆண்டாகும். வருங்காலத்திற்காக செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். இந்த ஆண்டு நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டி கடுமையாக உழைப்பீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.