மிதுனம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

மிதுனம் (GEMINI)

(மே 21 – ஜூன் 20)

இது ஒரு ஆண் ராசி. காற்று ராசியும்கூட. இது ஒரு உபய ராசியும் ஆகும். இது இரட்டை ராசியாதலால், இரண்டு கோடுகளால் குறிப்பார்கள். இரண்டு கோடுகள் போட்டு அதை இணைத்தால் இந்த ராசியின் உருவம் கிடக்கும். C-தான் இந்த ராசியின் குறியீடு. இந்த ராசிக்கு அதிபதி புதன். அதுவும் ஒரு இரட்டை கிரகம். இரண்டு மனைவி, இரண்டுவிதமான வருமானங்கள், இரட்டைக் குழந்தைகள் ஆகியவற்றைக் குறிப்பது இந்த ராசியும், புதன் கிரகமும்தான். இந்த ராசியும், புதன் கிரகமும் புத்திசாலித்தனத்தையும், புத்திக்கூர்மையையும் குறிப்பவை. பொதுவாகவே, காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் புத்திசாலித்தனத்தைக் குறிப்பவை. புதன் கிரகம் ஒரு நிலையில்லா தன்மை கொண்டது. இது சூரியனுக்கு முன்னும் பின்னும் நிலையில்லாமல் சென்றுகொண்டிருக்கும். ஆகவே, இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ஒரு நிலையில்லா சுபாவம் கொண்டவர்கள். எதிலும் ஸ்திரமான பிடிப்பு இல்லாதவர்கள். உடல் உறுப்புகளில் கைகள், தோள்பட்டை, நுரையீரல் ஆகியவற்றைக் குறிப்பது இந்த ராசி.

ஜூன் 28

இன்று மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக  இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில்  மதிப்பும், மரியாதையும் கூடும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

 

ஜூன் 23-29

(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பொருளாதாரத்தில் சீரான நிலைமை தென்படும். திட்டமிட்ட வேலைகளில் முடிவு சாதகமாகவே இருக்கும். உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் இருந்து வந்த பழைய மனஸ்தாபங்கள் குறைந்து வீண்பழிகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அவ்வப்போது சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். இருப்பினும் கொடுக்கப்பட்ட வேலைகளை நன்கு செய்து முடிப்பீர்கள்.வியாபாரிகள் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க நினைப்பர். வியாபார முன்னேற்றதிற்கான தடைகள் நீங்கும்.  விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

அரசியல்வாதிகளின் திட்டங்கள் யாவும் நிறைவேறும். மாற்றுக்கட்சியினரும் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவர். கலைத்துறையினர் வருமானம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.

பெண்மணிகளுக்கு பொருளாதாரத்தில் சீரான நிலைமை தென்படும். மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம் :  தினமும் 108 தடவை "ஸ்ரீராம ஜெயம்' என்று எழுதி வரவும்.

அனுகூலமான தினங்கள் : 24,25.

சந்திராஷ்டமம் :  இல்லை.

ஜூன் மாதம்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

அனுபவத்தையும், திறமையையும் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும்  மிதுன ராசியினரே நீங்கள் எந்த சூழ்நிலையிலும் விவேகத்தை கை விடாதவர்.  இந்த மாதம் கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்டிருந்த கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.
பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

அரசியல் துறையினருக்கு வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.

திருவாதிரை:
இந்த மாதம் உயர் பதவிகளும் கிடைக்க கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்:  புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2017

(மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பெற்றோர் வழியில் சிறப்பான உறவுகள் தொடரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சிகரமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருப்பதால் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய கஷ்டங்களை மறந்து புது நம்பிக்கையுடன் செயலாற்றத் தொடங்குவீர்கள். புதிய தொழில் முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டு விலக்குவீர்கள். மனஅமைதியுடன் பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடந்து உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்கும். அவ்வப்போது மன அழுத்தங்களுக்கு சிலர் ஆளாவார்கள். சகோதர சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். மேலும் எவருக்கும் வாக்கு கொடுப்பதோ உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ கூடாது. உணவு விஷயங்களில் கவனமாக இருந்து வயிறு சம்பந்தமான பிரச்னைகளைத் தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் உத்தியோக விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் நடந்தேறும். குழந்தை இல்லாதோருக்கு மழலை பாக்கியம் உண்டாகும். அனைவரும் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும். மனதில் நெருடிக் கொண்டிருந்த பழைய தவறு ஒன்று இந்த காலகட்டத்தில் வெளியில் வரமுடியாத அளவுக்கு மறைந்துவிடும். மனதை ஒரு நிலைப்படுத்த தியானம், யோகா போன்றவற்றைச் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் அனைவருக்கும் அறிவுரை வழங்கும் தகுதியைப் பெறுவீர்கள். உங்களது அவநம்பிக்கைகள் அகன்று தன்னம்பிக்கை கூடத்தொடங்கும். பொருளாதாரத்தில் முன்னேற புதிய வழிகளைத் தேடுவீர்கள். குறிப்பாக, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். நெருங்கியவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு அலுவலக வேலைகளில் குளறுபடிகள் எதுவும் ஏற்படாது. ஊதியம் சரியாகவே வந்து கொண்டிருக்கும். புதிய முயற்சிகளில் யோசித்து இறங்கவும். பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் கோபப்பட்டு எவரிடமும் பேசவேண்டாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை விலகும். புதிய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். சேமிப்புகள் கூடும். பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அதிக வருமானம் வரும் வியாபாரத்திற்கு மாறுவார்கள். விவசாயிகள் இந்த ஆண்டு பெரிய மாற்றம் எதையும் பெற முடியாமல் போகும். விளைச்சலில் குறைவு இருக்காது. பழைய குத்தகைகளை முடித்துக் கொடுத்த பிறகே புதிய குத்தகைகளை எடுக்கவும். தேவைக்கேற்ப வருமானம் வந்து கொண்டிருந்தாலும் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். இலக்கை நிர்ணயித்துக் கொண்டு தங்கள் எண்ணங்களைச் செயல்படுத்தவும். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டில் யோகபாக்கியங்கள் கூடும். புதிய வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பீர்கள். சக கலைஞர்களின் உதவிகளை சந்தேகக் கண்கொண்டு பார்க்காமல் புரிந்து பழகவும். இந்த ஆண்டு துறையில் புதிய அணுகுமுறைகளைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள் என்றால் மிகையாகாது. பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் மதிப்பு அதிகரிக்கும். இருப்பினும் தாய்வழி உறவினரால் சிறு குழப்பங்கள் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டி வரும். மாணவமணிகள் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் படிப்பில் ஈடுபடுவீர்கள். உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம். 

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டுவர சிரமங்கள் குறையும்.

***​

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உடல்நலம் சீராகத் தொடங்கும். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் உதவி செய்வீர்கள். அவர்களின் உதவிகளையும் பெறுவீர்கள். விருந்து கேளிக்கைகளிலும் கலந்து கொள்வீர்கள். செய்தொழிலை திறம்பட நடத்துவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்துச் செல்லவும். சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவார்கள். சிலருக்கு வசதியான வீட்டுக்கு மாறும் யோகமும் உண்டாகும். புதியவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். குழந்தைகளையும் அவர்களின் வழியிலேயே சென்று திருத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கடனில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தள்ளிப்போடவும். மனதில் இருந்த சோர்வுகள் அகலும். அறிவுப்பூர்வமான விஷயங்களில் விழிப்புணர்ச்சி உண்டாகும். உடன்பிறந்தோரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அறிவாற்றலும் புத்திசாலித்தனமும் கூடும். பணவரவுக்கு தடை வராது. புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நெடுநாளாகத் தள்ளிப்போட்டிருந்த குலதெய்வ வழிபாட்டினை இந்த காலகட்டத்தில் செய்வீர்கள்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களுக்கு கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். தேக ஆரோக்கியம் மேம்பட தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் சட்ட திட்டங்களை உருவாக்கி அதன்படி நடப்பீர்கள். புதிய வீடு வாங்கும் யோகத்தையும் பெறுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகளையும் வலுப்படுத்திக் கொள்வீர்கள். எதிரிகளை ஒடுக்கும் வல்லமை உண்டாகும். சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்கிற ரீதியில் பழமொழியை மனதில் வைத்துக் கொண்டு சக பணியாளர்களிடம் நடந்து கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைத்துப் பொருளீட்ட வேண்டிய ஆண்டாகும். அவ்வப்போது மேலதிகாரிகளின் தொந்தரவுகளுக்கு ஆளாவீர்கள். கொடுக்கப்பட்ட வேலைகளை கவனமாகச் செய்து வந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். சிலருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு இருப்பதால் உங்களின் மனச்சுமையை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். வியாபாரிகள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்குத் தகுந்த பலனைப் பெற முடியாது. கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே இருந்து வரும். கூட்டாளிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். விவசாயிகள் செலவுகளைக் குறைத்து வரவுகளைப் பெருக்கிக் கொள்ளவும். கால்நடைகளின் மூலம் சிறிது நன்மைகள் ஏற்படும். புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம்.

அரசியல்வாதிகள் மன சஞ்சலத்துடன் செயலாற்றுவீர்கள். கட்சி மேலிடத்தின் அவநம்பிக்கைக்கு ஆளாகி சிறிய தண்டனைகளையும் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு சற்று குறைய வாய்ப்பு உண்டாகலாம். கலைத்துறையினர் நிதானமான வளர்ச்சி அடைவார்கள். வருமானமும் படிப்படியாகத்தான் கூடும். நன்கு பரிசீலித்த பிறகே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். ஏனென்றால் ஏதேனும் சிக்கல்கள் உருவாகலாம். எச்சரிக்கைத் தேவை. பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இராது. வீண் பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு அவதிப்பட வேண்டாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் அதிக சிரத்தை  எடுத்து படித்தால்தான் வெற்றியடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். தேவையான உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். 

பரிகாரம்: துர்க்கை வழிபாடு உகந்தது.