சிம்மம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

சிம்மம் (LEO)

(ஜூலை 23 – ஆகஸ்ட் 22)

இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசியும் கூட. மேஷத்தைப்போல இதுவும் ஒரு நெருப்பு ராசி. இதன் அதிபதி சூரியன். இது சூரியனின் மூலத்திருகோண வீடு. சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. சூரியனின் கடக ராசிப் பிரவேசம் தட்சணாயணம் என்றும், மகர ராசிப் பிரவேசம் உத்தராயணம் என்றும் கூறப்படுகிறது. இந்த ராசிக்கு சிம்ம உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசி மனித இதயத்தின் இரண்டு வால்வுகளின் அமைப்பையே கொண்டிருக்கிறது. இது E என்று குறிக்கப்படுகிறது. மனித இதயம், பின் முதுகு, முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றை இந்த ராசி குறிக்கிறது.

ஆகஸ்ட் 18

இன்று பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
 

ஆகஸ்ட் 11 - ஆகஸ்ட் 17

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் படிப்படியான வெற்றிகளைத் தேடித்தரும். குடும்பத்தில் உறவினர்களால் சிறு குழப்பங்கள் ஏற்படலாம். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் நலம் சீராக இருக்கும். வீடு மாற்றம் செய்ய நினைப்பவர்கள் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம். 

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பணவரவும் நன்றாகவே இருக்கும். வியாபாரிகள் துணிந்து முதலீடுகள் செய்து எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். வாய்க்கால் வரப்பு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும். 

அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் வெற்றியைக் கொடுக்கும். தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். உங்கள் முயற்சிகள் வெற்றிப்பாதையை காட்டும். பெண்மணிகள் இல்லத்தில் நிலவும் சந்தோஷத்தால் உற்சாகம் அடைவார்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறையுடன் செயல்படவும். 

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

ஆகஸ்ட் மாதம்

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யும் குணமுடைய சிம்ம ராசியினரே இந்த மாதம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபத்தை தருவார். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.

பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர்.

கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களது கலைத்திறன் வளரும்.

மாணவர்கள் சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

மகம்:
இந்த மாதம் வீண் மனக்கவலையை  உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

பூரம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்:  தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 11 - 12

அதிர்ஷ்ட தினங்கள்: 4 - 5 - 31

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2017

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பலவிதங்களிலும் வருமானம் வரக்காண்பீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி படிப்படியாக அதிகரிக்கும். உங்களை ஒதுக்கியவர்கள் வரவேற்பார்கள். தீராத உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு உண்டாகும். உடன்பிறந்தோரிடம் இருந்த வீண் விரோதங்கள் மறைந்துவிடும். செய்தொழிலை அபிவிருத்தி செய்ய பயணங்களை மேற்கொள்வீர்கள். சோம்பலுக்கு இடம் தராமல் கடினமாக உழைப்பீர்கள். நமக்கேன் வம்பு என்று ஒதுக்கிவைத்திருந்த விவகாரங்களையும் தூசித்தட்டி எடுத்து முடித்துவிடுவீர்கள். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வந்து சேரும். தீயோரின் சேர்க்கையை அறவே தவிர்க்கவும். பெற்றோருக்காகச் சிறிது மருத்துவச் செலவுகளும் செய்யவேண்டி வரும். அரசு விவகாரங்களிலும் அரசாங்க அதிகாரிகளிடமும் அதிகம் நெருக்கம் வேண்டாம். குடும்பத்தில் திடீரென்று சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை இல்லாமல் தவித்தோருக்கு மழலை பாக்கியமும் உண்டாகும்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் இருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில், பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கொடுத்தவாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடுவீர்கள். தேவையான பணம் கைவந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி மெள்ள மெள்ள கூடும். உற்றார் உறவினர்களிடம் உங்கள் பேச்சுக்கு செல்வாக்கு கூடும். உங்கள் பணிகளைத் தடையின்றி நடத்தி முடிப்பீர்கள். பெற்றோர் வழியில் இருந்த மனவருத்தங்கள் நீங்கிவிடும். முன்காலத்தில் இழந்த கௌரவம் மறுபடியும் கிடைக்கும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். மூத்த சகோதர சகோதரிகளுக்கு பிரபல யோகங்கள் உண்டாகும். மேலும் முன்காலத்தில் காணாமல் போயிருந்த பொருள்கள் அதிர்ஷ்டவசமாக திரும்பக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். தக்க உடற்பயிற்சிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைத்தாலும் உழைப்புக்கேற்ற வருமானம் வராது. சிலருக்கு விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சக ஊழியர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். மேலதிகாரிகள் உங்களின் திறமையை பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகளை மறந்து சிறப்பான சூழ்நிலை நிலவக் காண்பீர்கள். வியாபாரிகள் வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருப்பார்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். தேவைக்கேற்ப சரக்குகளை மட்டுமே வாங்கி விற்பனை செய்வீர்கள். அநாவசியச் செலவுகளையும் தவிர்த்து விடுவீர்கள். நன்கு யோசித்த பிறகே புதிய முயற்சிகளில் ஈடுபடவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய பயிர்களைப் பயிர் செய்வீர்கள். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய விளைநிலங்களை வாங்கி பராமரிப்பீர்கள். பூச்சிக்கொல்லி மருந்து
களையும் சரியான நேரத்தில் பயன்படுத்தி லாபமடைவீர்கள். 

அரசியல்வாதிகளின் செயல்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும். பயணங்கள் வருமானத்தைக் கொடுக்கும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழத்தொடங்கும். அதை அனுபவிக்கவிடாமல் உங்கள் கட்சிக்காரர்களினாலேயே சில குறுக்கீடுகள் உண்டாகும். உங்கள் பொறுப்புகளை கச்சிதமாக முடிப்பீர்கள். கலைத் துறையினர் புதிய உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். துறைரீதியான பயணங்களைச் செய்வீர்கள். சிலருக்கு விருது பெறும் யோகங்களும் உண்டாகும். சக கலைஞர்களிடமிருந்து சிறப்பான உதவிகளையும் பெறுவீர்கள். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். அவரிடம் நல்லபெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இதுவரை தடைபட்டிருந்த சுப காரியங்கள் பூர்த்தியடையும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். கல்வியில் இருந்த தேக்க நிலை மாறி வளர்ச்சியைக் காண்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். உள்ளரங்கு விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். 

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும்.

***​

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2017​

இந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் தீராத பிரச்னையாக இருந்த விஷயம் தீர்ந்துவிடும். எதிர்காலத்திற்காகப் போடும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறக் காண்பீர்கள். போட்டியாளர்களின் சதிகளை புதிய யுக்திகளை மேற்கொண்டு தகர்ப்பீர்கள். பூர்வீகச்சொத்து சம்பந்தமாக பங்காளிகள் கொடுத்திருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும். வருமானமும் படிப்படியாக உயரத்தொடங்கும். மனதிற்கினிய பயணங்களை குடும்பத்துடன் மேற்கொள்வீர்கள். குழந்தைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படமாட்டார்கள். அதனால் அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நல்வழிப்படுத்தவும். மேலும் அனாவசியக் கடன்களையும் வாங்க வேண்டாம். கிடைத்தற்கரிய சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். மேலும் புதிய வாய்ப்புகளையும் நழுவவிடமாட்டீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் ஆகிய இரண்டும் கைகூடும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். மேலும் உங்கள் தைரியம் பளிச்சிடும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியம் மற்றும் மனவளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். நவீன ஆராய்ச்சிகளிலும் மனம் ஈடுபடும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் தன்னம்பிக்கையுடன் சோதனைகளை கடந்து
வெற்றிவாகை சூடுவீர்கள். சிறிய விஷயங்களையும் பெரிதாகப் பேசும் நண்பர்களை விலக்கி விடுவீர்கள். ரகசியங்களை பிறர் அறியாவண்ணம் காப்பீர்கள். செயல்களை குறுக்கு வழிகளைத் தவிர்த்து நேர் வழியிலேயே செய்வீர்கள். கடினமான விஷயங்களிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பீர்கள். உங்களின்கீழ் வேலை செய்பவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். துணிச்சலாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அனைத்து விஷயங்களையும் அனுபவ ரீதியாக அணுகுவீர்கள். வீடு மற்றும் வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்யவேண்டி வரும். உடன்பிறந்தோர் முழுமையான ஆதரவு தரமாட்டார்கள். அவர்களுக்காக சிறிது செலவு செய்யவும் நேரிடும். கடன் வாங்கக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டால் தேவைக்கு மட்டுமே வாங்கவும். குழப்பங்களைத் தவிர்க்க தலைமையை நாடுவீர்கள். தியானம், பிராணாயாமம் போன்றவையும் கற்றுக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது. உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட பணிகளை உடனுக்குடன் முடிக்கும் சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வும் தடையில்லாமல் கிடைக்கும். வருமானம் வளரத்தொடங்கும். சிறிய உழைப்பில் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். விழிப்புடன் இருந்து காரியமாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரிகள் போதிய அக்கறை செலுத்தி வியாபாரத்தைப் பெருக்கவும். வியாபாரத்தில் எந்த முடிவையும் கூட்டாளிகளிடம் ஆலோசித்த பின்னரே எடுக்கவும். இல்லையெனில் சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் அதிக செலவுகள் ஏற்படும். கால்நடைகளால் பெரிய லாபத்தை எதிர்பார்க்க முடியாது. பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கிடைக்கும். அதனால் கட்சி மேலிடத்திற்கு தகவல் அனுப்பும்போது அவர்களது எண்ணங்களை அறிந்து எச்சரிக்கையுடன் அனுப்பவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்ங்களைப் பெறுவதில் சற்று சிரமம் இருக்கும். அனைத்தையும் போராடியே பெறவேண்டி இருக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு உற்சாகம் தரும். பெண்மணிகளுக்கு முன்பிருந்த அனைத்துக் குழப்பங்களும் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலையை காண்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு இந்த ஆண்டு திருமணம் கைகூடும். குழந்தைபாக்கியத்திற்குத் தவம் கிடந்தவர்கள் அந்த வாய்ப்பினைப் பெறுவார்கள். மாணவமணிகள் கல்வியில் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற மதிப்பெண்களை அள்ளலாம். விளையாடும் நேரத்தில் காயம் படாமல் இருக்க, கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.