துலாம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

துலாம் (LIBRA)

(செப்டம்பர் 23 – அக்டோபர் 22)

இது ஒரு ஆண் ராசி. சர ராசி - காற்று ராசியும்கூட. இதன் அதிபதி சுக்கிரன். இதற்கு தராசு உருவத்தைக் கொடுத்தாலும், இதன் சின்னம் G. இது முதுகின் பின்பகுதி மற்றும் அதன் கீழ்ப்பகுதி (புட்டம்), சிறுநீரகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. சனி இந்த ராசியில்தான் உச்சமடைகிறார். சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வீடு. சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இந்த ராசியில் பிறந்தவர்கள், தன் கணவன் / மனைவி மேல் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்கு சுக்கிரன் அதிபதியாவதால், இவர்களுக்கு எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் சுபாவம் இருக்கும். எந்தப் பிரச்னையையும் சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்வதில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் லக்கினாதிபதியாக இருப்பதைப்போல், எட்டாம் வீட்டுக்கும் அதிபதியாகிறார். ஆகவே, இவர்களுடைய பிரச்னைகளுக்கு இவர்களே பொறுப்பு.

ஜூன் 28

இன்று சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ஜூன் 23-29

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் ஆசைகள் பூர்த்தியாகும். தெய்வ தரிசனம் செய்ய பயணங்களைச் செய்வீர்கள். அனைத்துச் செயல்களிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.  இடையூறுகளை மிகவும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். சுபச்செய்திகளால் மனம் நிம்மதியடையும். உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் வேலைகளை எளிதில் முடிப்பார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப்

பெருக்குவீர்கள். புதிய முதலீடுகளிலும் ஈடுபடலாம்.  விவசாயிகளுக்கு கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை அதிகரிக்கும். நிலத்தின் மீது போதிய கவனம் செலுத்தவும்.  

அரசியல்வாதிகள் பெயரும் புகழும் பெறுவீர்கள். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவும் குறைவாகவே இருக்கும்.

பெண்மணிகள் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளுக்கு மதிப்பெண்கள் கூடும். முயற்சிகளை அதிகரித்து முதல் மாணவராக முயல்வீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை  வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள் : 24,27.

சந்திராஷ்டமம் :  23.

ஜூன் மாதம்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

வாழ்க்கையில் முன்னேற எதிர் நீச்சல் போடவும், தயங்காத துலா ராசியினரே நீங்கள் அனைவரையும் சரிசமமாக மதிப்பவர்கள். இந்த மாதம் வீண் அலைச்சல் இருந்தாலும் பணவரவு நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் இருந்து வந்த தாமதம் நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள். பெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அரசியல் துறையினருக்கு சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும்,  பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மெத்தனமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது.

சுவாதி:
இந்த மாதம் பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது. வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும். புதிய இடங்களில் திறமைகளை வெளிப்படுத்த தயங்க வேண்டாம்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் விரும்பாத இடமாற்றம்  உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில்  எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால்  நன்மையும் உண்டாகும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2017

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் திடீர் சொத்துச் சேர்க்கை உண்டாகும். செய்தொழிலில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். அலைந்து திரிந்து காரியங்களைச் செய்வீர்கள். வாய்ப்புகள் கைநழுவிப் போகாமல் பார்த்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் பணப்பற்றாக்குறை வராது. குறுக்கு வழிகளிலும் வருமானம் வரும். உங்கள் செயல்களை வேகமாகச் செய்தாலும் விவேகத்துடன் பணியாற்றுவீர்கள். எதிரிகள் தலைதூக்கினால் தலையில் தட்டி உட்கார வைத்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகவே அமையும். மேலும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றையும் செய்வீர்கள். குழந்தைகளும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் வாக்கு கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது. உங்கள் பெயரில் பணம் வாங்கியும் கொடுக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கை வளர்ச்சிப் பாதையில் செல்ல எத்தனிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் நீண்டகால திட்டங்கள் நிறைவேறக் காண்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்திவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்கள். உங்களின் முயற்சியே உங்களின் ஆயுதம் என்று காரியமாற்றுவீர்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். நூதன முயற்சிகளையும் செயல்படுத்துவீர்கள். மாற்றி யோசித்து செயல்களைச் செய்து சாதனைகளைப் புரிவீர்கள். குடும்பத்தினரிடையே இணக்கங்கள் கூடும். புதிய படைப்புகளைப் படைப்பீர்கள். புதிய அனுபவங்களையும் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு தக்க அறிவுறைகளையும் வழங்குவீர்கள். குழந்தைகளால் இருந்த பிரச்னைகள் மாறி சீரான நிலை உண்டாகும். உங்களின் தெய்வ பலம் அதிகரிக்கும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். இந்த காலத்தில் உங்கள் மனதிலிருந்த பாரம் தீர்ந்து லேசானது போன்று உணர்வீர்கள். போதும் என்கிற மனம் அனைத்து விஷயங்களிலும் உண்டாகும். பூர்வீகச் சொத்திலிருந்து வந்த வில்லங்கங்கள் மறையும். வழக்கு வியாக்யானங்களும் ஏற்படாது காக்கப்படுவீர்கள். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அனைத்து விஷயங்களிலும் உங்களை இறையருள் தொடரும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடம் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்வார்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வேலையில் புதுப்புது பிரச்னைகள் தோன்றினாலும் அவற்றை வெற்றிகொள்வீர்கள். அலுவலகச் சூழல் உங்களுக்கு அனுகூலமாகவே இருக்கும் காலகட்டம் இது. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நல்ல நிலையை காண்பார்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். அதனால் மேலும் முதலீடுகள் செய்வதற்கான எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் உங்களை ஊக்கப்படுத்துவார்கள். உங்கள் தன்னம்பிக்கை பலப்படும். ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். கொள்முதலில் அதிக லாபத்தினை காண்பீர்கள். விவசாயத் தொழிலாளர்களும் உங்களின் மனமறிந்து நடப்பார்கள். 

அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளிடமும் கட்சித் தலைமையிடமும் கவனமாக இருக்கவும். கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம். கலைத்துறையினர் சற்று கடினமாகவே உழைப்பார்கள். துறையில் நிபுணத்துவத்தை எட்டுவீர்கள். எந்தப் பிரச்னையையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் அனுசரித்துச்செல்வீர்கள். குடும்பத்தினருடன் மனத்தாங்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக நடந்துகொள்ளுங்கள். வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். மாணவமணிகள் கல்வியில் படிப்படியாக முன்னேற்றங்களைக் காண்பீர்கள். பயிற்சிகளைச் சரியாகச் செய்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். கணினி பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள். உடல்நலம் சிறப்பாகவே இருக்கும். 

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.

***​

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

இந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். இதனால் பகைமை பாராட்டுபவர்களையும் நண்பர்களாக்கிக்கொள்வீர்கள். உங்கள் பேச்சாற்றல் கூடும். வருமானம் படிப்படியாக உயரும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் தேடிவரும். கடின உழைப்பை மேற்கொண்டாலும் தேவையான ஓய்வெடுத்துக்கொள்வீர்கள். அறிமுகமில்லாதோரின் ஆதரவும் நன்மைகளைத் தேடித்தரும். செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். உங்கள் செல்வாக்கும் உயரும். வம்பு வழக்குகள் சாதகமான முடிவுக்கு வரும். உடன்பிறந்தோர் கோபப்பட்டாலும் நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. செயல்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல ஆற்றல் உண்டாகும். சிறிது சிரமங்களுக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் புதிய அனுபவங்களையும் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கென தனியான இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்ப குழப்பங்களைத் தீர்க்க, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பயன்படும். பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பித்து உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். செய்தொழிலை மேம்படுத்த அடிக்கடி பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். அனைத்துச் செயல்களிலும் மனத் தைரியமும் உறுதியான சிந்தனைகளும் உருவாகும். உங்கள் முயற்சிகளில் பங்குகொள்ள பலர் முன்வருவார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களும் பணிவாக நடந்துகொள்வார்கள். உடல் நலமும் மேன்மையாகவே இருக்கும். யோகா பிரணாயாமம் போன்றவற்றையும் கற்றுக்கொள்வீர்கள். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். களவுபோயிருந்த பொருள்களும் திரும்பக் கிடைக்கும். தீயவர்களின் சகவாசத்தை விலக்கிவிடுவீர்கள். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம். தாழ்வுமனப்பான்மையை தவிர்த்துவிடுங்கள். எவருடனும் வீண் விவாதமோ, வாக்குவாதமோ வேண்டாம். எவருக்கும் இந்த காலகட்டத்தில் கடன் கொடுக்க வேண்டாம். அதோடு உங்கள் பெயரிலும் பணம் வாங்கிக் கொடுக்கக்கூடாது.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்க சற்று அதிகமாக உழைக்கவேண்டி இருக்கும். இருப்பினும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதால், வேலைப்பளு சற்று குறையும். கோரிக்கைகள் நல்லபடியாக நிறைவேறும். இந்த ஆண்டு இடமாற்ற முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் பணப் பிரச்னையும் மனக்கஷ்டமும் அடைவார்கள். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வெளியிலிருந்து வரக்கூடிய பணம் விஷயமாக சற்று சிரமம் இருக்கும். கடன் வாங்காமல் தொழிலில் சிக்கனம் கடைப்பிடிக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்காது. கால்நடைகளும் எதிர்பார்த்த வருமானத்தைத் தராமல் போகலாம். பழைய குத்தகைகளைச் சரிவர முடித்து அதற்கான லாபத்தைப் பெறுவதே சிறப்பு. சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கத் தாமதமாகும். அதனால் யாரையும் நம்பி எந்த வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். உங்கள் பணிகளை மற்றவர்கள் செய்யும்போதும் கவனமுடன் இருங்கள். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு சற்று ஆறுதலைக் கொடுத்தாலும் தொடர்ந்து கடினமாக உழைக்கவேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீர்படும். சக கலைஞர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் திருமணம், வேலை, குழந்தைப்பேறு என்று எல்லா நிலைகளிலும் சிறிது காலம் சிரமத்தைக் காண்பார்கள். பேசும்போது சுமுகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வீண்பழி மற்றும் கெட்ட பெயர் ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள். மாணவமணிகள் கல்வியில் அதிக அக்கறை செலுத்தவும். எந்த பாடத்தையும் பலமுறை படித்து மனப்பாடம் செய்யவும். 

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.