மீனம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***​

மீனம் (PISCES)

(பிப்ரவரி 19 – மார்ச் 20)

இது ராசி மண்டலத்தின் கடைசி ராசி; இது ஒரு பெண் ராசி. உபய ராசி. இரட்டை ராசி. இதன் உருவம் இரண்டு மீன்கள். இதன் சின்னம் L. இரண்டு மீன்கள் எதிர் எதிர் திசையில் பிணைத்திருப்பது போன்றது. உடல் உறுப்புகளில் கால்களைக் குறிக்கிறது. இங்கு சுக்கிரன் உச்சம் பெறுகிறார். புதன் நீச்சம் பெறுகிறார். இந்த ராசியானது சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோருக்கு நட்பு ராசி. இங்கு சூரியன் இருந்தால், ரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள் வரக்கூடும். ஏனெனில், சூரியன் 6-ம் வீட்டு அதிபதி அல்லவா? இங்கு சந்திரன் இருந்தால் சிலர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகக்கூடும். செவ்வாய், இருந்தால், கால்களில் எலும்பு முறிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். புதன் இருந்தால், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும். குரு இருந்தால், கால்களில் வீக்கம், அடிவயிற்றில் கட்டிகள் போன்றவை ஏற்படக்கூடும். சனி முடக்குவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஜூன் 28

இன்று நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

 

ஜூன் 23-29

(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் தெளிவு பிறக்கும். உங்களின் மதிப்பு மரியாதை உயரும். மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். ஊதிய உயர்வுக்கு வழி உண்டாகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் காண்பீர்கள். விவசாயிகளுக்கு லாபத்திற்குக் குறைவு இருக்காது. புதிய குத்தகைகளை எடுக்க முயற்சிக்கலாம்.  

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு அவ்வளவாகக் கிடைக்காது. அதனால் கவனத்துடன் செயலாற்றவும்.  கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். பெண்மணிகளுக்கு சுமாரான வாரம். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவ மணிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.  

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு சுபிட்சம் அடையுங்கள்.

அனுகூலமான தினங்கள் :  28,29.

சந்திராஷ்டமம் :  இல்லை.

ஜூன் மாதம்
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றிபெறும் மீன ராசியினரே நீங்கள்  மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்பவர். இந்த காலகடத்தில் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். அத்துடன் பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். சக ஊழியர்கள் மூலம் நீங்கள் எடுத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும்.

கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். அரசியல்துறையினருக்கு பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.  எதிர்ப்புகள்  விலகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும்.

ரேவதி:
இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கப்பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் நேர்மறையாக சிந்திப்பீர்கள். குழந்தைகளால் நன்மைகள் உண்டாகும். அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளிலும் சேர்வார்கள். சிலர் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்கவைப்பீர்கள். வெறுத்து ஒதுக்கியவர்கள் உங்களிடம் நெருங்கிப் பழக வருவார்கள். தெய்வ அருளால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்கிற நிலையில் காரியங்கள் தடைகளுக்குப்பிறகு இறுதியில் வெற்றி பெறும். மேலும் வெளியூர் பயணங்கள் செய்யும்போது சிறிய இடர்பாடுகள் தோன்றி மறையும். அரசு வழியில் எடுக்கும் முயற்சிகள் தடையுடன் நிறைவேறும். நண்பர்களின் அனாவசிய சந்தேகங்களுக்கு உட்பட நேரிடலாம். மறைமுக எதிரிகளின் எதிர்ப்புகள் இருந்தாலும் தடைகளுக்குப்பிறகே வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும். மனதில் முள்ளாய் உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயம் முடிவுக்கு வரும். தேவைக்கேற்ப வருமானங்கள் வந்து கொண்டிருப்பதால் எந்தச் செலவையும் சமாளித்து விடுவீர்கள் என்றால் மிகையாகாது. 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் நல்லவர்களைத் துணைகொண்டு உங்கள் காரியங்களைச் செய்வீர்கள். அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். சிலர் புது வீட்டிற்குக் குடிபோவார்கள். புத்திசாலித்தனமாகப் பேசுவீர்கள். உடன்பிறந்தோர் முன்னேற்றம் அடைவார்கள். உங்கள் நம்பிக்கை வீண்போகாது. வழக்குகளால் சாதகமான தீர்ப்புகள் கிடைத்து சந்தோஷமடைவீர்கள். சொன்ன சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். கனிவாகவும் கறாராகவும் பேசி காரியங்களைச் சரியாக முடிப்பீர்கள். உங்களை மதிப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பழகுவீர்கள். மாற்றுக் கருத்துடையோரையும் உங்கள் பேச்சினால் வசீகரித்து விடுவீர்கள். தெய்வ நம்பிக்கையாலும் பிரார்த்தனைகளாலும் எண்ணங்கள் இந்த காலகட்டத்தில் பூர்த்தியாகும் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் சலிப்பின்றி உழைப்பீர்கள். உங்கள் திறமை ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் பணிகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்களை அரவணைத்துச் சென்று அவர்களின் உதவிகளைப் பெறுவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராகவே இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்மையாகவே முடிவடையும். கடையை சீரமைப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைக்க வேண்டாம். அதிக முதலீடுகள் செய்து புதிய முதலீடுகளிலும் ஈடுபடவேண்டாம். கூட்டாளிகளிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் நன்றாக இருக்கும். நீர்வரத்தினை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். தடையின்றி வருமானம் வரும். பழைய குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். உங்களின் திறமை அதிகரிக்கும். கரும்பு விவசாயிகள் சற்று கூடுதலான வருமானத்தைக் காண்பார்கள். 

அரசியல்வாதிகள் இந்த ஆண்டில் புதிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணவருவாய் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளை கட்சி மேலிடத்தை கலந்தாலோசித்த பிறகே எடுக்கவும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். கலைத் துறையினர் வேறு ஊர்களுக்குச் சென்று வளர்ச்சியடைவார்கள். பயணங்கள் செய்வதன் மூலமும் உங்கள் ஆற்றல் வெளிப்படும். வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சேமிப்புகள் கூடும் காலகட்டமிது. புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். பெண்மணிகள் கணவருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து இணக்கமான உறவைக் காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் கூடும். இல்லத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். மனதில் எண்ணுவதையெல்லாம் வெளியில் பேசவேண்டாம். மாணவமணிகள் இந்த ஆண்டு புதிய நல்ல நண்பர்களைப் பெறுவார்கள். அமைதியான தோற்றத்துடன் காட்சி அளிப்பீர்கள். ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்பீர்கள். 

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

***

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

இந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைவரும் உங்களை விரும்புவர். பேச்சில் இனிமை கூடும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி வெற்றியடையும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தனித்தன்மை வெளிப்படும். திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் உருவாகும். இக்கட்டான தருணங்களில் சமயோசித புத்தி கை கொடுக்கும். ஓடி ஆடி வேலை செய்தவர்கள் ஓரிடத்தில் நிலைத்து வேலை பார்க்கும் நிலைமை உருவாகும். கடினமாக உழைத்தாலும் தேக ஆரோக்கியத்தில் எந்தக் குறைவும் உண்டாகாது. மதியூகி என்று அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். அவசியமில்லாத விஷயங்களில் தலையை நுழைக்கமாட்டீர்கள். நல்லது கெட்டது இரண்டையும் பகுத்தறிந்து தீயவற்ற ஆரம்பத்திலேயே ஒதுக்கிவிடுவீர்கள். புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பெற்றோரின் ஆதரவும் அரவணைப்பும் முழுமையாகக் கிடைக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்வீர்கள். பழைய காலத்தில் காணாமல் போன பொருள்கள் இந்த காலகட்டத்தில் திரும்பக் கிடைக்கும் என்றால் மிகையாகாது. 

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் சிறிது உணர்ச்சிவசப்படுவீர்கள். அனைத்து விஷயங்களையும் பொறுமையுடன் அணுகவும். புதிய முயற்சிகளை அவசரப்பட்டு செயல்படுத்த வேண்டாம். கடினமாக உழைக்க வேண்டிய காலகட்டமிது. சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து செயல்படும். சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் முக்கிய விஷயங்களுக்காக கடன்கள் வாங்க நேரிடும். வண்டி வாகனம் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். நண்பர்களும் உற்றார் உறவினர்களும் நம்பிக்கை துரோகம் செய்வார்கள். அதனால் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நேர்முக மறைமுக போட்டிகளையும் சாதுர்யமாக சமாளிக்கவும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வயிறு சம்பந்தபட்ட உபாதைகள் இருக்கும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சையும் நடக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் சுபச் செலவுகள் உண்டாகும். தொலைதூர புனிதப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் தானாகத் தேடிவரும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன்களை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்வார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து சென்று வேலை பார்ப்பவர்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து வாழும் பாக்கியமும் கிட்டும். விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் பலனளிக்கும். சக ஊழியர்களின் நட்பும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமாராக இருக்கும். கஷ்டகாலத்தில் பழைய சேமிப்புகள் கைகொடுக்கும். நண்பர்களிடம் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருந்து செயலாற்றவும். வேறு ஊர்களுக்கு சென்று வியாபாரம் செய்யும் நிலைமை சிலருக்கு ஏற்படலாம். விவசாயிகள் விளைச்சலைப் பெருக்கி லாபத்தை அள்ளுவீர்கள். விளைபொருள்களின் விற்பனை மிகவும் நன்றாக இருக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். வெகுநாள்களாக தள்ளிப்போட்டிருந்த வீடு, நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

அரசியல்வாதிகள் அனைவரிடமும் அனுசரித்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும். வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும். தொழிலில் தன்னம்பிக்கையுடனும் சுறுசுறுப்புடனும் ஈடுபட்டு திறமைகளை வெளிக்கொணர்வீர்கள். ரசிகர்களின் ஆதரவுண்டு. பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எனவே கவனம் தேவை. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்ச்சியடைவீர்கள். மாணவமணிகளின் புத்தி கூர்மையடையும். முதல் மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். போட்டிகளில் வெற்றிபெற்று புகழும் பாராட்டும் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்புகளும் உண்டாகும்.

பரிகாரம்: அம்பாள் வழிபாடு உகந்தது.