விருச்சிகம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

விருச்சிகம் (SCORPIO)

(அக்டோபர் 23 – நவம்பர் 21)

இது ஒரு பெண் ராசி. இதன் அதிபதி செவ்வாய். இது ஒரு நீர் ராசி; ஸ்திர ராசியும்கூட. தேள்தான் இந்த ராசியின் உருவம். இதனுடைய சின்னம் H. இது பிறப்பு உறுப்புகளைக் குறிக்கிறது. இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால் மிக்க சுறுசுறுப்பு உடையவராகவும், எதையும் நேருக்கு நேர் பேசும் குணம் கொண்டவராகவும் இருப்பர். எந்தத் தடங்கல் வந்தபோதும், எடுத்த காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக இருப்பர். இந்த ராசிக்கு 6-ம் ராசி மேஷம். அதனால், மேஷத்தில் உள்ள கிரகங்கள் உடல் நலத்தைக் கொடுக்கக்கூடும். செவ்வாயே 1-ம் வீட்டுக்கும் 6-ம் வீட்டுக்கும் அதிபதியாவதால், செவ்வாயே உடல் நலத்தைப் பாதிக்கக்கூடும்.

ஜூன் 28

இன்று பின்தங்கிய  நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரித்து மிளிரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

ஜூன் 23-29

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.  மதிப்பு மரியாதை உயரும். பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். செய்தொழிலில் படிப்படியாக வளர்ச்சியடைவீர்கள். குழந்தைகளால் ஏற்பட்ட டென்ஷன் குறையும். உடன் பிறந்தோரால் நன்மை உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்லவும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு சிறு பிரச்னைகள் தோன்றி மறையும்.  மேலதிகாரிகள் உங்களிடம் அனுகூலமாகவே நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடங்கள் இராது. வழக்குகளில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளை வாங்கி மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அனைவரையும் திருப்தி படுத்தும். கடினமான வேலைகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு அதிகரிக்கும். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றதைக் காண்பார்கள். பெற்றோரை அனுசரித்துச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது.

அனுகூலமான தினங்கள் : 23,28.

சந்திராஷ்டமம் :  24,25.

ஜூன் மாதம்
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த விருச்சிக ராசியினரே உங்கள் பேச்சில் வேகம் இருக்கும். இந்த மாதம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும்.  மனோ தைரியத்தை தரும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து  திருப்திகரமாக இருக்கும்.  அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  அதிக உழைப்பின் மூலம்  லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணியிட மாற்றம் - பதவி உயர்வு தங்களைத் தேடி வரும்.

குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நண்பர்களிடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை.

அரசியல் துறையினருக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எந்த விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள். மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம்  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.

அனுஷம்:
இந்த மாதம் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல்  கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கேட்டை:
இந்த மாதம் எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும். புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் ஏற்படும்.  எனினும் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை.  மற்றவர்கள் செய்கைகளால்  மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன், நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2017

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வீர்கள். சகஜமாக அனைவரிடமும் பழகுவீர்கள். நோய்கள் தீர்ந்து ஆரோக்கியமாக காட்சியளிப்பீர்கள். குடும்பத்தில் இழுபறியான விஷயங்களும் முடிவுக்கு வரும். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கொண்டு செல்வம் சேர வழிவகுப்பீர்கள். சமூக சேவைகளில் உங்களை விளம்பரமில்லாமல் ஈடுபடுத்திக்கொள்வீர்கள். பாராட்டுகள் தேடிவரும். நல்லவர்களை நண்பர்களாகத் தேடிப் பெறுவீர்கள். செயலாற்றுவதற்குப் பலமுறை யோசிப்பீர்கள். முன்வைத்த காலை பின்வைக்கமாட்டீர்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உடன்பிறந்தோரின் முன்னேற்றத்துக்காக உழைப்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். உங்களின் பேச்சு வன்மையால் பெரியோர்களையும் கவர்ந்துவிடுவீர்கள். நெடுநாளாக தள்ளிப்போயிருந்த சுபகாரியங்கள் இந்தக் காலகட்டத்தில் நடந்தேறும். மேலும் குழந்தைகளை அயல்நாட்டுக்குச் சென்று படிக்கவைப்பீர்கள். குழந்தைபாக்கியம் இல்லாதோருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் செல்லவும். அவர்களின் சிறு தவறுகளை கண்டும் காணாமலும் இருங்கள். 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலும் சுயகட்டுப்பாட்டுடனும் நடப்பீர்கள். பிரபலமானவர்களின் நட்பும் ஆதரவும் தேடிவரும். தாயின் வழியில் நலன்கள் வரக் காண்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளும் குறையும். மனதில் இருந்த சஞ்சலங்களும் விரக்தியும் நீங்கும். படிப்படியாக சேமிப்பு உயரும். அசையாச் சொத்துகள் மூலமாகவும் வருமானம் வரும். இழந்த புகழ், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புதிய ஆலயங்களுக்கும் சென்று வருவீர்கள். தாமதித்துவந்த சுபகாரியங்களும் துரிதமாக நடக்கும். உங்கள் மீது போடப்பட்டிருந்த பொய் வழக்குகளிலிருந்தும் விடுபடுவீர்கள். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தேவையான உதவிகளை அவர்கள் தக்க நேரத்தில் செய்வார்கள். ஏளனமாகப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் உங்கள் வாழ்க்கைமுறை சீரடையும் என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு அதிகரிக்கும். அதனால் கடினமாக உழைப்பீர்கள். அலுவலகத்தில் இருக்கும் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்துகொண்டு அவர்களின் நட்பைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். நீங்கள் விரும்பிய இடமாற்றம் இந்த ஆண்டு கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவு வராது. வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராக நடக்குமென்றாலும் எந்த அதிரடி மாற்றத்தையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். கூட்டாளிகளையும் அனாவசியமாகச் சந்தேகப்பட வேண்டாம். பழைய எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். எனினும் கவனமாக இருக்கவும். இந்த ஆண்டு அலைந்து திரிந்து வியாபாரம் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். இதனால் கால்நடைகளை வாங்கி மகிழ்வீர்கள். பாசனத் துறையிலும் கவனம் செலுத்துவீர்கள். உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவதற்கு அதிகம் கஷ்டப்பட நேரிடும். சக விவசாயிகளும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார்கள். 

அரசியல்வாதிகள் வளர்ச்சியைக் காண்பார்கள். மாற்றுக் கட்சியினரின் தொல்லைகள் இராது. மகிழ்ச்சியுடன் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். பொதுச் சேவையில் பெயர் புகழ் பெறுவீர்கள். தொண்டர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினருக்கு பாராட்டும் விருதுகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சிறிது காலதாமதம் ஏற்படும். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு கூடுதல் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் நன்றாக இருப்பதால் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பும் இருக்கும். பணவரவு சரளமாக இருக்கும். மாணவமணிகள் எதிர்வரும் இடையூறுகளைச் சமாளித்து வெற்றிவாகை சூடுவீர்கள். உடற்பயிற்சிகளைச் செய்து மனப்புழுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். 

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

***​

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

இந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை உயரும். உங்கள் காரியங்கள் அனைத்தும் நன்மையாகவே முடிவடையும். உங்களை ஒதுக்கிவைத்தவர்கள் மறுபடியும் உங்களிடம் வந்து சேர்வார்கள். நண்பர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பக்குவமாகப் பேசி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். "கொக்குக்கு ஒன்றே மதி'' என்கிற ரீதியில் செயல்களில் கவனம் சிதறாமல் செயல்படுவீர்கள். வெளியிடங்களில் கௌரவமாக நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். நெடுநாளாக வாட்டி வதைத்துக்கொண்டிருந்த வியாதிகள் முழுவதுமாகத் தீர்ந்துவிடும். வருமானம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். மிகவும் நலிந்தவர்களுக்கு பணஉதவி செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வ காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். குலதெய்வ வழிபாட்டையும் இந்த காலகட்டத்தில் மேற்கொள்வீர்கள். குழந்தைகளின் வளர்ச்சியும் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே இருக்கும்.  

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எதிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. நண்பர்கள் உற்றார் உறவினர்களாலும் சில பிரச்னைகள் ஏற்படும். அதனால் அவர்களிடம் கூடிய வரை வீண் சர்ச்சைகளையும் வாக்குவாதங்களையும் தவிர்த்து நேசத்துடன் பழகவும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உழைப்பைக் கூட்டிக்கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. நல்ல நெறிமுறைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். எதிலும் வேகத்தைக் குறைத்துக்கொள்வதோடு விவேகத்தையும் கூட்டிக்கொண்டு செயல்பட்டால் தோல்விகளையும் தவிர்த்து வெற்றிகளைக் காணலாம். சிலருக்கு குடும்பத்தில் சற்று கூடுதலான அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். கண், வயிறு போன்றவற்றில் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழப்பங்களையும் சஞ்சலங்களையும் தவிர்க்க தனிமையை நாடுவீர்கள். சமயோசித புத்தியால் எதிர்வரும் இடையூறுகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திலும் சுபச் செலவுகளைச் செய்வீர்கள். உங்கள் செயல்களை தகுந்த முறையில் திட்டமிட்டு கச்சிதமாக முடிக்க முயற்சி செய்யவும். வீடு மனை போன்ற ஸ்திர சொத்துக்களை வாங்குவதையும் தள்ளிவைக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முழுமையாகச் செய்து முடிக்க முயற்சி செய்யவும். மேலதிகாரிகளின் வெறுப்புகளுக்கு ஆளாகாமல் தப்பிப்பீர்கள். பிரச்னைகளும் தடைகளும் வராமல் இருக்க சற்று ஒதுங்கியே இருக்கவும். பணியாற்றும் நேரத்தில் பொறுமை தேவை. அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளவும். சக ஊழியர்களை பெரிதாக நம்ப வேண்டாம். வியாபாரிகள் போதிய அக்கறை செலுத்தி வியாபாரம் செய்வர். எந்த முடிவுகளையும் கூட்டாளிகளை கலந்தாலோசித்த பின்னரே எடுக்கவும். வெற்றிகள் தாமதமாக வரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்களைச் செயல்படுத்துங்கள். விவசாயிகள் உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கால்நடை பராமரிப்புகளுக்காக செலவுகள் செய்வீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு சில நேரங்களில் கட்சித் தலைமையின் ஆதரவு கிடைக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். எதிரிகளின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் காலதாமதம் ஏற்படும். இதனால் சில இடையூறுகளும் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது. கலைத்துறையினரின் பெயரும் புகழும் அதிகரிக்கும். நல்ல பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கவும். புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும். பல நாள்களாக வராமலிருந்த தொகை தற்போது கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்து நடந்துகொள்வர். குடும்ப விஷயங்களில் யோசித்து நடந்துகொள்ளவும். பிறருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை பெறுவர். பெற்றோர், ஆசிரியரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டொழித்து சுறுசுறுப்பாக பாணியாற்றுவீர்கள். விளையாட்டுகளில் சாதனை செய்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.