ரிஷபம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

 

ரிஷபம் (TAURUS)

(ஏப்ரல் 20 – மே 20)

இது ஒரு பெண் ராசி. பூமி ராசியின் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது ஒரு ஸ்திர ராசியும்கூட. இதற்கு அதிபதி சுக்கிரன். இது மாடு உருவம் கொண்ட ராசி. இதை B என்ற குறியீட்டால் குறிப்பார்கள். ஒரு மாடு இரண்டு கொம்களுடன் கூடிய உருவமாக

இருக்கும். இது ஒரு நாலு கால் ராசி. சந்திரன் இங்குதான் உச்சம் பெறுகிறார். பொதுவாக, சனியானவர் கெடுதல் செய்யும் கிரகமாகவே கருதப்படுகிறார். ஆனால், ரிஷபத்துக்கு அவர் ஒன்பது, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாவதால், யோககாரகனாகக் கருதப்படுகிறார். இந்த ராசி, விவசாயத்தைக் குறிக்கும் ராசி. இதன் அதிபதியான சுக்கிரன், கலைகள், சினிமா துறை, கால்நடைகள் ஆகியவற்றுக்கு அதிபதி. உடல் உறுப்புகளில் இந்த ராசி கழுத்து, தொண்டை ஆகியவற்றைக் குறிக்கும்.​

ஜூன் 28

இன்று எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.   பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

 

ஜூன் 23-29

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இந்த வாரம் சற்று செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் சிறிய காலதாமதமேற்படலாம். உஷ்ண ஆதிக்க உபாதைகளால் வயிற்று வலியும் உண்டாகலாம். வெளியூர் பயணங்களில் நன்மைகளை எதிர்பார்க்க வேண்டாம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலும் காலத்தைப் பாராமல் சற்று அதிகமாக  உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். கொடுக்கல்

வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவும். விவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். சிலருக்கு வழக்கு களால் மனஉளைச்சல் ஏற்படும்.

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார்கள். பணவரவு நன்றாக இருக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். பெண்மணிகள் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு சுமுக நிலையை உண்டாக்கவும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். ஆகவே படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.

பரிகாரம் :  சனிபகவானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள் : 23,25.

சந்திராஷ்டமம் :  இல்லை.

ஜூன் மாதம்
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

எதையும் திட்டமிட்டு செய்து முடிக்க கூடிய திறமை உடைய ரிஷப ராசியினரே நீங்கள் நேரத்தை கண் போன்று மதிப்பவர். இந்த மாதம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக  பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து  வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வில் பெறுவதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால்  நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.  பெண்களுக்கு அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது.
கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.

அரசியல் துறையினருக்கு சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.

ரோகிணி:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும்  திறமை அதிகப்படும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5, 30

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2017

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் வரவேண்டிய பணம் தானாகவே கைவந்து சேரும். கடமைகளை கருத்துடன் செய்து முடிப்பீர்கள். சுதந்திரமாக சுயசிந்தனையோடு முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுவீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் குறைந்து காணப்படும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் சென்று அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே முடித்துவிடுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் அனுபவஸ்தர்களைக் கலந்தாலோசித்த பிறகே எடுக்கவும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, கௌரவம் உயரக் காண்பீர்கள். நேர்முக மறைமுக எதிரிகள் இந்த காலகட்டத்தில் உங்களை அண்ட மாட்டார்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். பழைய காலத்தில் தொடங்கி பாதி வழியில் விட்டிருந்த தொழிலையும் புதுப்பித்து நடத்துவீர்கள். புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். உங்கள் செயல்கள் சிறு தடைகளைச் சந்தித்தாலும் அவைகள் சரியான இலக்குகளை அடைந்து விடும். உடலில் இருந்த நோய்கள் மறைந்து பீடுநடை போடுவீர்கள். உணவு விஷயங்களில் சரியாக இருப்பீர்கள். பழைய கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைத்து விடுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றிவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
 
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து நேர்வழியில் சிந்தித்துப் பணியாற்றுவீர்கள். குழந்தைகளை வெளியூர் வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அரசு வழியில் இருந்த பிரச்னைகளும் தீர்ந்துவிடும். கடினமான சூழல்களில் மாட்டிக் கொண்டாலும் கடைசி நிமிடத்தில் எச்சரிக்கையடைந்து அவைகளிலிருந்து தப்பித்து விடுவீர்கள். "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று' என்பது போல் இன்னல்கள் விலகும். உங்கள் பேச்சில் கண்ணியத்தைக் காப்பாற்றுவீர்கள். உடல் பலத்தைவிட மனபலம் அதிகரிக்கும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் சகோதர சகோதரிகள் உங்களைத் தேடி வந்து உதவிகளைச் செய்து மகிழ்ச்சியில் திளைக்கச் செய்து விடுவார்கள் என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஹேவிளம்பி ஆண்டில் அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வேலையில் பளு கூடாது. மேலதிகாரிகள் உங்களின் வேலையில் திருப்தி அடைவார்கள். முன்னறிவிப்பில்லாத சில வேலைகளையும் ஒப்படைப்பார்கள். இதனால் சிறிது அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாக நேரிடும். வியாபாரிகள் நல்ல முறையில் வியாபாரம் செய்து முன்னேற்றத்தைக் காண்பார்கள். வீண் பிரச்னைகளில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அவைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். நண்பர்கள் கூட்டாளிகள் நல்ல விதமாக உதவிகளைச் செய்வார்கள். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் தங்களின் வியாபாரம் மூலம் அந்நியச் செலாவணியையும் அதிகம் பெறுவார்கள். விவசாயிகளுக்கு மகசூலில் ஓரளவு லாபம் கிடைக்கும். புதிய தானியங்களைப் பயிரிட்டும் பயன் அடையலாம். மாற்றுப் பயிர்களாலும் கால்நடைகளாலும் வருமானம் கூடும். நீர்ப்பாசன வசதிகளையும் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். மதிப்பு மரியாதை உயரும். அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கட்சி மேலிடம் உங்களின் செயல்களைப் பாராட்டும். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களும் புதிய வாய்ப்புகளைத் தேடித்தருவார்கள். ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். பெண்மணிகளுக்கு உடல்நலனில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய மருத்துவச் செலவுகள் உண்டாகாது. கணவர் வழி உறவினர்களின் மத்தியில் உங்கள் புகழ் உயரும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். வெளிவிளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். விரும்பிய பாடப் பிரிவுகளிலும் சேர்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வரவும்.

***​

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பார்த்த மாற்றங்களைக் காண்பீர்கள். உங்களை வாட்டி வதைத்து வந்த விரக்தி மனப்பான்மை விலகி விடும். மனதிலிருந்த கலக்கங்கள் மறைந்து தெளிவு குடிகொள்ளும். மனதில் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி முன்னேறுவீர்கள். ஒரே இடத்தில் உழன்று கொண்டிருந்தவர்கள் சுறுசுறுப்பாக பல இடங்களுக்கும் பயணப்பட்டு தொழிலை மேம்படுத்துவார்கள். எதிர்பாராத வாய்ப்புகளையும் பெறுவீர்கள். போட்டியாளர்கள் விலகிவிடுவர். பணவரவில் தடைகளோ பொருளாதாரத்தில் கஷ்டங்களோ ஏற்படாது. நண்பர்கள் தேடிவந்து உதவி செய்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளை சுலபமாக நிறைவேற்றுவீர்கள். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் பெருமை உண்டு. அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. அதிகார பதவிகளில் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயல்களை முடிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் பாகப்பிரிவினை தாமதமாகும். உடன்பிறந்தோரும் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். புதிய மாற்றங்கள் மனதிற்கு வருத்தமளிக்கும். உடலில் சிறு சோம்பல் குடிகொள்ளும். மந்தமாக காணப்படுவீர்கள். எவருக்கும் வாக்குக் கொடுக்கும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொடுக்கவும். அனைத்து மாற்றங்களிலும் ஓர் அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்பு புதைந்திருக்கும். ஆன்மிக தர்மகாரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய இடங்களுக்கும் மாற்றலாகிச் சென்று செய்தொழிலை விரிவுபடுத்துவார்கள். காரணம் புரியாமல் மனதில் ஒரு கலக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும் காலகட்டமாக இது அமைகிறது. 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் பளு குறைந்து காணப்படும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். சில சிறப்புச் சலுகைகளும் கிடைக்கும். உத்தியோக விஷயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் மகிழ்ச்சியும் லாபமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கமிஷன் ஏஜன்ஸி துறைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். வாராக் கடன் என்று நினைத்திருந்தவைகளும் வசூலாகும் ஆண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாகும். 

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு திருப்திகரமான ஆண்டாகும். உங்களின் சுயஜாதகம் பலம் பெற்று இருக்கும்பட்சத்தில் எட்டாக் கனியாக இருக்கும் அமைச்சர் போன்ற பதவிகள் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் கிடைக்கும். எதிரிகள் உங்களிடமிருந்து விலகியே இருப்பார்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பார்த்த புகழ், பணவரவுண்டு. ரசிகர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களும் தேடிவரும். பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவு குறையும். அவ்வப்போது தலைகாட்டிய பிரச்னை ஒன்று முழுமையாகத் தீர்ந்துவிடும். கணவரின் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மாணவமணிகளுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். முதலிடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். விளையாட்டுகளில் சாதனை புரிவீர்கள்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.