கன்னி

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

கன்னி (VIRGO)

(ஆகஸ்ட் 23 – செப்டம்பர் 22)

இது ஒரு பெண் ராசி. இது ஒரு நில ராசியும்கூட. இதன் அதிபதி புதன். புதனுக்கு இது உச்ச வீடாகவும் மற்றும் மூலத் திரிகோண வீடாகவும் ஆகிறது. இந்த ராசிக்கு ஒரு பெண்ணின் உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசிக்கு உரிய சின்னம் F. புதனுக்கு சுக்கிரன் நண்பனாக இருந்தாலும், இந்த ராசியில்தான் சுக்கிரன் நீச்சமாகிறார். ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகவே கருதப்படுவார்கள். சனி இருப்பின், அது நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தையும், உள் உறுப்புகளில் குடலையும் குறிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள், பணம் சேமிக்கும் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்குத் தெரியாமல் சேமிக்கும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

அக்டோபர் 23

இன்று எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

அக்டோபர் 20 - அக்டோபர் 26

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்களின் வேலைகளை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகள் வேண்டாம். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தவும். உற்றார் உறவினர்களுடன் இன்முகத்துடன் பழகி உறவைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே முடிக்கவும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமாராகவே இருக்கும். அதனால் நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகளின் எண்ணிக்கை குறையும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பெண்மணிகள் கவனமாக இருந்து காரியம் ஆற்றவும். வீண் யோசனைகள் உங்கள் வலிமையை குறைக்கும். மாணவமணிகள் படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 22, 23. 

சந்திராஷ்டமம்: இல்லை.

அக்டோபர் மாதம்

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களை அனுபவமாக எடுத்துக் கொள்ளும் திறமை உடைய கன்னி ராசியினரே, நீங்கள் உழைப்பினால் வாழ்க்கையில் சாதிப்பவர்கள். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.

பெண்களுக்கு வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும் முன் அது பற்றி பரிசீலிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம்.

அரசியல் துறையினருக்கு திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். எல்லா வித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு புளியஞ்சாதம் அன்னதானம் வழங்க மனத்தெளிவு உண்டாகும். அறிவுத் திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

அதிர்ஷ்ட தினங்கள்: 1 - 27 - 28 - 29

சந்திராஷ்டம் தினங்கள்: 7 - 8

உத்திரம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.

அஸ்தம்:

இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.

சித்திரை 1, 2, பாதம்:

இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.


ஐப்பசி மாத பலன்கள்

இம்மாதம் ராசியில் செவ்வாய், சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், ராசிநாதன் புதன், குரு - தைரிய ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில் கேது - லாபஸ்தானத்தில் ராகு என கிரகங்களின் சஞ்சாரம் இருக்கிறது.

ஐப்பசி மாதம் - 11ம் தேதி - 28.10.2017 - சனிக்கிழமை அன்று பகல் மணி 11.49க்கு ராசிநாதன் புதன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய  ஸ்தானத்திற்கு  மாற்றம் பெறுகிறார்.

ஐப்பசி மாதம் - 17ம் தேதி - 03.11.2017 - வெள்ளிக்கிழமை அன்று இரவு மணி 9.47க்கு சுக்கிரன் ராசியில் இருந்து தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். 

இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். எந்த காரியத்தையும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். தனஸ்தான ராசியிலிருக்கும் குருவால் வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை  தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். 

பணி நீட்டிப்பு - பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அதிகரிக்கும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள்  வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். பெண்களுக்கு  வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். 

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. 

மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். 

பரிகாரம்: துளசி அர்ப்பணித்து ஐயப்பனை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2017

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் தெய்வ பலத்தால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். மனதில் தெளிவுடன் கவனமாகவும் பொறுமையுடனும் பொறுப்புடனும் செயல்படுவீர்கள். வருமானம் சீராக இருந்தாலும் செலவுகளும் இருக்கும். சேமிப்புகளில் ஈடுபட முடியாது. கூட இருந்த நண்பர்களால் ஏமாற்றப்பட்ட நீங்கள் அவர்களைப் புரிந்துகொண்டு விலகிவிடுவீர்கள். உண்மை உங்கள் பக்கம் இருந்தாலும் சில நேரங்களில் விட்டுக்கொடுத்து சென்று சச்சரவுகளை தவிர்த்துவிடுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கும் தக்க அறிவுரைகளை வழங்குவீர்கள். முக்கியஸ்தர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரக் காண்பீர்கள். புதிய பொறுப்புகள் தேடிவரும். புதிய சூழலில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். செய்தொழில் சீராக நடந்தாலும் முயற்சியில் சிறுசிறு தடைகள் ஏற்படலாம். இதை பொருட்படுத்தாமல் உங்கள் கடமைகளில் கருத்தாக இருந்து வெற்றிபெறுவீர்கள். நண்பர்களிடமிருந்தும் உதவிகளைப் பெறுவீர்கள். முக்கிய விஷயங்களில் அவர்களை கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பீர்கள். மற்றபடி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோருக்கு நெடு நாளாக இருந்த உடலுபாதைகள் மறையும். புதிய உடற்பயிற்சிகளையும் கற்றுக்கொள்வீர்கள். இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களையும் தவணை முறையில் வாங்குவீர்கள். 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பாராத உயர்வு உண்டாகும். அரசாங்க வழியிலும் உதவிகளைப் பெறுவீர்கள். வாராக்கடன் என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைத்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலர் புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வார்கள். சொத்து சம்பாத்தியம் உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் உங்கள் பெயர், செல்வாக்கு உயரும். பேச்சு கணீரென்று ஒலிக்கும். எதிர்பாராமல் காரியங்கள் மடமடவென்று நடந்தேறும். குடும்ப பொறுப்புகளை தனியாக ஏற்று வெற்றிகரமாக நடத்தும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். மற்றபடி, அலுலக வேலை விஷயமாக சிறு பயணங்களைச் செய்வீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெற்று மகிழ்வீர்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைத் தங்கு தடையின்றி முடிப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் நிலைமை உயரும். புதிய பொருள்களை வியாபாரம் செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். சொந்தமான புதிய இடத்துக்கு வியாபாரத்தை மாற்றி அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடக் காண்பீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். பூச்சிக்கொல்லிக்கான செலவுகள் குறையும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களையும் பயிர் செய்வீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரியும் விவசாயப் பணியாளர்களை அரவணைத்துச் செல்வீர்கள். மேலும் புதிய நிலங்களை வாங்க வேண்டாம். நீர்ப்பாசன வசதிகளுக்கும் சிறிது செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் பிற்போக்கான நிலையிலிருந்து விடுபட்டு முன்னேற்றங்களை அடைவார்கள். பல வழிகளிலும் முன்னேறுவீர்கள். வருமானம் இரட்டிப்பாக இருப்பதால் தொண்டர்களுக்கும் சிறிது உதவி செய்து மகிழ்வீர்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் செயல்களை தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வேலைகளை கவனமாக முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு உந்து சக்தியாகவே அமையும். பெண்மணிகள் இந்த ஆண்டு மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். கணவரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்பாகவே தொடரும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை உடனுக்குடன் படித்து மனதில் நிறுத்திக்கொள்வீர்கள். 

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

***​

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

இந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நல்லவர்களின் நட்பு தேடி வரும். அவர்களால் பழைய சிக்கல்கள் தீர்ந்துவிடும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் உதவிகளைப் பெற்று நலமடைவார்கள். பொருளாதார நிலை உயரும். அரசு அதிகாரிகள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிலும் சிந்தித்து நல்ல முறையில் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும். தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நெடுநாளாக நடக்காமல் இருந்த பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். உங்கள் மனதில் தன்னம்பிக்கை குடிகொள்ளும். உங்களுக்கு உறுதுணையாக நண்பர்களைச் சேர்த்துக்கொள்வீர்கள். வாழ்க்கையில் புதிய சூழ்நிலைக்கு உங்களை பழக்கப்படுத்திக்கொள்வீர்கள். அனைத்து விஷயங்களையும் நடைமுறைக்கு ஏற்றவாறு பார்ப்பதால் கஷ்டங்கள் எதையும் சந்திக்கமாட்டீர்கள். நீண்டகால லட்சியங்கள் கனவுகள் நிறைவேற அடித்தளம் அமைத்துக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு எதுவும் உண்டாகாது. செய்தொழில் விறுவிறுப்பாக நடக்கும். புதிய முயற்சிகளை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். அனைத்து புதிய வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும் கௌரவமும் உயரும். பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும்.பிள்ளைகள் சொல்பேச்சு கேட்டு நடப்பர். போட்டியாளர்களின் தொந்தரவுகள் மறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். ஆலய திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். பங்குவர்த்தகத்தின் மூலமும் லாபம் வரக்காண்பீர்கள். புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். குறிக்கோள்களை அடைவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். நெடுநாளாக விற்க முடியாமல் கஷ்டப்பட்ட நிலம் இந்த காலகட்டத்தில் நல்ல விலைக்கு விற்கும். மனதில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாகச் சமர்ப்பிக்கவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பழைய கடன்களையும் முழுமையாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள் என்றால் மிகையாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சரியாகச் செய்தாலும் செய்யாத தவறுகளுக்காக மேலதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளாவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு வாய்ப்புகள் நழுவிப்போகலாம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகள் அதிகமாக விற்பனை செய்தும் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியாமல் போகும். சிலருக்கு நண்பர்களுடன் பகை ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தற்சமயம் நடத்திவரும் தொழிலை அக்கறை மற்றும் பொறுமையுடன் செய்வது நல்லது. கடன் கொடுத்து வியாபாரத்தை பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு விளைச்சல் இருக்காது. ஆகவே கடன் வாங்குவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கால்நடைகளுக்கு நோய் பாதிப்பும் அதனால் மருத்துவச் செலவும் உண்டாகும்.

அரசியல்வாதிகள் பெரிய அளவிலான பதவிகளைப் பெற வாய்ப்பு இருக்காது. இந்த ஆண்டு கட்சி மேலிடத்தின் பார்வையிலிருந்து ஒதுங்கி நின்று செயல்படவும். எந்த முடிவையும் தீவிரமாக ஆலோசித்து எடுத்தால் கெட்டப்பெயர் ஏற்படாமல் தப்பிக்கலாம். கலைத்துறையினருக்கு சிறப்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அனைத்து தடைகளையும் திறமையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். திறமைகளுக்கு தக்க அங்கீகாரம் கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடம் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆடை ஆபரணங்களையும் வாங்குவார்கள். மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படித்தால் எதிர்பார்த்த பலனை அடையலாம். நண்பர்களால் பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

பரிகாரம்: வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியரை வழிபட்டு வரவும்.