ஜோதிட கேள்வி - பதில்கள்

நான் எம்.எஸ்.சி., பி.எட்., படித்திருக்கிறேன். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். கணவரும் நானும் பிரிந்து வாழ்கிறோம். அரசுப்பணி கிடைக்குமா? எனது மகள் +1 படிக்கிறார். அவரது படிப்பு, எவ்வாறு அமையும்? அரசு வேலை கிடைத்து நல்வாழ்வு அமையுமா? 
- வாசகி, திருப்பூர்

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. கல்வி ஸ்தானாதிபதி கல்வி ஸ்தானத்தில் உச்சம் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார்.

13-10-2017

எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நல்ல குணவதி அமைவாரா?
- வாசகர், மதுரை

உங்கள் மகனுக்கு களத்திர ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று இருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பது சிறப்பு.

13-10-2017

வெளிநாட்டில் வேலை செய்யும் என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய மணமகள் அமைவார்? ஊதிய உயர்வு உண்டா? என் மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? 
- வாசகர், வில்லிவாக்கம்

உங்கள் மகனுக்கு துலா லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி  பலம் பெற்று லக்ன சுபர்களுடன் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார்.

13-10-2017

எனக்கு திருமண யோகம் எப்போது அமையும்? 
- சத்யநாராயணன், சென்னை

உங்களுக்கு ரிஷப லக்னம், சுக ஸ்தானத்தில் லக்னாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதியும் இணைந்திருப்பது சிறப்பு.

13-10-2017

தந்தையை இழந்த எனக்கு 35 வயதில் அரசு வேலை கிடைத்தது. 37 வயதில் மனநிலை பாதிக்கப்பட்டேன். பின்னர் தூக்கம் வருவதற்கான மாத்திரையை கடந்த 15 வருடங்களாக சாப்பிட்டு வருகிறேன். 40 வயதில் எனக்குத் திருமணம் நடந்தது. 4 மாத மூளை வளர்ச்சியற்ற குழந்தை என்பதை அறிந்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில்  கருக்கலைப்பு செய்து விட்டேன். இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த மாத்திரையை சாப்பிட்டு வரவேண்டும்? என் அந்திம காலம் நல்ல படியாக கழியுமா? அடுத்த ஜென்மத்திலாவது புத்திரபாக்கியமுண்டா? 
- வாசகி, திருவண்

உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மாங்கல்ய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார்.

13-10-2017

எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? எதிர்கால வாழ்வு எவ்வாறு அமையும்? திருமணம் எப்போது நடைபெறும்?
- வாசகர், ராஜபாளையம்

உங்களுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி. தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு.

13-10-2017

அரசு  பள்ளி ஆசிரியராக வேலைப்பார்க்கும் என் மகளின் இந்த இரு ஜாதகங்களில் எது சரியானது? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? இருண்ட அவரது வாழ்க்கையில் ஒளிவீசுமா? 
- வாசகி

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம் நான்காம் பாதம். லக்னம் மற்றும் அயன ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிருக்கிறார்.

13-10-2017

39 வயதாகும் என் மகனுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக வரன் தேடிக்கொண்டிருக்கிறோம். நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். விரைவில் திருமணம் நடைபெற ஏதேனும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? 
- வாசகர், பொள்ளாச்சி

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மீன ராசி. தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குருபகவானின் பார்வையிலுள்ள சூரியபகவானின் தசைநடக்கிறது

13-10-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை