அமைதியான குடும்பவாழ்க்கை

உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு விரயத்தில் மறைவு பெற்று தன் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்படுகிறார். பொதுவாக,

என்னுடைய குடும்பத்துடன் (மனைவி, குழந்தை) எப்பொழுது ஒன்று சேருவேன். அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும். தாங்க முடியாத வேதனையில் உள்ளேன். எனக்கு வழி காட்டவும்.
- லட்சுமி நாராயணன், திருச்சி

உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு விரயத்தில் மறைவு பெற்று தன் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்படுகிறார். பொதுவாக, ஒரு தசை முடியும் தருவாயில் அனைவருக்கும் வாழ்க்கையில் சிறு குழப்பங்கள் ஏற்படும். உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதியின் தசையின் இறுதியில் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு உங்கள் மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிய நேரிட்டது. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கும் அயன ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. இதில் கேதுபகவானின் புக்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிந்து லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படும் லாபாதிபதியின் புக்தி நடக்கத்தொடங்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்பத்துடன் இணைவீர்கள். உங்கள் மனைவிக்கு தற்சமயம் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியின் தசையில் ராகுபகவானின் புக்தி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும். அவருக்கு களத்திர ஸ்தானாதிபதி சுபக்கிரகமாகி கேந்திராதிபத்ய தோஷம் பெற்று அவரும் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்து இருப்பதால் உங்கள் இருவருக்கும் களத்திர ஸ்தானாதிபதிக்கு சமதோஷம் உண்டாகி விடுகிறது. மேலும் களத்திர ஸ்தானாதிபதியுடன் அசுபக் கிரகமான சனிபகவான் லக்ன சுபராகி இணைந்து இருப்பதும் குறைகளைக் குறைக்கும் அம்சமாகும். அதோடு அவர்களுக்கு தைரிய ஸ்தானாதிபதியின் பார்வையும் கிடைக்கிறது. அதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்
பிறகு உங்கள் மனைவியின் ஜாதகப்படியும் கணவருடன் இணைய அனுகூலமான காலகட்டம் உண்டாகி விடுகிறது. இந்தப் பிரிவு தற்காலிகமானதே என்று கூறவேண்டும். பிரதி வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். உங்கள் குடும்ப எதிர்காலம் அமைதியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com