என் மகன் பி.இ. மற்றும் எம்.எஸ்.(யு.கே) படித்தும் சரியான வேலை அமையவில்லை. தற்போது சிறிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையுமா? திருமணம் எப்போது அமையும்? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?- வாசகர், தஞ்சாவூர்

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம். லக்னாதிபதி நீச்சம் பெற்று அங்கு உச்சம் பெற்றிருக்கும் பாக்கிய, அயன ஸ்தானாதிபதியான புதபகவானுடன்

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம். லக்னாதிபதி நீச்சம் பெற்று அங்கு உச்சம் பெற்றிருக்கும் பாக்கிய, அயன ஸ்தானாதிபதியான புதபகவானுடன் இணைந்து இருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. தற்சமயம் சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com