நான் மிகப்பெரிய அமெரிக்க நிறுவனத்தில் பணியில் இருந்தபோது வெளிநாட்டில் பணிபுரிவதற்கு ஆணை கிடைத்தது. வேலையை விட்டுவிட்டு வெளிநாடு செல்வதற்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தேன். திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. அதனால் இந்த அரிய வாய்ப்பும் என் கையை விட்டு போய்விட்டது. தற்போது வேலை இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஏன் இந்த நிலைமை? வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறதா?- வாசகர், சென்னை

உங்களுக்கு மிதுன லக்னம். லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் தைரிய

உங்களுக்கு மிதுன லக்னம். லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவானுடன் இணைந்து இருக்கிறார். இவர்களை நட்பு ஸ்தானத்திலிருந்து குருபகவான் பார்வை செய்கிறார். உங்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து அதிர்ஷ்டகரமான திருப்பங்கள் உண்டாகும். தகுதிக்கேற்ற உத்தியோகம் அமையும். இன்னும் ஓராண்டுக்குள் மறுபடியும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com