உங்களுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி. பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நட்பு ஸ்தானாதிபதியான குருபகவான் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெற்று தசையை நடத்துகிறார். இதில் படிப்படியான வளர்ச்சிகள் உண்டாகும். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி உச்சம் பெற்று இருப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். அதுவரை உள்நாட்டிலேயே நல்ல வருமானம் வரும் உத்தியோகம் அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.