என்னுடைய ஜாதகத்தில் ராசிக்கும் லக்னத்திற்கும் அஷ்டமாதிபதியாக உள்ள குரு தனித்து நின்று என்னைப் படாதபாடு படுத்துகிறார். பெற்ற பிள்ளைகளாலும் தொல்லை. என் ஆயுள் எப்படி உள்ளது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், காவேரிப்பாக்கம்

உங்களுக்கு சிம்ம லக்னம். லக்னத்திற்கு குருபகவான் அஷ்டமாதிபதியானாலும் பூர்வபுண்ணிய ஆதிபத்தியத்திற்கே முக்கியத்துவம் தரவேண்டும்.

உங்களுக்கு சிம்ம லக்னம். லக்னத்திற்கு குருபகவான் அஷ்டமாதிபதியானாலும் பூர்வபுண்ணிய ஆதிபத்தியத்திற்கே முக்கியத்துவம் தரவேண்டும். மிதுன லக்னத்திற்கு குருபகவான் மறைவு பெறுவதால் கேந்திராதிபத்ய தோஷமும் நீங்கி விடுகிறது. அதனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள தத்துவம் தவறானது என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம். மற்றபடி உங்களுக்கு தற்சமயம் கேது மஹா தசை முடிந்து சுக்கிரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. சுக்கிரபகவான் மறைவு பெற்றிருப்பது சிறப்பு. அதனால் சுக்கிர மஹாதசையில் ஒவ்வொரு மாதமும் மகிழ்ச்சி நிறையும். உங்களுக்கு பித்ரு தோஷம் உள்ளதால் அடிப்படை ஜாதகத்திற்கு வலு குறைகிறது. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com