என் மகன் பி.காம் படித்து பிரபல நிறுவனத்தில் வேலை செய்கிறான். கடந்த ஐந்து வருடங்களில் ஐந்து இடங்களுக்கு மாற்றி விட்டார்கள். ஓர் இடத்தில் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. படிப்பு முடிந்த ஆண்டே சவூதி நாட்டில் வேலை வந்தது. அது வேண்டாம் என்று சென்னை நிறுவனத்தில் சேர்ந்தான். தற்போது நாங்கள் செய்தது தவறோ என்று வருத்தப்படுகிறோம். மறுபடியும் வெளிநாடு சென்று சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்குமா? யோக ஜாதகமா? நவாம்சத்தில் கிரக பலம் எவ்வாறு உள்ளது. திருமணம் எப்போது நடைபெறும்? பித்ருதோஷம் உள்ளதாக கூறியதால் ராமேஸ்வ

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம் மூன்றாம் பாதம். சந்திரபகவான் நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம் மூன்றாம் பாதம். சந்திரபகவான் நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டுக்கும் அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் தர்மகர்மாதிபதியான சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
தனம் வாக்கு குடும்பம் மற்றும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைந்து நீச்சம் பெறுகிறார். சுகாதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து திக்பலம் பெற்று நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். அதோடு சுகாதிபதி சுகஸ்தானத்தைப் பார்வை செய்வதால் நான்காம் வீட்டிற்கு உண்டான அனைத்து காரகத்துவங்களும் குறிப்பாக அன்னை நலம், வண்டி வாகனம், கல்வி, நல்ல வீடு ஆகியவைகள் சீராக அமையும்.
மேலும் ஒரு கேந்திராதிபதி (நான்காமதிபதி) ஒரு திரிகோணாதிபதி (பூர்வபுண்ணியாதிபதி) ஆகிய இருவரும் தொழில் ஸ்தானத்தில் இணைந்து இருப்பது சிறப்பு. இதனால் செய்தொழிலில் சிறப்பான பதவிகளை அடையும் வாய்ப்புகளும் ஏற்படும். களத்திர நட்பு மற்றும் அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் லக்ன கேந்திரத்தில் தைரிய ஸ்தானாதிபதியின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வது விசேடம். இதனால் மணவாழ்க்கை, நண்பர்கள், பயணங்களால் நன்மைகள் ஆகியவைகள் சிறப்பாக அமையும்.
அஷ்டம லாபாதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் தர்மகர்மாதிபதியான சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். தர்மகர்மாதிபதியான (ஒன்பதாம் வீட்டுக்கும் பத்தாம் வீட்டுக்கும் அதிபதி) சனிபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக ஸ்தானாதிபதியான சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
கேது - ராகு பகவான்கள் கடக, மகர ராசிகளில் அமர்ந்து நவாம்சத்தில் முறையே சிம்ம, கும்ப ராசிகளை அடைகிறார்கள். உங்கள் மகனுக்கு வலுவான ஜாதகம் என்றே கூற முடிகிறது. அவருக்கு லக்னாதிபதி உச்சம். மேலும் சந்திர கேந்திரத்திலும் இருக்கிறார். சுக்கிரபகவானும் குருபகவானுக்கொத்தவராகையால் அவர் சந்திர கேந்திரத்தில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும் என்று முன்பு எழுதியிருக்கிறோம். சுக்கிர பகவானை உச்சம் பெற்ற லாபாதிபதியான குருபகவானும் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மேற்கூறிய வகையில் பலம் பெற்றிருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் தன் ஆட்சி வீட்டில் அமர்ந்திருக்கிறார். அவரை குருபகவானும் பார்வை செய்கிறார். ஒன்பது பத்தாம் அதிபதிகளை பதினொன்றாம் அதிபதி பார்வை செய்கிறார்.
இங்கு மற்றொன்றையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். ராகு -கேது பகவான்கள் நின்ற ராசியாதிபதிகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அதாவது ராகுபகவான் அமர்ந்திருக்கும் மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். கேதுபகவான் அமர்ந்திருக்கும் கடக ராசியின் அதிபதி சந்திரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் கடக ராசியில் உச்சம் பெற்ற குருபகவானும் அமர்ந்திருக்கிறார்கள்.
குருபகவானுடன் கேதுபகவான் இணைந்திருப்பதை கோடீஸ்வர யோகம் என்பார்கள். ராகு- கேது பகவான்களுடன் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் இணைந்திருந்தால் அஷ்டமஹா நாக யோகம் உண்டாகும். இதுவும் ஒரு பலமான யோகமாகும். மேலும் அரசு கிரகமான சூரியபகவான் ராகுபகவானின் சாரத்திலும் ராகுபகவான் சூரியபகவானின் சாரத்திலும் பரிவர்த்தனை அடைந்திருக்கிறார்கள். அதற்கு சார பரிவர்த்தனை அல்லது சூட்சும பரிவர்த்தனை என்று பெயர். இது கிரகங்களின் பரிவர்த்தனைகளுக்கும் ஒரு படி மேல் என்று கூறுவார்கள். இது சிறப்பாக வேலை செய்யும் என்று பலருக்கும் பார்க்கிறோம். ராகுபகவான் பயணக் கிரகம் என்பது அனைவரும் அறிந்ததே.
சர ராசிகளான கடக, மகர ராசிகளில் குரு, சனிபகவான்களுடன் சர்ப்பக் கிரகங்கள் இணைந்திருக்கிறார்கள். நீர் ராசியில் லக்னாதிபதியான சுக்கிரபகவானும் விருச்சிக ராசியை (மற்றொரு நீர் ராசி) செவ்வாய்பகவானும் பார்வை செய்கிறார்கள்.
உங்கள் மகனுக்கு சவுதிக்கு செல்லும் வாய்ப்பு ராகுபகவானின் தசையில் சுயபுக்தி தட்டிச் சென்றது. இதனால் இழப்பு எதுவும் இல்லை. பொதுவாக, எந்த தசையின் சுய புக்தியிலும் பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்பு குறைவு. அப்படி ஏற்படவில்லையென்றாலோ அல்லது நல்ல வாய்ப்புகள் கை நழுவிப் போனாலோ மற்ற புக்திகள் சிறப்பாக வேலை செய்யும். அதனால் மறுபடியும் வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு வரவே வராதோ என்று பயப்படத் தேவையில்லை.
தற்சமயம் ராகுபகவானின் தசையில் புதபகவானின் புக்தி நடக்கிறது. இந்த புக்தி முடிவதற்குள் நிரந்தர வேலையும் படித்த பெண் அமைந்து திருமணமும் கைகூடும். இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு வளைகுடா நாடுகளுக்குச் சென்று தங்கி பொருளீட்டும் யோகம் உண்டாகும். நவாம்சத்தில் புதபகவானும் செவ்வாய்பகவானும் நீச்சம் பெற்றிருப்பது பெரிய குறை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ராகுபகவானின் தசையில் உயரிய வருமானம் வரும் நல்ல பதவிகள் கிட்டும். மற்றபடி பித்ரு தோஷத்திற்காக நீங்கள் செய்துள்ள தில ஹோமம் சரியானது மற்றும் போதுமானது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com