எம்.டெக்., படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ள என் மகனுக்கு படிப்பு முடித்து 3 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. வேலைக்கான தேர்வுகள் எழுதியும் தேர்ச்சியும் பெறவில்லை. வேலை கிடைக்காததால் மிகவும் சிரமப்படுகிறோம். அரசு வேலை கிடைக்குமா? அல்லது நிரந்தரமான நல்ல வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?  திருமணம் எப்போது கைகூடும்? - வாசகர், பெருமாள்பட்டி

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி, லக்னாதிபதி, சுகாதிபதி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி ஆகியோர் பன்னிரண்டாம்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி, லக்னாதிபதி, சுகாதிபதி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி ஆகியோர் பன்னிரண்டாம் வீட்டில் இணைந்து இருக்கிறார்கள். களத்திர ஸ்தானாதிபதி மற்றும் லாபாதிபதி ஆகியோர் லக்னத்தில் இணைந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு பகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு அவருக்கு அரசு சம்பந்தப்பட்ட உத்தியோகம் அமையும். இன்னும் 2 ஆண்டுகளுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com