எங்கள் மாப்பிள்ளைக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே உத்தியோகத்தில் சிரமம். அடிக்கடி இடமாற்றம் சிக்கல்கள் உள்ளன. சம்பளம் சரிவர கிடைப்பதில்லை. இந்த சிரமங்கள் எப்போது நீங்கும்? அல்லது நல்ல வேலை எப்போது கிடைக்கும்? - வாசகர், மதுரை

உங்கள் மருமகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. தர்மகர்மாதிபதி யோகம் அயன ஸ்தானத்தில் ஏற்படுகிறது. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான்

உங்கள் மருமகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. தர்மகர்மாதிபதி யோகம் அயன ஸ்தானத்தில் ஏற்படுகிறது. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் மிதுன ராசியில் அமர்ந்து அந்த வீட்டுக்கதிபதியான புதபகவானுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். அதாவது ஐந்தாமதிபதியும் பத்தாமதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருப்பது சிறப்பு என்று கூறலாம். புதாதிபத்ய யோகம், கஜகேசரி யோகம், ஹம்சயோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. மேலும் தற்சமயம் குருபகவானின் தசையில் புதபகவானின் புக்தி இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நடக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு அவருக்கு தெற்கு திசையை நோக்கி மாற்றம் கிடைக்கும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரச் சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com