எனது மகனின் எதிர்காலம் எவ்வாறு உள்ளது? அரசு உத்தியோகம் அமையுமா? குழந்தை பாக்கியம் உள்ளதா? சொந்த வீடு அமையுமா? உடல் நலம், வாழ்க்கை முன்னேற்றம் எப்படி இருக்கும்?  - வாசகர், மடிப்பாக்கம்

உங்களுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. தற்சமயம் களத்திர, நட்பு மற்றும் தொழில் ஸ்தானாதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது.

உங்களுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. தற்சமயம் களத்திர, நட்பு மற்றும் தொழில் ஸ்தானாதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து வாழ்க்கைத்தரம் பொருளாதார வளம் உயரத்தொடங்கும். உங்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி உச்சமடைந்து லக்னாதிபதியுடன் இணைந்திருப்பதால் சிவராஜ யோகம் உண்டாகிறது. மேலும் இவர்களுடன் லாபாதிபதியும் இணைந்திருக்கிறார். உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. தற்சமயம் புதமஹா தசையில் சுக்கிரபுக்தி இன்னும் இரண்டாண்டுகளுக்குள் நடக்கும். இந்த காலக்கட்டத்திற்குள் உங்களின் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். தர்மகர்மாதிபதிகள் லக்ன கேந்திரத்தைப் பார்வை செய்வதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சொந்தவீடு பாக்கியம் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com