என் மகள்  +1 படிக்கிறார். கல்லூரியில் எந்த படிப்பு படிக்க வைக்கலாம்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? வேலை பார்க்கும் யோகம் உண்டா? மேலும் மகளுக்கு வரன் பார்க்கும் போது ஜாதகத்தை மாற்றிக் கொடுக்கும்படியாக கூறுகிறார்கள். இது தவறில்லையா?- வாசகி

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று அங்கு நீச்சமடைந்த பாக்கியாதிபதியான புதபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். சந்திரபகவான்

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று அங்கு நீச்சமடைந்த பாக்கியாதிபதியான புதபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். சந்திரபகவான் தொழில் ஸ்தானாதிபதியாகி தனம், வாக்கு, குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானுடன் இணைந்து இருக்கிறார். இதனால் சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. மேலும் தற்சமயம் லக்னம் மற்றும் அஷ்டமாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. இது அவரின் 23 வயது வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். மூலம் நட்சத்திரம் என்பதால் ஜாதகத்தை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று உங்கள் ஊரில் கூறினார்கள் என்பது ஜோதிட சாஸ்திரத்திற்கு விரோதம். மற்றபடிஅவரின் எதிர்காலம் சிறப்பாக அமையும். காமர்ஸ் படிப்பு ஏற்றது. பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com