எனக்கு நிரந்தர வருமானம் தரும் வேலையோ அல்லது தொழிலோ எப்போது அமையும்? அரசியலில் வெற்றி பெறுவேனா? திடீர்அதிர்ஷ்டம் கிடைக்குமா? எனக்குள்ள வயிறு சம்பந்தப்பட்ட நோய்  எப்போது குணமாகும்?- வாசகர், அரியலூர்

உங்களுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி. லக்னத்தில் பாக்கியாதிபதியும் பாக்கியத்தில் லக்னாதிபதியும் பரிவர்த்தனைப் பெற்று அமர்ந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி. லக்னத்தில் பாக்கியாதிபதியும் பாக்கியத்தில் லக்னாதிபதியும் பரிவர்த்தனைப் பெற்று அமர்ந்திருக்கிறார்கள். தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பேச்சு சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டு வருவாய் ஈட்டலாம். பூர்வபுண்ணிய விரயாதிபதி தைரிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தைப் பெறுகிறார். மேலும் அவர் நவாம்சத்திலும் தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியை அடைகிறார். அதோடு  பாக்கிய ஸ்தானத்திலிருந்து குருபகவான் செவ்வாய்பகவானைப் பார்வை செய்வதால் குருமங்கள யோகம் உண்டாகிறது. அதனால் வருமானத்திற்கு எந்தக் குறைவும் இறுதிவரை ஏற்படாது என்றும் கூறலாம். ஆரோக்கிய ஸ்தானாதிபதி விபரீத ராஜயோகம் பெற்று இருந்து லக்னாதிபதியை விட சற்று கூடுதல் பலம் பெற்று இருக்கிறார். சுக ஸ்தானத்தில் அசுபக்கிரகம் அமர்ந்திருப்பதால் அடிவயிறு சம்பந்தப்பட்ட உபாதை ஏற்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியவுடன் உங்கள் உடல் உபாதை, பொருளாதார முன்னேற்றம், அரசியல் வாழ்வில்  ஓரளவு வெற்றி ஆகியவைகள் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில்துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com