எனது மகன் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து சிறிய விபத்தால் முதுகுத்தண்டில் பிரச்னை ஏற்பட்டு வேலையை இழந்தார். வைத்தியச்செலவும் நிறைய ஆனது. பின்னர் சுயதொழில் வைத்துக்கொடுத்து  அதிலும்  நிறைய கடனும் ஏற்பட்டு விட்டது. உடல்நிலை எப்போது பூரணமாக குணமாகும்? ஏதாவது தொழில் அல்லது உத்தியோகம் கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? சொந்தவீடு அமையுமா?- வாசகர், நகரி

உங்கள் மகனுக்கு துலா லக்னம், தனுசு ராசி. தற்சமயம் ஆறாம் வீட்டில் சுப பலத்துடன் அமர்ந்திருக்கும் ராகு பகவானின் தசை நடக்கிறது.

உங்கள் மகனுக்கு துலா லக்னம், தனுசு ராசி. தற்சமயம் ஆறாம் வீட்டில் சுப பலத்துடன் அமர்ந்திருக்கும் ராகு பகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானமும் ஓரளவுக்கு வரும். தகுதிக்கேற்ற உத்தியோகமும் கிடைக்கும். திருமணம் அமைதியான குடும்பம் ஆகியவை உண்டாகும். சொந்த வீடு பாக்கியமும் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com