எனக்கு அரசு வேலை கிடைக்குமா? முதல் திருமணம் விவாகரத்தாகிவிட்டது. இரண்டாவது திருமணம் நடைபெறுமா? சொந்தத்தில் பெண் அமையுமா? எப்போது அமையும்? பெற்றோர் ஆரோக்கியம் எவ்வாறிருக்கும்? பெற்றோரை கடைசிவரை கவனிப்பேனா?- வாசகர், பல்லடம்

உங்களுக்கு தொழில் ஸ்தானத்திலும் பாக்கிய ஸ்தானத்திலும் வலுவான கிரகங்கள் அமர்ந்திருப்பது சிறப்பு.

உங்களுக்கு தொழில் ஸ்தானத்திலும் பாக்கிய ஸ்தானத்திலும் வலுவான கிரகங்கள் அமர்ந்திருப்பது சிறப்பு. மேலும் அரசுக் கிரகங்களுக்கு வலுகுறைவாகவே உள்ளதால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது. மற்றபடி தனியார் துறையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து விடுவீர்கள். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த பெண் அமைந்து மறுமணம் நடக்கும். பெற்றோருக்கும் இறுதிவரை ஆதரவாக இருப்பீர்கள். பெற்றோர்களுக்கும் ஆயுள் ஆரோக்கியம் சீராகவே அமையும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com