என் மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன். திருமணம் எப்போது அமையும்? திருமண யோகம் உள்ளதா? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், சென்னை

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி. களத்திர தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதியுடன்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி. களத்திர தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்தும் லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்தும் இருப்பதால் படித்த உத்தியோகத்திலுள்ள பெண் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் அமைந்து திருமணம் கைகூடும். லக்னாதிபதி ஆட்சி பெற்று களத்திர புத்திர ஸ்தானாதிபதியைப் பார்வை செய்வதால் மணவாழ்க்கை, புத்திரபாக்கியம் இரண்டும் சீராக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com