எனது ஜாதகத்தில் பித்ரு தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம் போன்ற தோஷங்கள் உள்ளதா? ஏழரைச் சனி வரும் நேரமா? கண்டங்கள் ஏதாவது உள்ளதா? பூர்வீகவீடு விற்கப்படுமா? என் மனைவியின் பெயரில் வாங்கிய வீட்டை இடித்து புதிதாக வீடு கட்ட இயலுமா? - வாசகர், மயிலை

உங்களுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி. உங்களுக்கு தற்சமயம் அர்தாஷ்டம சனி (4 ஆம் வீட்டு சஞ்சாரம்) நடக்கிறது. பூர்வீக வீட்டை விற்காமல்

உங்களுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி. உங்களுக்கு தற்சமயம் அர்தாஷ்டம சனி (4 ஆம் வீட்டு சஞ்சாரம்) நடக்கிறது. பூர்வீக வீட்டை விற்காமல் ஒருவர் வாங்கும் வாய்ப்புள்ளது. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் உங்கள் மனைவியின் பெயரில் உள்ள வீட்டை இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு இடித்துக் கட்டுவீர்கள். மற்றபடி அவரின் தேக ஆரோக்கியம் சீராகவே தொடரும். உங்கள் மகனுக்கு பித்ரு தோஷம், களத்திர தோஷம் இரண்டும் இல்லை. அதேசமயம் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com