எனது மகன் சி.ஏ., படித்து முடிப்பாரா? அதற்கு எத்தனை வருடங்கள் ஆகும்? திருமணம், குடும்ப வாழ்க்கை எவ்வாறு அமையும்? சொந்தமாக தொழில் செய்யலாமா?- வாசகர், கோயம்புத்தூர்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கன்னி ராசி. கல்வி ஸ்தானத்தில் சுபக் கிரகங்கள் கூடியிருக்கிறார்கள்.

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கன்னி ராசி. கல்வி ஸ்தானத்தில் சுபக் கிரகங்கள் கூடியிருக்கிறார்கள். கல்வி ஸ்தானாதிபதி மற்றும் கல்விக்காரகர் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசையில் பாக்கியாதிபதியின் புக்தி இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் அவர் படிப்பை முடித்து விடுவார். வேலைக்குச் சென்று உயர் பதவிகளையும் பெறுவார். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். சொந்தத் தொழில் செய்யக்கூடாது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com