என் மகனுக்கு ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருப்பதாகச் சொன்னார்கள். வேண்டிய பரிகாரம் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? திருமண பாக்கியம் உள்ளதா? - வெங்கட்ராமன், தில்லி

உங்கள் மகனுக்கு மகர லக்னம், மகர ராசி. களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குருபகவானுடன்

உங்கள் மகனுக்கு மகர லக்னம், மகர ராசி. களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குருபகவானுடன் இணைந்து இருவரும் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். குடும்ப ஸ்தானத்தில் புத ஆதித்யர்கள் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். தற்சமயம் குரு மஹா தசையில் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு ஓராண்டுக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com