என் மகள் வெளியூரில் ஆடிட்டர் படிப்பு படிக்க ஆசைப்படுகிறார். அனுப்பலாமா? வேலை, திருமணம் எப்போது அமையும்? - வாசகி, தஞ்சாவூர்

உங்கள் மகளுக்கு கடக லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். கல்வி ஸ்தானாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் பாக்கியாதிபதியான

உங்கள் மகளுக்கு கடக லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். கல்வி ஸ்தானாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் பாக்கியாதிபதியான குருபகவானின் சாரத்தில் பாக்கியாதிபதியான குருபகவானுடன் இணைந்திருக்கிறார். கல்விக்காரகரான புதபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சூரியபகவானுடன் இணைந்து இருப்பதும் சிறப்பு. அவருக்கு ஆடிட்டர் படிப்பு ஏற்றதாக அமைகிறது. வெளியூர் சென்றும் படிக்கலாம். தொழில் ஸ்தானாதிபதி வலுவாக உள்ளதால் படிப்பு முடிந்தவுடன் நல்லவேலை கிடைத்து விடும். களத்திர ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் மணவாழ்க்கை சீராக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com