ஒரு பாவகத்தில் இருக்கும் கிரகம், எந்த வீட்டின் ஆதிபத்திய பலனைக் கொடுப்பார்கள்?எனக்கு சனிப்பெயர்ச்சி இரண்டாம் சுற்றா அல்லது மூன்றாம் சுற்றா? லக்னாதிபதி வலுவிழந்து ஆறுக்குடையவன் தசை நடந்தால் உடல்நிலை, பொருளாதாரம் பாதிக்கும் என்கிறார்கள். எனக்கு சனி தசை நடக்கிறது. சகோதரர்களுடன் வியாபாரம் தொடர்ந்து செய்யலாமா? தொழில் ஸ்தானம் எவ்வாறு உள்ளது? ஆரோக்கியம், ஆயுள் எவ்வாறு இருக்கும்?- வாசகர், ராசிபுரம்

உங்களுக்கு சிம்ம லக்னம், திருவோண நட்சத்திரம் முதல் பாதம், மகர ராசி. லக்னாதிபதியான சூரியபகவான் பன்னிரண்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில்

உங்களுக்கு சிம்ம லக்னம், திருவோண நட்சத்திரம் முதல் பாதம், மகர ராசி. லக்னாதிபதியான சூரியபகவான் பன்னிரண்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். சூரியபகவானுக்கும் குருபகவானுக்கும் சம்பந்தம் ஏற்படும் ஜாதகங்கள் வலுவானவை என்று கூறவேண்டும். அதோடு அவர்கள் இருவரும் லக்ன சுபர்களாக ஆகிவிட்டாலும் உறுதியாக நன்மைகளைச் செய்வார்கள் என்று கூறலாம். சூரியபகவான் ஆத்மகாரகராவார். உயிருக்கு தேஜûஸயும் உறுதியையும் தருகிறவர். சூரியபகவானின் அருளைப் பெற்றவர்கள் பரந்த முசத்தையும் ஒளிவீசும் காந்தி ஆகியவைகளைப் பெற்றிருப்பார் என்று கூறப்படுகிறது. பிதுர்காரகரான (தந்தையை நிர்ணயிப்பவர்) இவர், அரசாங்கம் அல்லது தலைமை நிர்வாகம், உடல்பலம், ஆத்ம பலம், உடலின் முதுகின் மேல் பாகம், இருதயம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பவராவார். ஆண்கள் ஜாதகத்தில் வலது கண்ணையும் பெண்கள் ஜாதகத்தில் இடது கண்ணையும் குறிப்பவர். அறிவாற்றலுக்கு காரகரான குருபகவான் தரும் குணம், பணம், பழக்கம், உடல்
வலிமை, இனிப்புச் சுவை, சட்டம், ரசாயனம், மருத்துவம், சமுதாயத்தில் பெயரும் புகழும் உண்டாவதற்கும் காரணமாகிறார். குருபகவான் தனகாரகராவார். சந்தான காரகர் (குழந்தைகளைப் பிரதிபலிப்பவர்) ராஜ்ய கிருபாகாரகர் (ஆளுபவர்களின் நன்மையை பெற்றுத் தருபவர்) தேவ கிருபாகாரகர் (கடவுளின் அருளைக் கொண்டு வந்து சேர்ப்பவர்) 
உங்களுக்கு சூரியபகவான் தன் ஆத்ம நண்பரான குருபகவானின் சாரத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்து இருப்பது முற்பிறவியில் சேர்த்து வைத்த புண்ணியம் என்று கூறலாம். அதனால் சூரியபகவான் மற்றும் குருபகவானின் காரகத்துவங்கள் நல்ல முறையில் வேலை செய்யும். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியாகி ஏழாம் வீடான களத்திர நட்பு ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மீன ராசியை அடைகிறார். சுக பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்பம் ஆகிய இரண்டாம் வீட்டிற்கும் பதினொன்றாம் வீடான லாபஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். ராசியில் ஆட்சி பெற்ற கிரகம் நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருப்பது சிறப்பல்ல. அதனால் அந்த பாவத்துக்குரிய காரகத்துவங்கள் பாதிக்கப்படும் என்று உணர வேண்டும். 
மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்திற்கும் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம் ) அமர்ந்து நவாம்சத்தில் தன்ஆத்ம நண்பரான சுக்கிரபகவானின் வீடான ரிஷப ராசியை அடைகிறார். பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்திற்கு அதிபதியான சந்திரபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதி ஆறாம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். இதனால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் என்று கூறவேண்டும். கேதுபகவான் ஆறாம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். இதனால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் என்று கூறவேண்டும். கேதுபகவான் ஆறாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். ராகுபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
பொதுவாக, ராசிக் கட்டத்தில் முதல் அல்லது கடைசி அம்சத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் பாவத்தில் அல்லது பாவகத்தில் முன்பின் ராசிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. அந்த முன்பின் ராசிகளில் பாவக் கட்டத்தில் அமர்ந்திருக்கும் கிரக நிலைகளுக்கு ஏற்ப மாற்றி பலன் சொல்ல வேண்டும். உங்களுக்கு பாவத்தில் லக்னாதிபதியான சூரியபகவான் பன்னிரண்டாம் வீட்டிலிருந்து லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் சந்திரபகவான் ஆறாம் வீட்டிலிருந்து ஐந்தாம் வீட்டிற்கும் செவ்வாய்பகவான் பத்தாம் வீட்டிலிருந்து ஒன்பதாம் வீட்டிற்கும் சுக்கிரபகவான் லக்னத்திலிருந்து பன்னிரண்டாம் வீட்டிற்கும் மாறி விடுகிறார்கள் என்று வருகிறது. அதனால் உங்கள் ஜாதகம் பாவக கட்டத்தின் அடிப்படையில் வலுவாக உள்ளது என்று கூற வேண்டும். குறிப்பாக, லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் சுபபலம் கூடப் பெறுகிறார்கள். இதனால் இறுதிவரை அடிப்படை ஆதாரங்களான உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றிற்கும் எந்த குறையும் உண்டாகாது. உங்களுக்கு தற்சமயம் ஏழரை நாட்டுச் சனி மூன்றாவது சுற்றாக நடக்கத் தொடங்கியுள்ளது. தற்சமயம் ஆட்சி பெற்ற சனிபகவானின் தசையில் புதபகவானின் புக்தி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடக்கும். இந்த ஆறாம் வீட்டுக்கு அதிபதியான சனிபகவான் லக்னாதிபதியை விட பலம் கூடியிருக்கிறாரா.. என்று பார்த்தால் மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் "இல்லை' என்றுதான் கூறவேண்டும். அதனால் சனிபகவானின் தசை சுபமான பலன்களையே கொடுக்கும் என்று கூறவேண்டும். மேலும் லக்னாதிபதி அதீத சுப பலம் பெற்றிருக்கிறார் என்பதும் ருசுவாகிறது.
உங்களுக்கு தொழில் ஸ்தானாதிபதி ராசியில் லக்னத்தில் இருந்தாலும் பாவத்தில் விரய ஸ்தானத்தை அடைகிறார். தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதி திக்பலம் பெற்றிருக்கிறார். பாவகத்திலும் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். அதனால் உடன்பிறந்தோருடன் சேர்ந்து வியாபாரம் செய்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆரோக்கிய ஸ்தானம் மற்றும் பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. மேலும் சனிபகவானும் (ஆயுள் காரகர், குருபகவான் (ஆயுள் ஸ்தானாதிபதி) சுக்கிரபகவான் (ஆயுள் ஸ்தானத்திற்கு எட்டாமதிபதி) பலமாக உள்ளதால் தீர்க்காயுள் உண்டு. படிப்படியாகப் பொருளாதாரமும் மேன்மையடையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com