நான் திருமணத்துக்குப்பிறகு உத்தியோகத்தை விட்டுவிட்டேன். வேலை கிடைக்குமா? அரசு வேலை உண்டா? லக்னத்தில் செவ்வாய் உள்ளது தோஷமா? 8 இல் சனி பாதிக்குமா? நடப்பு புதன் தசை எவ்வாறு இருக்கும்? - வாசகி, மதுரை

உங்களுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. லக்னத்தில் செவ்வாய் உள்ளது தோஷமில்லை. சனிபகவான் பாக்கியாதிபதி மற்றும் பாதகாதிபதியாக ஆவதால் பாக்கியாதிபத்யமே சிறப்பாகும்.

உங்களுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. லக்னத்தில் செவ்வாய் உள்ளது தோஷமில்லை. சனிபகவான் பாக்கியாதிபதி மற்றும் பாதகாதிபதியாக ஆவதால் பாக்கியாதிபத்யமே சிறப்பாகும். லக்னாதிபதி நீச்சம் பெற்று உச்சம் பெற்ற பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. இதனால் அவருக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ரயோகமும் உண்டாகிறது. தற்சமயம் உச்சம் பெற்ற புதபகவானின் தசை நடப்பதால் அரசு உத்தியோகம் அடுத்த ஆண்டு அமையும். குருபகவான் உச்சம் பெற்று களத்திரம், பாக்கியம் மற்றும் லாப ஸ்தானங்களைப் பார்வை செய்வது சிறப்பு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com