எனது பேத்தி எம்.சி.ஏ., படித்துள்ளார். லக்னாதிபதி 11 இல் உச்சம். சூரியன் உச்சம். சனி ஆட்சி. நடப்பு 7 இல் உடைய ராகு தசை தனது புக்தி. 7 இல் வீடு கொடுத்த செவ்வாய் 3 இல் நீசம். செவ்வாய் தசை 7 ஆண்டுகள் நன்றாக சென்றது. 7 இல் ராகுவும் 8 இல் தேய்பிறை சந்திரனும் இருப்பதால் 27 வயதுக்குப்பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார்கள். மாங்கல்ய தோஷம் ஏற்படும் என்கிறார்கள். இது உண்மையா?- வாசகர், சிவகாமி

உங்கள் பேத்திக்கு ரிஷப லக்னம். ராகுபகவானின் தசையில் சுயபுக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கும்.

உங்கள் பேத்திக்கு ரிஷப லக்னம். ராகுபகவானின் தசையில் சுயபுக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கும். ஏழாம் வீட்டில் ராகுபகவானும் அஷ்டம ஸ்தானத்தில் தேய்பிறை சந்திரபகவானும் இருப்பதால் திருமணத்திற்கு தாமதம் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றபடி ஏழாம் வீட்டிற்கும் ஏழாமதிபதிக்கும் ஏற்ற சமதோஷமுள்ள வரன் இந்த ஆண்டே அமைந்து திருமணம் கைகூடும். திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். சுகாதிபதி உச்சம் பெற்று இருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com