என் மகனுக்கு நீண்ட காலமாக பெண் பார்த்தும் அமைவில்லை. என் மகளுக்கும் வரன் அமையவில்லை. இருவருக்கும் எப்போது திருமணம் கைகூடும்? பரிகாரம் செய்துள்ளோம். மேலும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- பட்டாபிராமன், சென்னை

களத்திர ஸ்தானமும் களத்திர ஸ்தானாதிபதியும் அசுபக் கிரகங்களால் சூழப்பட்டுள்ளதால் திருமணம் தாமதமாகிறது.

களத்திர ஸ்தானமும் களத்திர ஸ்தானாதிபதியும் அசுபக் கிரகங்களால் சூழப்பட்டுள்ளதால் திருமணம் தாமதமாகிறது. மற்றபடி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். கஜகேசரி யோகம், தர்மகர்மாதிபதி யோகம் புத ஆதித்ய யோகம் ஆகிய யோகங்கள் உள்ளன. அவருக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். இருவருக்குமாக பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com