பி.இ., படித்துவரும் என் மகனுக்கு படிப்பு முடிந்ததும் பொருத்தமான வேலை அமையுமா? அரசு வேலை அமையுமா? எந்த வயதில் திருமணம் நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகி, ஈரோடு

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், துலா ராசி. லக்னாதிபதி களத்திர ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகளுடன் இணைந்திருப்பது சிறப்பு.

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், துலா ராசி. லக்னாதிபதி களத்திர ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகளுடன் இணைந்திருப்பது சிறப்பு. அவருக்கு படிப்பு முடிந்தவுடன் மேற்படிப்பு படிக்கவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.  அதனால் அவரை படிப்புக்குத் தகுந்த மேற்படிப்பைப் படிக்கச் செய்யவும். மேற்படிப்பு முடிந்ததும் படித்த துறையிலேயே வேலை கிடைக்கும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு உங்கள் குடும்பக் கடன்கள் படிப்படியாகக் குறையும். இன்னும் ஏழாண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com