உங்களுக்கு மகர லக்னம். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்பகவான் திக்பலம் பெற்றிருக்கிறார். லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் லாப ஸ்தானத்தில் இணைந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். முதல்தர அரசு கிரகமான சூரியபகவான் பூர்வபுண்ணியாதிபதியான சுக்கிரபகவானுடன் அயன ஸ்தானத்தில் இணைந்து ஆறாம் வீடான உத்தியோக ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் மற்றொரு அரசு கிரகமான சனிபகவானின் தசை நடக்கிறது. அதனால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், கடக ராசி. பித்ருக்காரகரான சூரியபகவான் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்று உச்சம் பெற்ற பாக்கியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். இதனால் தந்தையான உங்களுக்கு மேன்மை உண்டாகும் என்று உறுதியாகக் கூறலாம். உங்கள் குடும்பத்திற்கு எதிர்காலம் சிறப்பாக அமையும்.