எனது மகனின் படிப்பு, உத்தியோகம், ஆயுள் எப்படி இருக்கும்? பித்ரு தோஷம் உள்ளதா? எங்கள் வழக்கப்படி திவசம் கொடுப்பது இல்லை. இனி, ஐயர் மூலம் கொடுக்கலாமா? எனது கணவரின் பூர்வீகச் சொத்து எனது மகனுக்கு கிடைக்குமா? - வாசகி, கடலூர்

உங்கள் மகனுக்கு கல்வி ஸ்தானாதிபதி சுயசாரத்தில் பலமாக அமர்ந்திருப்பதால் கல்வியில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவார்.

உங்கள் மகனுக்கு கல்வி ஸ்தானாதிபதி சுயசாரத்தில் பலமாக அமர்ந்திருப்பதால் கல்வியில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவார். தொழில் ஸ்தானாதிபதி லக்ன சுபர்களுடன் இணைந்திருப்பதால் நல்ல உத்தியோகமும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். பூர்வீகச் சொத்து கிடைக்கும். மற்றபடி பித்ருசாபம் இல்லை. பித்ருதோஷம் உள்ளதால் உங்கள் குலதெய்வத்தை வருடமொருமுறை தொடர்ந்து வழிபட்டு வரவும். உங்கள் மகனை பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரச்சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com