என் அண்ணன் மகன் ஐடிஐயில் நல்ல வேலை பார்க்கிறார். எப்போது திருமணம் நடைபெறும்? வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? வீடு கட்டும் பாக்கியம் உள்ளதா?- வாசகர், குரோம்பேட்டை

உங்கள் அண்ணன் மகனுக்கு கடக லக்னம், கடக ராசி. பொதுவாக, லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றிருந்தால் அவருக்கு அனைத்து அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும் என்று கூறுவார்கள்.

உங்கள் அண்ணன் மகனுக்கு கடக லக்னம், கடக ராசி. பொதுவாக, லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றிருந்தால் அவருக்கு அனைத்து அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும் என்று கூறுவார்கள். அதோடு பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று லக்னத்தையும் லக்னாதிபதியையும் பார்வை செய்வதும் லக்னத்திற்கும் லக்னாதிபதிக்கும் வலுவூட்டுகிறது என்று கூற வேண்டும். அதோடு களத்திர ஸ்தானாதிபதியும் லக்னாதிபதியும் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். களத்திர ஸ்தானாதிபதியை குருபகவானும் பார்வை செய்கிறார். அதனால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். சொந்த வீடு பாக்கியமும் உண்டாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com