எனது மகனின் ஜாதகப்படி சொந்த வீடு அமையும் பாக்கியம் எனக்கு உண்டா? ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்தேன். அரசுப்பணி கிடைக்குமா? வேறு பரிகாரம் செய்ய வேண்டுமா?- வாசகர், புதுக்கோட்டை

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம். பித்ருகாரகரான சூரியபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம். பித்ருகாரகரான சூரியபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று லாபாதிபதி, லக்னாதிபதி மற்றும் தைரிய ஸ்தானாதிபதிகளால் பார்க்கப் படுகிறார். தற்சமயம் லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் சுயபுக்தி இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடக்கும். அதற்குப்பிறகு உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சொந்த வீடு அமையும். உங்களுக்கு விருச்சிக லக்னம், தனுசு ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற குருபகவானின் தசை நடக்கிறது. தொழில் ஸ்தானத்தில் சூரியபகவான் ஆட்சி பெற்றிருப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு உத்தியோகம் கிடைக்கும். மற்றபடி பித்ருதோஷமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com