எனது மூத்த மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி நல்லபடியாக இருக்கிறார்கள். அடுத்த இரண்டு மகன்களுக்கு பெண் தேடியதில் கடைசி மகனுக்கு பெண் அமைந்துவிட்டது. மூன்றாவது மகனுக்கு இன்னும் பெண் அமையவில்லை. பெரியவனுக்கு அமையாமல் இளையவனுக்கு திருமணம் செய்யவேண்டாம் என்று இருக்கிறோம். எப்போது திருமணம் கைகூடும்? - வாசகர், பொள்ளாச்சி

உங்கள் மகனுக்கு மீன லக்னம். லக்னத்தில் லக்னாதிபதி அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

உங்கள் மகனுக்கு மீன லக்னம். லக்னத்தில் லக்னாதிபதி அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். புத்திர ஸ்தானாதிபதியான சந்திரபகவான் துலாம் ராசியில் அமர்ந்து நவாம்சத்தில் குருபகவானின் ராசியான தனுசு ராசியை அடைகிறார். அவருக்கு தற்சமயம் ஏழரை நாட்டுச் சனியும் முடிவடைந்துள்ளது. அதோடு தற்சமயம் லாபாதிபதியின் தசையில் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் ராகுபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com