பெங்களூருவில் பணிபுரிந்து வரும் என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகி, கோயம்புத்தூர்
By DIN | Published on : 19th May 2017 09:43 AM | அ+அ அ- |
உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் தர்மகர்மாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. சுகஸ்தானம் வலுவாக அமைந்திருப்பது சிறப்பு. களத்திர ஸ்தானாதிபதியும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சம அந்தஸ்தில் வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.