எனது மகளுக்கு வயது 21. பி.இ., முடித்துள்ளார். எப்போது வேலை கிடைக்கும்? திருமணத்திற்கு பெண் கேட்டு வருகிறார்கள். தற்போது திருமணம் செய்யலாமா? திருமணத்திற்குப்பின்னர் வேலை செய்யும் யோகம் உண்டா? புத்திர பாக்கியம் எவ்வாறு உள்ளது?- வாசகர், கோவில்பட்டி

லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தொழில் ஸ்தானாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்று தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப்படுகிறார்

லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தொழில் ஸ்தானாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்று தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப்படுகிறார். புதஆதித்ய யோகம், சச மஹாயோகம், நீச்சபங்க ராஜயோகம், சந்திர மங்கள யோகம், குருசந்திர யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இந்த ஆண்டு படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். புத்திர பாக்கியமும் சீராக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com