டிப்ளமோ படித்துள்ள என் மகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது எத்திசையில் கிடைக்கும்? ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கிறதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகர், விருதுநகர்

உங்கள் மகனுக்கு தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்று பாக்கியாதிபதியுடன் இணைந்து இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது.

உங்கள் மகனுக்கு தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்று பாக்கியாதிபதியுடன் இணைந்து இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. லக்னாதிபதி லாபஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவது சிறப்பு. அதனால் தனியார் துறையில் சிறப்பான வளர்ச்சி அடைவார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் தென்கிழக்கு திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com