எனக்கு வேலை எப்படி அமையும்? அரசு வேலை கிடைக்குமா? எந்த தசையில் எக்காலத்தில் வீடு அமையும்? - பிரகாஷ், சீர்காழி

உங்களுக்கு துலாம் லக்னம், ரிஷப ராசி. லக்னத்திற்கும் ராசிக்கும் சுக்கிரபகவானே அதிபதியாக வருவது சிறப்பு. சுக்கிரபகவான் லக்னத்திற்கு பதினொன்றாம் வீட்டிலும் ராசிக்கு நான்காம் வீட்டிலும் இருக்கிறார்.

உங்களுக்கு துலாம் லக்னம், ரிஷப ராசி. லக்னத்திற்கும் ராசிக்கும் சுக்கிரபகவானே அதிபதியாக வருவது சிறப்பு. சுக்கிரபகவான் லக்னத்திற்கு பதினொன்றாம் வீட்டிலும் ராசிக்கு நான்காம் வீட்டிலும் இருக்கிறார். சுக மற்றும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் எட்டாம் வீட்டில் உச்சம் பெற்ற சந்திரபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. பாக்கியாதிபதியான புதபகவான் லக்னத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் உத்தியோகத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டி விடுவீர்கள். அரசு அல்லது அரசு சம்பந்த்பபட்ட வேலையும் கிடைக்கும். 2019 -ஆம் ஆண்டு தொடங்கியவுடன் சொந்த வீடு கட்டும் வாய்ப்பு கிடைக்கும். வடக்கு, மேற்கு திசையை பார்த்த மனை நன்மை தரும். இன்னும் நான்காண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் சனிபகவானின் தசையிலிருந்து படிப்படியான வளர்ச்சியை அடைந்து விடுவீர்கள். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com