என் மகனுக்கு நிரந்தர தொழில், திருமணம் எப்போது கைகூடும்? - வாசகர், மேட்டுப்பாளையம்

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். லக்னாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார்கள்.

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். லக்னாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார்கள். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பாக்கியாதிபதியான குருபகவான், லக்னம், லாபம் மற்றும் தைரிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார்கள். தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுயபுக்தி அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடக்கும். ராகுபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து தசையை நடத்துகிறார். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் அவருக்கு நிரந்தர உத்தியோகம், திருமணம் இரண்டும் அமைந்துவிடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com