அரசு  பள்ளி ஆசிரியராக வேலைப்பார்க்கும் என் மகளின் இந்த இரு ஜாதகங்களில் எது சரியானது? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? இருண்ட அவரது வாழ்க்கையில் ஒளிவீசுமா? - வாசகி

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம் நான்காம் பாதம். லக்னம் மற்றும் அயன ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிருக்கிறார்.

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம் நான்காம் பாதம். லக்னம் மற்றும் அயன ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் குருபகவானும் புத்திர ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்திலும் அமர்ந்து பரஸ்பரம் பார்வை செய்து கொள்வது சிறப்பு. சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் அயன ஸ்தானத்தில் மறைவு பெற்று களத்திர ஸ்தானாதிபதியுடன் அமர்ந்திருக்கிறார். நவாம்சத்தில் மூன்று திரிகோணாதிபதிகளும் களத்திர ஸ்தானாதிபதியும் பலமாக அமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com